Posts

Showing posts from May, 2013

70. குருதி மலசலம்

ராகம் : கேதாரகௌளை மிச்ர சாபு (3½) 2+1½ குருதி மலசல மொழுகு நரகுட லரிய புழுவது நெளியு முடல்மத குருபி நிணசதை விளையு முளைசளி யுடலூடே குடிக ளெனபல குடிகை வலிகொடு குமர வலிதலை வயிறு வலியென கொடுமை யெனபிணி கலக மிடுமிதை யடல்பேணி மருவி மதனனுள் கரிய புளகித மணிய சலபல கவடி மலர்புனை மதன கலைகொடு குவடு மலைதனில் மயலாகா மனது துயரற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே

69. குரம்பை மலசலம்

ராகம் : கௌளை தாளம் : ஆதி (2 களை) குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல கசுமாலக் குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொடுவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை விறலான சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே

68. கருவினுருவாகி வந்து

ராகம் : விஜயநாகரி அங்க தாளம்(5½) 2½ + 1½ + 1½ (எடுப்பு ½ தள்ளி) கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று அனுதினமும் நாண மின்றி அழிவேனோ

How Shiva mediated between Sundarar and Paravai Nachiyar

Sundara (Murthi) Nayanar who lived in the 8th century was a great devotee of Lord Siva. He is one of the four great Tamil religious Teachers ('nalvar'): Sambandar, Appar(thirunavukkarasar), Sundarar, Manikkavachagar. Except for Manikka-Vachaagar, the oldest of the four, others lived during the struggle between the Jains and the Saivites. Sundarar is also one of the Sixty-three Nayanars whose lives were recorded in the "Periya Puranam," (The Great Epic) by Sekkilaar, a poet and the chief minister in the court of the Chola King, Kulothunga Chola II. In the village of Tirunavalur, a temple priest called Sadayanar and his wife Isaignani, both staunch Shiva devotees, had a son Nambi Arurar. The ruler of the local kingdom (Thirumunaipadi-Nadu), Narasingamunaiarayar a chieftain, adopted him and brought up as his own son, and called him Sundarar. Sundara Murthi Nayanar sang the glories of Lord Siva at all the sacred places that he visited. These hymns are called Thevaaram.

67. கருப்புவிலில்

ராகம் : சிந்து பைரவி தாளம் : கண்ட த்ருவம் கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய கடைக்கணொடு சிரித்தணுகு கருத்தினால் விரகுசெய் மடமாதர் கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை கனத்தவிரு தனத்தின்மிசை கலக்குமோ கனமதில் மருளாமே ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி உனைப்புகழு மெனைப்புவியில் ஒருத்தனாம் வகைதிரு அருளாலே உருத்திரனும் விருத்திபெற அனுக்கிரகி யெனக்குறுகி யுரைக்கமறை யடுத்தபொருள் உணர்த்துநா ளடிமையு முடையேனோ

66. கரிய பெரிய

ராகம் : மோஹனம் ஆதி திச்ர நடை (12) கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள் கழிய முடுகி யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி யணுகாதே செறிவு மறிவு முறவு மனைய திகழு மடிகள் தரவேணும்

65. கதியை விலக்கு

ராகம் : தேஷ் அங்க தாளம் 2+1½ +2 (5½) கதியைவி லக்கு மா தர்கள் புதியஇ ரத்ன பூஷண கனதன வெற்பு மேல்மிகு மயலான கவலைம னத்த னாகிலும் உனதுப்ர சித்த மாகிய கனதன மொத்த மேனியு முகமாறும் அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும் அரவபி டித்த தோகையு முலகேழும் அதிரவ ரற்று கோழியும் அடியவர்வ ழுத்தி வாழ்வுறும் அபிநவ பத்ம பாதமு மறவேனே

1. சீர்பாத வகுப்பு (Seerpada Vaguppu)

Image
ராகம் : காவடிச்சிந்து கண்ட சாபு (2½) உததி இடை கடவுமர கதவருண குலதுரக உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை யுக முடிவில் இருள் அகல ஒரு சோதி வீசுவதும் உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக மொருவிவரு மநுபவன சிவயோக சாதனையில் ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி யுணர்வுவிழி கொடுநியதி தமதூடு நாடுவதும் உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய கலையார வாரமற உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவ ரநுபூதி யானதுவும்

64. கடலை பொரி

ராகம் : தன்யாசி தாளம் : ஆதி கடலை பொரியவரை பலகனி கழைநுகர் கடின குடவுதர விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித மணவாளா

63. ஒருவரை யொருவர்

ராகம் : ஹிந்தோளம் தாளம் : திச்ர ரூபகம் (2+ 1½ + 1½) ஒருவரை யொருவர்தேறி அறிகிலர் மதவிசாரர் ஒருகுண வழியுறாத பொறியாளர் உடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி உறநம னரகில் வீழ்வ ரதுபோய்ப்பின் வருமொரு வடிவமேவி யிருவினை கடலுளாடி மறைவரி னனைய கோல மதுவாக மருவிய பரமஞான சிவகதி பெறுகநீறு வடிவுற அருளி பாத மருள்வாயே

62. ஒருபொழுதும்

ராகம் : பேகடா தாளம் : 1+1½+1+1½+ 1½+ 3 ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைத் சேவித் தறியேனே பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் குறியேனே பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ

61. உலகபசு பாச

ராகம் : சௌராஷ்ட்ரம் அங்க தாளம் 2½ + 1 ½ + 1½ + 3(8½) உலகபசு பாச தொந்த மதுவான உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர் மலசலசு வாச சஞ்ச லமதாலென் மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை யணிசேயே சரவணப வாமு குந்தன் மருகோனே பலகலைசி வாக மங்கள் பயில்வோனே பழநிமலை வாழ வந்த பெருமாளே.

60. ஆறுமுகம்

ராகம் : மோஹனம் தாளம் : கண்ட சாபு (2½) ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ

59. அவனிதனிலே

ராகம் : பௌளை அங்க தாளம் : 5½ (1 + 1½+ 1½+ 1½) அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேநடந்து இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய் சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர் திருவடிக ளேநி னைந்து துதியாமல் தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்

58. அருத்தி வாழ்வொடு

ராகம் : பிலஹரி அங்க தாளம் (10 ½) 1 ½ + 2 + 2 + 2 + 3 அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது நினையா துன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே

57. அபகார நிந்தை

ராகம் : சக்ரவாஹம் அங்க தாளம்(8) எடுப்பு (1/2 தள்ளி) அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனைநானி னைந்தருட் பெறுவேனோ

56. வெங்காளம் பாணம்

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி வெங்கா ளபா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் பொருள்தேடி வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய் வன்பே துன்பப் படலாமோ மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் பொழுதாள்வாய்

55. விறல் மாரன்

ராகம் : மாண்டு தாளம் : ஆதி விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ

54. விந்ததினூறி

ராகம் : யமுனா கல்யாணி தாளம் : மிஸ்ர சாபு (2 + 1½) விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி யினிமேலோ விண்டு விடாம லுன்பத மேவு விஞ்சையர் போல அடியேனும் வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான வடிவாகி வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத மலர்தாராய்