Posts

Showing posts from April, 2015

121. எத்தனை கலாதி

ராகம் : கானடா அங்க தாளம் (2½ + 1½ +1½) எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங் கெத்தனைச ராச ரத்தின் செடமான எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங் கெத்தனைகொ லூனை நித்தம் பசியாறல் பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம் பெற்றிடநி னாச னத்தின் செயலான பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும் பெத்தமுமொ ராது நிற்குங் கழல்தாராய்

120. உய்ய ஞானத்து

ராகம் : லலிதா தாளம் : கண்டசாபு (2½) உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது முள்ளவே தத்துறைகொ டுணர்வோதி உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை யுள்ளமோ கத்தருளி யுறவாகி வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய வல்லமீ துற்பலச யிலமேவும் வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி கிள்ளிவீ சுற்றுமலர் பணிவேனோ

119. உடையவர்கள் ஏவ

ராகம் : நளினகாந்தி தாளம் : ஆதி உடையவர்க ளேவ ரெவர்களென நாடி யுளமகிழ ஆசு கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மான தெனவுரமு மான மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளை நடவுமென வாடி முகம்வேறாய் நலியுமுன மேயு னருணவொளி வீசு நளினஇரு பாத மருள்வாயே

118. உடலி னூடு போய்மீளு

ராகம் : தோடி அங்கதாளம் 5½ (1½ + 1½ + 2½) உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத உணர்வி னூடு வானூடு முதுதீயூ டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு மொருவ ரோடு மேவாத தனிஞானச் சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு துரிய வாகு லாதீத சிவரூபம் தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை தொடுமு பாய மேதோசொ லருள்வாயே