ta The Nectar of Thiruppugazh: 2013

Saturday, 16 November 2013

85. போதகம் தரு

ராகம்: பந்துவராளி தாளம்: 1½+ 2 + 2 + 1½ + 2
போத கந்தரு கோவேந மோநம
நீதி தங்கிய தேவாந மோநம
பூத லந்தனை யாள்வாய்ந மோநம பணியாவும்
பூணு கின்றபி ரானேந மோநம
வேடர் தங்கொடி மாலாந மோநம
போத வன்புகழ் ஸாமீந மோநமஅரிதான
வேத மந்திர ரூபாந மோநம
ஞான பண்டித நாதாந மோநம
வீர கண்டைகொள் தாளாந மோநம அழகான
மேனி தங்கிய வேளேந மோநம
வான பைந்தொடி வாழ்வேந மோநம
வீறு கொண்டவி சாகாந மோநம அருள்தாராய்

Wednesday, 7 August 2013

84. புடவிக்கு அணிதுகில்

ராகம்: சாருகேசி தாளம்: ஆதி 2 களை
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
புநிதச் சததள நிலைகொள்ச யம்புச்சதுர்வேதன்
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
புதகர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
றிடவிற் பனமொழி யுரைசெய் குழந்தைக்குருநாதா

Friday, 12 July 2013

83. பாரியான கொடை

ராகம்: பாகேஸ்வரி தாளம்: 1½ + 1½ + 1 + 1½ + 2
பாரியான கொடைக்கொண்ட லேதிரு
வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு
பாருமேறு புகழ்க்கொண்ட நாயகஅபிராம
பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள்
சீலஞால விளக்கின்ப சீவக
பாகசாத னவுத்துங்க மானதஎனவோதிச்
சீரதாக எடுத்தொன்று மாகவி
பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை
சீறுவார்க டையிற்சென்று தாமயர்வுறவீணே
சேயபாவ கையைக்கொண்டு போயறி
யாமலேக மரிற்சிந்து வார்சிலர்
சேயனார்ம னதிற்சிந்தி யாரருகுறலாமோ

The Story of Paari

Paari giving his chariot to the creeper

Pari Vallal, the legendary 9CE Tamil Chola king was one of the 7 patron kings ("Vallal") who supported poets and scholars. After the Dwaraka deluge, a group of refugees are believed to have reached Kashmir, while the other group set southwards. King Paari was believed to have reached Tamil Nadu as a refugee from Dwaraka, following the great sage Agasthya. He is said to have ruled the Parambu Nadu.

One day Paari was going around the hill in his chariot. Suddenly a strong wind blew and the king noticed a lone Jasmine creeper which was violently tossed in the wind. He asked his charioteer to move the chariot close to the creeper. He gently bent down and took the creeper wrapping it carefully around the chariot. He set his horses to roam freely and walked to his palace along with his charioteer.

Thiruppugazhs in which the reference appears:

Paariyana kodai

Wednesday, 10 July 2013

82. பஞ்ச பாதகன்

ராகம்: ஹுசேநி தாளம்: அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழைபவுஷாசை
பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகுசதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுகழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள்புரிவாயே

Tuesday, 9 July 2013

81. பகர்தற்கரிதான செந்தமிழ்

ராகம்: வசந்தா தாளம்: 3 + 1½ +2
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயில்பல காவி யங்களையுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படிவிரகாலே
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல்மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள்புரிவாயே

Monday, 8 July 2013

80. திமிர உததி

ராகம்: பைரவி தாளம்: திச்ர ஏகம் (எடுப்பு 1 இடம்)
திமிர வுததி யனைய நரக
செனன மதனில்விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியுமணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும்வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும்வரவேணும்

Saturday, 6 July 2013

79. திடமிலி சற்குணமிலி

ராகம்: பந்துவராளி தாளம்: கண்ட சாபு (2½)
திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க்கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற்றழிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப்பெறவேணும்

Friday, 5 July 2013

78. தலைவலி மருத்தீடு

ராகம்: செஞ்சுருட்டி தாளம்: சதுஸ்ர த்ருவம் கண்ட நடை
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும்விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்களிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசைவரவேணும்

Thursday, 4 July 2013

77. தமரும் அமரும்

ராகம்: ஹமீர் கல்யாணி தாளம்: ஆதி திச்ர நடை (12)
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளையஎறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவுமிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவுதரவேணும்

76. தகர நறுமலர்

ராகம்: பூர்வி கல்யாணி தாளம்: அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே
தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுனதிருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவரஇசைவாயே

Saturday, 22 June 2013

75. ஞானம் கொள்

ராகம்: பிலஹரி தாளம்: அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாயவரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவிவிளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகியிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாடஅருள்தாராய்

Friday, 21 June 2013

74. சுருதிமுடி மோனம்

ராகம்: நாட்டைகுறிஞ்சி தாளம்: சதுச்ர த்ருவம் கண்ட நடை
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுதலொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடையஉணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல்வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉனதருள்தாராய்

Sunday, 16 June 2013

73. சீறலசடன் வினைகாரன்

ராகம்: ஹம்சனாதம் தாளம்: ஆதி
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடிபவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலிஎவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியுனடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள்புரிவாயே

Saturday, 15 June 2013

72. சீயுதிரம்

ராகம்: வலசி தாளம்: 1½ + 1 + 1½
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்துநிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்றுமடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்புபுரிவாயே

Thursday, 13 June 2013

71. சிவனார் மனம்

ராகம்: ஜோன்புரி/ சங்கராபரணம் தாளம்: கண்டசாபு(2½) 1+ 1½
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய்குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின்
செயலேவி ரும்பியுளம்நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலெனவரவேணும்

Friday, 31 May 2013

70. குருதி மலசலம்

ராகம்: கேதாரகௌளை தாளம்: மிச்ர சாபு (3½) 2+1½
குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளியுடலூடே
குடிக ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதையடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில்மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபதமருள்வாயே

Tuesday, 28 May 2013

69. குரம்பை மலசலம்

ராகம்: கௌளை தாளம்: ஆதி (2 களை)
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபலகசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
இடும்ப ரொடுவழி யிணையிலர் கசடர்கள்
குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணைவிறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்த ரிகமுக சரவண பதமொடுமயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமு மிருமலர் சரணமுமறவேனே

Thursday, 23 May 2013

68. கருவினுருவாகி வந்து

ராகம்: விஜயநாகரி தாளம்: அங்க தாளம்(5½) 2½ + 1½ + 1½ (எடுப்பு ½ தள்ளி)
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்துமதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்துமிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அனுதினமும் நாண மின்றிஅழிவேனோ

Wednesday, 22 May 2013

How Shiva mediated between Sundarar and Paravai Nachiyar

Sundara (Murthi) Nayanar who lived in the 8th century was a great devotee of Lord Siva. He is one of the four great Tamil religious Teachers ('nalvar'): Sambandar, Appar(thirunavukkarasar), Sundarar, Manikkavachagar. Except for Manikka-Vachaagar, the oldest of the four, others lived during the struggle between the Jains and the Saivites.

Sundarar is also one of the Sixty-three Nayanars whose lives were recorded in the "Periya Puranam," (The Great Epic) by Sekkilaar, a poet and the chief minister in the court of the Chola King, Kulothunga Chola II.

In the village of Tirunavalur, a temple priest called Sadayanar and his wife Isaignani, both staunch Shiva devotees, had a son Nambi Arurar. The ruler of the local kingdom (Thirumunaipadi-Nadu), Narasingamunaiarayar a chieftain, adopted him and brought up as his own son, and called him Sundarar.

Sundara Murthi Nayanar sang the glories of Lord Siva at all the sacred places that he visited. These hymns are called Thevaaram. The hymns sung by Sundarar, Appar, and Thiru-jnana-sambanthar are called Thevaaram. The hymns of Manikkavasagar are called Thiruvaasagam.

Sunday, 19 May 2013

67. கருப்புவிலில்

ராகம்: சிந்து பைரவி
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய்மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில்மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
உனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிருஅருளாலே
உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையுமுடையேனோ

Thursday, 16 May 2013

66. கரிய பெரிய

ராகம்: மோஹனம் தாளம்: ஆதி திச்ர நடை (12)
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடியதிரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகியெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவியணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள்தரவேணும்

Wednesday, 15 May 2013

65. கதியை விலக்கு

ராகம்: தேஷ் தாளம்: அங்க தாளம் (5½) 2+1½ +2
கதியைவி லக்கு மாதர்கள் புதியஇ ரத்ன பூஷண
கனதன வெற்பு மேல்மிகுமயலான
கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய
கனதன மொத்த மேனியுமுகமாறும்
அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்
அரவபி டித்த தோகையுமுலகேழும்
அதிரவ ரற்று கோழியும் அடியவர்வ ழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமுமறவேனே

Friday, 10 May 2013

சீர்பாத வகுப்பு

ராகம்: காவடிச்சிந்து தாளம்:   கண்ட சாபு (2½)
உததி இடை கடவுமர கதவருண குலதுரக
உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள்
உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை
யுக முடிவில் இருள் அகலஒரு சோதி வீசுவதும்
உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவனசிவயோக சாதனையில்
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியதிதமதூடு நாடுவதும்
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
முழலுவன பரசமயகலையார வாரமற
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவரநுபூதி யானதுவும்
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
வுருவுடைய மலினபவசலராசி யேறவிடும்
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
உறைவதுவு முலைவிலதுமடியேன் மனோரதமும்
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
இமகிரண தருணவுடுபதிசேர் சடாமவுலி
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
இமையமயில் தழுவுமொருதிருமார்பி லாடுவதும்
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
றெரிபுகுத வுரகர்பதிஅபிஷேக மாயிரமும்
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
இளையதளர் நடைபழகிவிளையாடல் கூருவதும்
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகடதடபார மேருவுடன்
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில்வலமாக வோடுவதும்
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
யிரலைமரை யிரவுபகல்இரைதேர்க டாடவியில்
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
இனிதுபயில் சிறுமிவளர்புனமீ துலாவுவதும்
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழலவருகால தூதர்கெட
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை
முடியவரு வதுமடியர்பகைகோடி சாடுவதும்
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதளமுழுநீல தீவரமும்
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
முநிவர்கரு தரியதவமுயல்வார் தபோபலமும்
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
முககுமர சரணமெனஅருள்பாடி யாடிமிக
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவெனஅறைகூவி யாளுவதும்
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
துலகறிய மழலைமொழிகொடுபாடும் ஆசுகவி
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
முகுளபரி மளநிகிலகவிமாலை சூடுவதும்
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொருவிசையாதி மூலமென
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவுகுறளாகி மாபலியை
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிருபதுவாகு பூதரமும்
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
மருகனிசி சரர்தளமும் வருதார காசுரனும்
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும்வடிவேல னீலகிரி
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரியுமையாள்த்ரி சூலதரி
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
வநிதையபி நவையநகையபிராம நாயகிதன்
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
மறையின்முதல் நடுமுடிவின்மணநாறு சீறடியே

Learn the Song


Paraphrase

உததி இடை கடவும் மரகத அருண குல துரக உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயம் என ( udhadhi idai kadavum marakatha varuNa kula thuraga upalaLitha kanaka ratha sathakOti sooriyargaL udhayam ena )
(O Muruga! Your Feet) Which rises from the emerald green ocean like the dazzling light from thousand millions of suns driven by beautiful golden chariot drawn by seven fast, multi-hued and pedigreed horses; குல துரக – உயர்ந்த ஜாதியைச் சார்ந்த குதிரைகள் பூட்டப்பட்ட; உப லளித கனக ரத – வனப்பு வாய்ந்த, பொன் மயமான தேரில் ,

அதிக வித கலப கக மயிலின் மிசை யுக முடிவில் இருள் அகல ஒரு சோதி வீசுவதும் ( adhikavidha kalaba gaga mayilin misai uga mudivin iruL agala orujOthi veesuvadhum )
at the end of the yuga when You come riding on top of a multi-hued peacock and emitting a bright light so that the darkness disappears; மரகத ( maragatha ) : emerald; அருண (aruNa ): red; உததி (uthadhi ): ocean; கனக ரத (kanaga ratha ): golden chariot; குல துரக (kula turaga ): horses of good breed; அதிக வித கலப கக மயிலின் மிசை ( athiga vitha kalabha gaga mayilin misai): on a peacock that has indescribably beautiful and multiply hued plumes; கலப – தோகை; கக(ம்) – பறவை;

உடலும் உடல் உயிரும் நிலைபெறுதல் பொருள் என உலகம் ஒருவி வரும் மநுபவன சிவ யோக சாதனையில் ஒழுகும் அவர் (udalum udal uyirum nilai peRudhal poruL ena ulagam oruvi varum manubavana sivayOga saadhanaiyil ozhugum avar )
Believing that the ultimate objective should be to attain redemption while there is life permeating the body (Sadeha-mukti which is mukti along with the body (i.e., there is realization at the time of departure from the body), the yogis practice Shiva Yoga which is the house of mantras; உலகம் ஒருவி( ulagam oruvi ): after ridding the attachment to the world; மநு பவன(manubavana): மந்திரங்களுக்கு இருப்பிடமான, சிவ யோக சாதனையில் (sivayoga sAthanaiyil): சிவ யோக பயிற்சியில்

பிறிது பரவசம் அழிய விழி செருகி உணர்வு விழி கொடு நியதி தமது ஊடு நாடுவதும் ( piRidhu paravasam azhiya vizhi serugi uNarvu vizhi kodu niyadhi thamadhoodu naaduvadhum)
learning to abide in the Self, with their attention fixed between the eyes and the thoughts centered on the heart(seat of emotions) as prescribed by rules and seek (Your feet);

உரு எனவும் அரு எனவும் உளது எனவும் இலது எனவும் உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற ( uru enavum aru enavum uLadhenavum iladhenavum uzhaluvana parasamaya kalai aaravaaram aRa)
They go beyond the theologists of various religions, who argue : 'it is there, it is not there, it is with form, it is not with form'

உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ உளபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும் ( urai avizha uNarvavizha uLam avizha uyir avizha uLapadiyai uNarum avar anuboothi aanadhuvum )
and they (Thy feet) stay in the Hearts of Jnanis who are totally absorbed in the boundless super consciousness called Shiva and become speechless, expand their limited minds and bodies and become one with the Universal Truth;

உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதயம் உருவுடைய மலினம் பவம் சல ராசி ஏற விடும் உறுபுணையும் ( uRavumuRai manaivi magavu enum alaiyil enadhidhaya uruvudaiya malina bava jalaraasi ERavidum uRupuNaiyum)
(Your twin feet)are the strong raft in the sea of Samsara into which I can get in and escape the waves of attachment to wife, family and children; பவ சல ராசி (bava jala raasi): the sea of birth, the sea of samsara; மலினம் ( malinam): sins; உறுபுணை (uRupuNai ): strong raft; பவம் ( bavam): state of being, existence, birth; பவ சல ராசி ஏறவிடும் – பிறவிக் கடலில் இருந்து ஏறச் செய்யும்;

அறிமுகமும் உயர் அமரர் மணி முடியில் உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும் (aRimugamum uyar amarar maNimudiyil uRaivadhuvum ulaiviladhum adiyEn manOrathamum) : They are the gateway to the world of knowledge; they reside in the crowns of the righteous celestials; they are indestructible and are my goal; உலைவிலதும் (ulaiviladhum ) : indestructible;

இதழி வெகுமுக ககனநதி அறுகு தறுகண் அரவு இம கிரண தருண உடுபதி சேர் சடா மவுலி இறை மகிழ ( idhazhi vegu muga gagana nadhi aRugu thaRukaN aravu imakiraNa tharuNa udu pathi sEr jadaamavuli iRai magizha )
Gladdening the heart of Shiva who wears the laburnum flower, the multiple branched river Ganges, the grass (arugam pul), the snake vasuki and the cool moon on his head; வெகு முக ககன நதி(vegu muga gagana nadhi ): the river in the sky with several branches or tributaries; உடுபதி(udupathi): the moon, the leader of all the stars; இமகிரண தருண உடுபதி (imakiraNa tharuNa udu pathi ) : the youthful moon with cool rays; தருண (taruNa): young; தறுகண் அரவு (thaRukaN aravu ): fearless and brave snake (Vasuki);

உடை மணியோடு அணி சகல மணி கலென இமைய மயில் தழுவும் ஒரு திரு மார்பில் ஆடுவதும் ( udaimaNiyodu aNi sakalamaNi galena imaiyamayil thazhuvum oru thirumaarbil aaduvadhum )
the peacock of Himayalas, who is the consort of Siva, wearing Indian labubnum, Ganga, crescent moon in His matted locks' clings to the Lord's chests on which dances Muruga's feet; இமைய மயில் (imaiya mayil ): the peacock of the Himalayas, Parvati;

இமையவர்கள் நகரில் இறை குடி புகுத நிருதர் வயிறு எரி புகுத உரகர்பதி அபிஷேகம் ஆயிரமும் எழுபிலமும் நெறுநெறென முறிய வடகுவடு இடிய இளைய தளர் நடைபழகி விளையாடல் கூருவதும்( imaiyavargaL nagaril iRai kudipugudha nirudhar vayiRu eri pugudha uragarpathi abishEkam aayiramum ezhupilamum neRu neRena muRiya vadakuvadu idiya iLaiya thaLar nadai pazhagi viLaiyaadal kooruvadhum )
As thy young feet toddles, Indra, the celestial chief regains entry to his home land, the asuras' stomachs experience burning, the thousand hoods of Adisesha and the seven patalas crush and the peaks of Meru mountain get pulverized;

இமையவர்கள் நகரில் இறை குடி புகுத (imaiyavargaL nagaril iRai kudipugudha ) : For Indra to live in Indraloka; இமையவர்கள் ( imaiyavargaL ) : those who do not blink, Devas; உரகர்பதி (uragarpathi): king of serpents, Adisesha; வடகுவடு (vadakuvadu ): the mountain in the North; the Meru mountain; பிலம்(bilam): abyss, பாதாளம்;

இனிய கனி கடலை பயறு ஒடியல் பொரி அமுது செயும் இலகு வெகுகட விகட தட பார மேருவுடன் இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும் (iniya kani kadalai payaRu odiyal pori amudhu seyum ilagu vegu kata vikata thada baara mEruvudan igali mudhu thigiri giri neriya vaLai kadal kadhaRa ezhu buviyai oru nodiyil valamaaga Oduvadhum)
Competing with meru-like Ganesha who consumes sweet fruits, pulses like kadalai and payaru, palm and puffed rice Thy feet go round the seven worlds in a trice such that the old chakravala mountain crumbles and the sea that circles round the earth wails;

எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை இரலை மரை இரவு பகல் இரை தேர் கடாடவியில் எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய இனிது பயில் சிறுமி வளர் புனம் மீது உலாவுவதும் (eRuzhi puli karadi ari kari kadamai varudai uzhai iralai marai iravu pagal irai thEr kadaataviyil eyinar idum idhaN adhanil iLagu thinai kiLi kadiya inidhu payil siRumi vaLar punameedhu ulaavuvadhum)
Thy feet walk on the thinai field where the young, hunter girl Valli would sit on the high platform (இதண்) and chase away wild boars, lions, cows, goats, elephants, multitude kinds of deers from eating the lush thinai, singing alolam melodiously; எறுழி(eRuzhi ): wild boar; அரி(ari ) lion; கடமை (kadamai ): wild cow; வருடை (varudai): mountain goats; உழை (uzhai ): deer; இரலை, மரை (iralai, marai ) : kinds of deer; எயினர் ( eyinar): tribe of hunters living in forests; இனிது பயில் ( inidhu payil ): singing sweetly (alolam); புனம்(punam ): thinai (a kind of millet) field;

முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட முடுகுவதும் அருள் நெறியில் உதவுவதும் நினையுமவை முடிய வருவதும் அடியர் பகைகோடி சாடுவதும் ( mudhala vinai mudivil irupiRai eyiRu kayiRu kodu mudhu vadavai vizhi suzhala varu kaala dhootharkeda muduguvadhum aruL neRiyil udhavuvadhum ninaiyum avai mudiya varuvadhum adiyar pagai kOti saaduvadhum
Thy feet chase away Yama's messengers, who arrive with their teeth curved like the crescent moon and their eyes spinning like the vadavamukhagni fire and fling the noose (pasa kayiru to carry away the life which ends when the effects of Karma that is the cause of birth ends; thy feet help people to lead divine lives, make the thoughts trnaslate to action and bear fruition, and destroy the enemies (both internal enemies like greed, etc ., and external enemies); முதலவினை முடிவில் (mudhala vinai mudivil) : at the end of life when the karma which causes birth ends; இரு பிறை எயிறு( irupiRai eyiRu) : teeth curved like the crescent moon; முது வடவை விழி சுழல (mudhu vadavai vizhi suzhala) : eyes twirling like the old vadavamukhagni (fire under the water at the end of the yuga); கால தூதர் கெட (kaala dhoothar keda ) : driving away the messengers of Yama;

மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது குறு முறியும் மலர் வகுள தள முழு நீல தீவரமும் முருகு கமழ்வதும் ( mogumogena madhubam mural kuravu viLavinadhu kuRu muRiyum malar vakuLa dhaLa muzhuneela theevaramum murugu kamazhvadhum ) :
Thy feet is the place where the siddhas buzz like bees; thy feet is fragrant with the aromas from kura flower, the young leaves of viLa tree (wood apple), young shoots and flowers of vakuLa tree (English: Bullet wood), karungkuvalai and sengkuvalai flowers; விளவினது குறு முறியும் (viLavinadhu kuRu muRiyum) : young shoots of viLa tree, முழு நீலம், தீவரமும் (muzhuneela theevaramum ) : karungkuvalai and sengkuvalai flowers;

அகில முதன்மை தருவதும் விரத முநிவர் கருத அரிய தவம் முயல்வார் தபோ பலமும் (akila mudhanmai tharuvadhum viratha munivar karudha ariya thava muyalvaar thapO balamum ) :
Thy feet confers the top position in the world and liberation (mukti) that is out of reach of even the sages who peform penances and meditation;

முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக குமர சரணம் என அருள் பாடி ஆடி மிக மொழி குழுற அழுது தொழுது உருகுமவர் விழி அருவி முழுகுவதும் வருக என அறை கூவி ஆளுவதும் (muruga saravaNa magaLir aRuvar mulai nugarum aRumuga kumara saraNam ena aruLpaadi aadi miga mozhi kuzhaRa amudhu thozhudhu urugumavar vizhi aruvi muzhuguvadhum varugavena aRaikoovi aaLuvadhum)
They call out 'welcome' assuring protection to devotees who cry out 'Muruga, Saravana, Arumuga who suckles the breasts of the six Krittika maidens, Kumara, give me your refuge' with quivering voices and worship you;

முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுதும் உலகறிய மழலை மொழி கொடு பாடும் ஆசு கவி முதல மொழிவன நிபுண மதுபம் முகர் இத மவுன முகுள பரிமள நிகில கவி மாலை சூடுவதும் ( mudiya vazhi vazhi adimai enum urimai adimai muzhudhum ulagaRiya mazhalai mozhi kodu paadum aasu kavi mudhala mozhivana nipuNa madhupa mugar idha mavuna muguLa parimaLa nikila kavimaalai sooduvadhum)
Your feet wear the fragrant garland of poems sung as 'aasu kavi' in a state of divinely sweet silence that is as eagerly sought by hordes of poets as bees that crowd around the nectar and (garland of poems)composed by poets who have been in divine service for several generations in all their births; நிபுண மதுபம் (nipuNa madhubam ) : swarm of bees;

In the following lines, Arunagirinathar describes Muruga as the nephew of Lord Vishnu and the son of Goddess Parvati and concludes that the subject of all the actions described earlier is the holy twin feet of Lord Muruga.

மதசிகரி கதறி முது முதலை கவர் தர நெடிய மடு நடுவில் வெருவி ஒரு விசை ஆதி மூலமே என வரு கருணை இகல் இரணியனை நுதி உகிரின் வகிரும் அடல் அரி குறல் வடிவாகி மாபலியை வலியசிறை இட ( madha sikari kadhaRi mudhu mudhalai kavar thara nediya madu naduvil veruvi oru visai aadhimoolam ena varu karuNai varadhan igal iraNiyanai nudhi ugirin vagirum adal ari vadivu kuRaL vadivaagi maa baliyai valiya siRai ida )
The kind Lord (Vishnu) who rushes to save the scared mountain-like elephant who cries aloud "Adimoola" when seized by a huge crocodile in the middle of a lake, the Lord Narasimha in the form a who tears apart with the sharp tips of the claws the hostile Hiranyakashipu, the Lord who assumes a dwarfish appearance (vamana avatara) and puts Mahabali in a strong prison; மத சிகரி (madha sikari) inebriated/intoxicated (elephant) and appearing like a mountain; அரி (ari ) : Vishnu;

வெளியின் முகடு கிழி பட முடிய வளருமுகில் நிருதன் இருபது வாகு பூதரமும் மகுடம் ஒரு பதும் முறிய அடு பகழி விடு குரிசில் மருக ( veLiyin mukadu kizhipada mudiya vaLaru mugil nirudhan irubadhu vaagu boodharamum makudam orupadhum muRiya adu pagazhi vidu kurisil maruga)
The lord with the dark complexion of fully developed clouds and the renowned Lord who wielded powerful arrows that pierced through and felled the ten crowned heads of the demon Ravana and tore away the firmament - Lord Vishnu - You are his nephew! முகில் (mugil): cloud; நிருதன் ( niruthan): demon;

நிசிசரர் தளமும் வரு தாரகாசுரனும் மடிய மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன் நீலகிரி மருவு குருபதி ( nisicharar dhaLamum varu thaarakaa suranum madiya malai piLavu pada makara jalanidhi kuRugi maRugi muRaiyida muniyum vadivElan neelagiri maruvu gurupathi )
The perceptor (guru) who slayed the army of the demons and Tarakasura, demolished the Krauncha mountain and dried up the sea with the Makara fish causing it to wail - the angry Lord Muruga who carries the spear and who resides at Thirutthani on the Neelagiri hills;

யுவதி பவதி பகவதி மதுர வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூலதரி வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை வநிதை அபினவை அநகை அபிராம நாயகி தன் மதலை ( yuvathi bavathi bagavathi madhura vachani bayiravi gavuri umaiyaaL thrisoola dhari vanajai madhupathi amalai vijayai thiripurai punidhai vanithai abinavai anagai abiraama naayaki than madhalai )
The child of the ever young Abhirami, the creator, Bhagavati, Possessor of melodious voice and speech, Bhairavi representing Time, Gowri, bearer of Trishula, one who sits on lotus, Kali, Blemishless, Durga, Chief of Tripura, Pure, Beautiful and Sinless;

மலைகிழவன் அநுபவன் அபயன் உபய சதுர் மறையின் முதல் நடு முடிவின் மணநாறு சீறடியே ( malai kizhavan anubavan abayan ubaya chathur maRaiyin mudhal nadu mudivin maNanaaRu seeRadiyE)
The twin feet of the chief of Kurinji land, the Witness of all life, The Refuge and the fragrance permeating the beginning, the end and the middle of the four vedas.

Summary

The Lord's Feet can be described as

 1. the bright light that dispel the darkness of the entire universe at the time of the beginning of the Yuga;
 2. what the Yogis who surrender themselves and get absorbed in the blissful trance of Shiva Anubhuti see in their hearts with their spiritual eyes;
 3. the boat that transport souls from the sea of birth;
 4. the witness of all events;
 5. treasure of devas, who praise you, after they have escaped the dangerous rule of Surpadma, the demon!
 6. what competed with Ganesa when the Lord flew on the back of the peacock in a second to win the mango fruit from Siva!
 7. giver of peace to my lowly heart;
 8. what dances on the chest of Shiva, which Uma Devi hugs and brings delight;
 9. play in the three worlds, which are crushed by the steps;
 10. prsent wherever and whenever devotees contemplate on them and offer them refuge;
 11. the feet that walk on the milltet fields populated by wild animals in the dense forests of Vallimalai, where your consort Valli is guarding the millets from the parrots;
 12. my protector when the god of death Yama comes with his whip riding on an ox;
 13. vanquisher of all my enemies, since I am leading a good path in this life;
 14. the fragrant ffet that wear the garlands of various poets who praise you in their songs as the Final Principle;
 15. being loved by Lord's uncle Vishnu, who vanquished King Bali, King Hiranya Kashyap, King Ravana and others;
 16. present in the beginning, the middle and the end of all Vedas and full of fragrance

64. கடலை பொரி

ராகம்: தன்யாசி தாளம்: ஆதி
கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
கடின குடவுதரவிபரீத
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரதுதுணைவோனே
வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகதமயில்வீரா
மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவிதமணவாளா

Thursday, 9 May 2013

63. ஒருவரை யொருவர்

ராகம்: ஹிந்தோளம் தாளம்: திச்ர ரூபகம் (2+ 1½ + 1½)
ஒருவரை யொருவர்தேறி அறிகிலர் மதவிசாரர்
ஒருகுண வழியுறாதபொறியாளர்
உடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி
உறநம னரகில் வீழ்வரதுபோய்ப்பின்
வருமொரு வடிவமேவி யிருவினை கடலுளாடி
மறைவரி னனைய கோலமதுவாக
மருவிய பரமஞான சிவகதி பெறுகநீறு
வடிவுற அருளி பாதமருள்வாயே

62. ஒருபொழுதும்

ராகம்: பேகடா தாளம்: 1+1½+1+1½+ 1½+ 3
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைத் சேவித்தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக்குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத்தவிரேனோ

61. உலகபசு பாச

ராகம்: சௌராஷ்ட்ரம் தாளம்:அங்க தாளம் (8½) 2½ + 1 ½ + 1½ + 3
உலகபசு பாச தொந்தமதுவான
உறவுகிளை தாயர் தந்தைமனைபாலர்
மலசலசு வாச சஞ்சலமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பையணிசேயே
சரவணப வாமு குந்தன்மருகோனே
பலகலைசி வாக மங்கள்பயில்வோனே
பழநிமலை வாழ வந்தபெருமாளே.

Wednesday, 8 May 2013

60. ஆறுமுகம்

ராகம்: மோஹனம் தாளம்: கண்ட சாபு (2½)
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம்என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணையதென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுனதென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையுமென்சொலாதோ

Sunday, 5 May 2013

59. அவனிதனிலே

ராகம்: பௌளைதாளம்: 5½ (1 + 1½+ 1½+ 1½)
அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேநடந்துஇளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்துபதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்துதுதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்றனடிசேராய்

58. அருத்தி வாழ்வொடு

ராகம்: பிலஹரி தாளம்: அங்க தாளம் (10 ½) 1 ½ + 2 + 2 + 2 + 3
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியுமுறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடுவளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவதுநினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலதுதருவாயே

Saturday, 4 May 2013

57. அபகார நிந்தை

ராகம்: சக்ரவாஹம் தாளம்: அங்க தாளம் எடுப்பு (1/2 தள்ளி) (8)
அபகார நிந்தைபட்டுழலாதே
அறியாத வஞ்சரைக்குறியாதே
உபதேச மந்திரப்பொருளாலே
உனைநானி னைந்தருட்பெறுவேனோ

Thursday, 2 May 2013

56. வெங்காளம் பாணம்

ராகம்: ஜோன்புரி தாளம்: ஆதி
வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற்குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப்பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப்படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப்பொழுதாள்வாய்

55. விறல் மாரன்

ராகம்: மாண்டு தாளம்: ஆதி
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்துவெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம்வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

Wednesday, 1 May 2013

54. விந்ததினூறி

ராகம்: யமுனா கல்யாணி தாளம்: மிஸ்ர சாபு (2 + 1½)
விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடியினிமேலோ
விண்டு விடாம லுன்பத மேவு
விஞ்சையர் போலஅடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞானவடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாதமலர்தாராய்

Tuesday, 30 April 2013

53. வரியார்

ராகம்: காம்போதி/சஹானா தாளம்: சதுச்ர ஜம்பை (7)
வரியார் கருங்கண்மடமாதர்
மகவா சைதொந்தமதுவாகி
இருபோ துநைந்துமெலியாதே
இருதா ளினன்புதருவாயே
பரிபா லனஞ்செய்தருள்வோனே
பரமே சுரன்றனருள்பாலா
அரிகே சவன்றன்மருகோனே
அலைவா யமர்ந்தபெருமாளே.

Thursday, 25 April 2013

52. வந்து வந்து முன்

ராகம்: சிந்து பைரவி தாளம்: திஶ்ர நடை (12)
வந்து வந்து முன்த வழ்ந்து
வெஞ்சு கந்த யங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்குழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
விண்ட லம்பி ளந்தெ ழுந்த
செம்பொன் மண்ட பங்க ளும்ப யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
ழைந்து குங்கு மந்த யங்கு
கொங்கை வஞ்சு தஞ்ச மென்று மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
பைங்க டம்பு தண்டை கொஞ்ச
செஞ்ச தங்கை தங்கு பங்கயங்கள்தாராய்

Monday, 15 April 2013

51. வஞ்சத்துடனொரு

ராகம்: மனோலயம் தாளம்: ஆதி (2 களை)
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
வஞ்சிக் கொடியிடைமடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
மண்டிக் கதறிடு வகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையெனவுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக் கடியிணைதரவேணும்

Sunday, 14 April 2013

50. வஞ்சங்கொண்டு

ராகம்: பூர்வி கல்யாணி தாளம்: திச்ர த்ரிபுடை (7)
வஞ்சங்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமெனவெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ
திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியுமெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவே
குண்டுங்குன் றுங்கர டார்மரமதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்தநி சாசரர்வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசைநிணமூளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன்மருகோனே

Saturday, 23 February 2013

49. மூளும் வினை

ராகம்: சங்கரானந்தப்ரியா தாளம்: அங்க தாளம் (1½ + 2½ + 2½ + 2½)
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சியதிபார
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற
மூலபர யோக மேல்கொண் டிடாநின்றதுளதாகி
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசியன லூடு போயொன்றி வானிங்க
ணாமமதி மீதி லூறுங்க லாஇன்பஅமுதூறல்
நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்றதொருநாளே

Sunday, 10 February 2013

48. மூப்புற்றுச் செவி

ராகம்: மாயாமாளவ கௌளை தாளம்: ஆதி (2 களை)
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல்தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளியிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள்புரிவாயே

Friday, 8 February 2013

47. முனைச்சங் கோலிடு (அனிச்சங் கார்முகம்)

ராகம்: காபிதாளம்: 1½ + 6
அனிச்சங் கார்முகம்....நெறிபாரா
வினைச்சண் டாளனை வீணணை நீணிதி
தனைக்கண் டாணவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழிபகராதே
விகற்பங் கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள்பெறுவேனோ

46. முந்துதமிழ் மாலை

ராகம்: செஞ்சுருட்டி தாளம்: அங்க தாளம் (7½) 1½ + 2½ + 2 + 1½
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடியுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்தன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடுநடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போதுவருவாயே

45. மனத்தின் பங்கு

ராகம்: பேகடா தாளம்: மிஸ்ர சாபு (1½ + 2)
மனத்தின்பங் கெனத்தங்கைம்
புலத்தென்றன் குணத்தஞ்சிந்
த்ரியத்தம்பந் தனைச்சிந்தும்படிகாலன்
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
திறத்தின்தண் டெடுத்தண்டங்
கிழியத்தின்றிங் குறத்தங்கும்பலவோரும்
எனக்கென்றிங் குனக்கென்றங்
கினத்தின்கண் கணக்கென்றன்
றிளைத்தன்புங் கெடுத்தங்கங்கழிவாமுன்
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
கிரக்கும்புன் றொழிற்பங்கங்
கெடத்துன்பங் கழித்தின்பந்தருவாயே

Wednesday, 6 February 2013

44. மங்கை சிறுவர்

ராகம்: ஹம்சானந்திதாளம்: ஆதி திஸ்ர நடை(12)
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதறவுடல்தீயின்
மண்டி யெரிய விண்டு புனலில்
வஞ்ச மொழிய விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பி யிடறுமொருபாச
விஞ்சை விளையு மன்று னடிமை
வென்றி யடிகள்தொழவாராய்

43. பூரண வார கும்ப

ராகம்: சங்கரானந்தப்பிரியா தாளம்: 2 + 1½ + 1½
பூரண வாரகும்ப சீதப டீரகொங்கை
மாதர் விகாரவஞ்ச லீலையி லேயுழன்று
போதவ மேயிழந்து போனது மானமென்பதறியாத
பூரிய னாகிநெஞ்சு காவல்ப டாதபஞ்ச
பாதக னாயறஞ்செ யாதடி யோடிறந்து
போனவர் வாழ்வுகண்டு மாசையி லேயழுந்துமயல்தீரக்
காரண காரியங்க ளானதெ லாமொ ழிந்து
யானெனு மேதைவிண்டு பாவக மாயிருந்து
காலுட லூடியங்கி நாசியின் மீதிரண்டுவிழிபாயக்
காயமு நாவுநெஞ்சு மோர்வழி யாகஅன்பு
காயம் விடாம லுன்ற னீடிய தாள்நினைந்து
காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்விளங்கஅருள்வாயே

Monday, 4 February 2013

Story of Gajendra and Lord Vishnu

King Indradyumna was a great devotee of Lord Vishnu. Feeling that the burden of royal duties interfered with the worship of his Lord, he decided to entrust the kingdom to his ministers and retire to the forest. He built a cottage near the Trikuta mountain and remained absorbed in the meditation of Lord Vishnu.

One day, Sage Agastya came to see him. The Sage, known for his quick temper, was enraged by the apparent disregard for him by the king who remained totally engrossed in Lord's meditation. The Sage became furious and cursed him thus- “You have disrespected a Sage, who has come to meet you. May you turn into a mad elephant.”

Realizing what had happened, Indradyumna begged for forgiveness. The Sage mitigated the impact of the curse stating that as ‘Elephant Gajendra’ he would continue to remain devout to Lord Vishnu and one day, Lord's grace and intervention, he'd be liberated.

Actually, Sage Agastya had noticed that the great King, despite the greatness of his good deeds, still has traces of Ahamkara in him. He felt that the king had to be taught the hard way that self is to be renounced and surrendered to the Lord for attaining moksha.

Gajendra ruled over all the other elephants in the herd. On a hot day, he proceeded with his herd to a lake to cool off in its fresh waters. Suddenly a crocodile living in the lake attacked Gajendra and caught him by the leg. Gajendra tried for a long time to escape from the crocodile's clutches. All his family, relatives and friends gathered around to help him, but in vain. The crocodile wouldn't simply let go. When they realized that ‘death’ had come close to Gajendra, they left him alone. He trumpeted in pain and helplessness and when the last drop of energy was also sapped, Gajendra called to god Vishnu to save him, holding a lotus up in the air as an offering.

Friday, 1 February 2013

42. புகரப் புங்க

ராகம்: ரஞ்சனி தாளம்: ஆதி (திஸ்ர நடை)
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப்பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற்புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத்திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத்தரவேணும்

41. பரிமள களப

ராகம்: தேவகாந்தாரி தாளம்: சதுஸ்ர அட (12)
பரிமள களபசு கந்தச் சந்தத்தனமானார்
படையம படையென அந்திக் குங்கட்கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே

Thursday, 31 January 2013

How Vishnu Obtained the Sudarshana Chakra

Story of Jalandhara

Jalandhara was a demon king, who procured many boons after doing harsh austerities. Becoming arrogant of his immense power, he captured and ruled all the three worlds. Having subdued Satyaloka and Vaikuntha, the demon went to KailAsa to fight Lord Shiva. Lord Shiva took the form of an old man and stood on his way. He asked Jalandhara where he was going. jalandhara replied that he was going to fight against Lord Shiva. Smiling the Old Man marked a disc (chakra) on the ground.

40. படர்புவியின் மீது

ராகம்: பந்துவராளி தாளம்: 2½ + 1½ + 1½ + 2
படர்புவியின் மீது மீறி வஞ்சகர்கள்
வியனினுரை பானு வாய்வி யந்துரை
பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரிசங்கபாடல்
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல்சந்தமாலை
மடல்பரணி கோவை யார்க லம்பக
முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
வகைவகையி லாசு சேர்பெ ருங்கவிசண்டவாயு
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொ டுலாவு மால் அகந்தைதவிர்ந்திடாதோ

Monday, 28 January 2013

39. பஞ்ச பாதக

ராகம்: ஸிம்மேந்திர மத்யமம் தாளம்: அங்க தாளம் (7½) 1½ +2 +2 +2
பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
குஞ்சி கூர்விட மதர் விழி பிலவக
பங்க வாண்முக முடுகிய நெடுகியதிரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல
மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
பண்பி லாதொறு பகடது முதுகினில்யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொரு
தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்
அன்பி னாலுன தடிபுக ழடிமையெனெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினி லியலுடன்வரவேணும்

Saturday, 26 January 2013

38. நிலையாப் பொருளை

ராகம்: பாகேஶ்ரீ தாளம்: மிஸ்ர சாபு (2 + 1½)
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுதுமவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள்தடுமாறி
மலம்நீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரியநெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமலமருள்வாயே

37. நிதிக்குப் பிங்கலன்

ராகம்: தன்யாசி தாளம்: சங்கீரண சாபு (2 +1½ +1)
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்
நிறத்திற் கந்தனென்றினைவோரை
நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ்சினில்நாளும்
புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம்பழிமாயும்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்
புணர்க்கைக் கன்புதந்தருள்வாயே

36. நாலு மைந்து

ராகம்: கேதார கெளளை தாளம்: திச்ர நடை (15)
நாலு மைந்து வாசல்கீறு தூறு டம்பு கால்கையாகி
நாரி யென்பி லாகுமாக மதனூடே
நாத மொன்ற ஆதிவாயில் நாட கங்க ளானஆடி
நாட றிந்தி டாமலேக வளராமுன்
நூல நந்த கோடிதேடி மால்மி குந்து பாருளோரை
நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை
நோய்க லந்த வாழ்வுறாமல் நீக லந்து ளாகுஞான
நூல டங்க வோதவாழ்வுதருவாயே

Friday, 25 January 2013

35. தோலொடு மூடிய

ராகம்: ஜோன்புரி தாளம் : ஆதி
தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப்புதிதான
தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
கோவையு லாமடல் கூறிய ழுந்திக்
தோமுறு காளையர் வாசல்தொ றும்புக்கலமாருங்
காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
கோளனை மானமி லாவழி நெஞ்சக்
காதக லோபவ்ரு தாவனை நிந்தைப்புலையேனைக்
காரண காரிய லோகப்ர பஞ்சச்
சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற்றருளாதோ

Saturday, 19 January 2013

34. தொந்தி சரிய

ராகம்: தோடி/அடாணா தாளம்: அங்க தாளம் (7½) 1½ + 1½ + 2 + 2½
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முகுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்நகையாடி
தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடுசெவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடமை கடனே தெனமுடுகுதுயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசைவரவேணும்

33. துன்பம் கொண்டு

ராகம்: பைரவி தாளம்:திச்ர த்ரிபுடை (7)
துன்பங்கொண் டங்க மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதிலணுகாதே
இன்பந்தந் தும்பர் தொழும்பத
கஞ்சந்தந் தஞ்ச மெனும்படி
யென்றென்றுந் தொண்டு செயும்படியருள்வாயே

32. தரிக் குங்கலை

ராகம்: ஆபோகி தாளம்: சதுஸ்ர ஏகம் மிஸ்ர நடை (14)
தரிக் குங்கலை நெகிழ்க் கும்பர
தவிக் குங்கொடி மதனேவிற்
றகைக் குந்தனி திகைக் குஞ்சிறு
தமிழ்த் தென்றலினுடனேநின்
றெரிக் கும்பிறை யெனப் புண்படு
மெனப் புன்கவிசிலபாடி
இருக் குஞ்சிலர் திருச் செந்திலை
யுரைத் துய்ந்திடஅறியாரே

Thursday, 17 January 2013

31. தந்த பசி

ராகம்: ஆரபி தாளம்: ஆதி
தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதடவியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயிரெனவேசார்
மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவு
மந்த வரிசைமொழிபகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிடமிசையேறி

Tuesday, 15 January 2013

30. தண்டையணி

ராகம்: ஸிம்மேந்திர மத்யமம்/தன்யாசி தாளம்: கண்ட சாபு (2½)
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன்கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின்றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ்சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன்சந்தியாவோ

Monday, 14 January 2013

29. தண்டே னுண்டே

ராகம்: சுருட்டி தாளம்: 1½ + 2
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக்குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற்றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க்குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற்கழல்தாராய்

28. . சேமக் கோமள

ராகம்: சுருட்டி தாளம்: 1½ + 2
சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதுமநந்தவேதா
தீதத் தேயவி ரோதத் தேகுண
சீலத் தேமிகஅன்புறாதே
காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழிகின்றமாயா
காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயுமதென்கொலோதான்

27. கொம்பனை யார்

ராகம்: கரஹரப்ரியா தாளம்: சதுஸ்ர ரூபகம் (6)
கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீரபூ ஷணநகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில்மருளாதே
உம்பர்கள் ஸ்வாமீந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநமஎனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள்புரிவாயே

Sunday, 13 January 2013

26. குடர்நிண

ராகம்: குந்தலவராளி தாளம்: அங்க தாளம் (14½)
(2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 2 + 2)
குடர்நிண மென்பு சலமல மண்டு
குருதிந ரம்புசீயூன்பொதிதோல்
குலவுகு ரம்பை முருடுசு மந்து
குனகிம கிழ்ந்துநாயேன்தளரா
அடர்மத னம்பை யனையக ருங்க
ணரிவையர் தங்கள்தோடோய்ந்தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்
அடியிணை தந்துநீயாண்டருள்வாய்

25. காலனார்

ராகம்: சஹானா/திலங் தாளம்: சதுஸ்ர ஏகம் (10) (கண்ட நடை)
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன்கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந்தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந்திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன்வரவேணும்

24. கமல மாதுடன்

ராகம்: ஆனந்த பைரவி தாளம்: அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ ணாதம டந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில்இருபோதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்தசு கந்தரு
கரிய ஓதியில் இந்துமு கந்தனில்மருளாதே
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின்அருள்தானே
அறியு மாறுபெ ரும்படி அன்பினின்
இனிய நாதசி லம்புபு லம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கியஅடிதாராய்

Friday, 11 January 2013

23. கண்டுமொழி

ராகம்: காவடி ஸிந்து தாளம்: அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்றுபலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல் என்று நின்றுவிதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்துபுகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களிலு டன்க லந்து
பண்புபெற அஞ்ச லஞ்சலெனவாராய்

22. கட்டழகு விட்டு

ராகம்: மனோலயம் தாளம்: சதுஸ்ர த்ருவம் (கண்ட நடை (35)
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்முறையோடே
வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுறவுணர்வேனோ

Thursday, 10 January 2013

21. ஓராதொன்றை

ராகம்: பிலஹரிதாளம்: ஆதி (2 களை)
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட்டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட்டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட்குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக்கருள்தாராய்

Monday, 7 January 2013

20. ஏவினை நேர்விழி

ராகம்: வலசி/பந்துவராளிதாளம்: ஆதி
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனைநெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையைஅகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவதுமொருநாளே

19. உததியறல் மொண்டு

ராகம்: கீரவாணி அங்க தாளம்
(6½ 2½ + 1½ + 1½ + 1)
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரைபஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதெனவெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர்கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமதுசிந்தியேனோ

Sunday, 6 January 2013

18. அருக்கன் போலொளி (உருக்கம் பேசிய நீலியர்/இருக்கும் காரண)

ராகம்: சுத்த தன்யாசி அங்க தாளம் (7½)
தகிட தகதிமி தகதிமி தகதிமி (1½ + 2 + 2 + 2)

உருக்கம் பேசிய நீலியர்.....மீதினில் ஆசைகள் புரிவேனோ
அருக்கன் போலொளி வீசிய மாமுடி
யனைத்துந் தானழ காய்நல மேதர
அருட்கண் பார்வையி னாலடி யார்தமைமகிழ்வோடே
அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுடனினிதாள்வாய்

Friday, 4 January 2013

17. இயல் இசையில்

ராகம்:ஹுஸேநி தாளம்: அங்க தாளம் (9)
2½ +1½ + 2 + 3
இயலிசையி லுசித வஞ்சிக்கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
உயர்கருணை புரியு மின்பக்கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத்தருவாயே

Thursday, 3 January 2013

16. அனைவரும் மருண்டு

ராகம்: மோஹனம் தாளம்: அங்க தாளம் (5 ½) : 2½ + 1½ + 1½
அனைவரும ருண்ட ருண்டு கடிதெனவெ குண்டி யம்ப
அமரஅடி பின்தொ டர்ந்துபிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழவுடனெ லும்ப லம்பு
மவலவுட லஞ்சு மந்துதடுமாறி
மனைதொறுமி தம்ப கர்ந்து வரவரவி ருந்த ருந்தி
மனவழிதி ரிந்து மங்குவசைதீர
மறைசதுர்வி தந்தெ ரிந்து வகைசிறுச தங்கை கொஞ்சு
மலரடிவ ணங்க என்று பெறுவேனோ

Wednesday, 2 January 2013

15. அறிவழிய மயல்

ராகம்: காம்போதிதாளம்: கண்ட சாபு (1 + 1½)
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுகஅகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனையழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவரமருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ்பகர்வோனே

14. அவனி பெறும் தோடு

ராகம்: கமாஸ் தாளம்: சதுஸ்ர ரூபகம் (6)
அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக்கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பொற்
றழிதரு திண்டாட் டஞ்சற்றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற்றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற்றருளாயோ