Posts

Showing posts from July, 2015

164. வஞ்சக லோப

ராகம் : தோடி அங்க தாளம் (5) 2 + 1½ + 1½ வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பலபாவின் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி வந்தியர் போல வீணி லழியாதே செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை திண்டிறல் வேல்ம யூர முகமாறும் செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே

163. தறையின் மானுட

ராகம் : ஆரபி அங்கதாளம் (8) 1½ + 2 + 2 + 2 தறையின் மானுட ராசையி னால்மட லெழுது மாலருள் மாதர்கள் தோதக சரசர் மாமல ரோதியி னாலிரு கொங்கையாலுந் தளர்மி னேரிடை யாலுடை யால்நடை யழகி னால்மொழி யால்விழி யால்மருள் சவலை நாயடி யேன்மிக வாடிம யங்கலாமோ பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக ளணுகொ ணாவகை நீடுமி ராசிய பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம் பகரொ ணாதது சேரவொ ணாதது நினையொ ணாதது வானத யாபர பதிய தானச மாதிம னோலயம் வந்துதாராய்

162. எழுதிகழ் புவன

Image
ராகம் : பேகடா மிஸ்ரசாபு (2 + 1½) எழுதிகழ் புவன நொடியள வதனி லியல்பெற மயிலில் வருவோனே இமையவர் பரவி யடிதொழ அவுணர் மடிவுற விடுவ தொருவேலா வழுதியர் தமிழி னொருபொரு ளதனை வழிபட மொழியு முருகேசா மலரடி பணியு மடமகள் பசலை மயல்கொடு தளர்வ தழகோதான்

161. அதிரும் கழல்

ராகம் : பூர்வி கல்யாணி அங்கதாளம் (8) 2 + 1½ + 1½ +3 அதிருங் கழல்ப ணிந்து னடியேனுன் அபயம் புகுவ தென்று நிலைகாண இதயந் தனிலி ருந்து க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே

160. புமியதனில்

ராகம் : அடாணா தாளம் : கண்டசாபு (2½) புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே சமரி லெதிர்த் தசுர்மாளத் தனியயில்விட் டருள்வோனே நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே.

159. தேனுந்து முக்கனி

ராகம் : தோடி தாளம் : கண்டசாபு (2½) தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர் சீரும் பழித்தசிவ மருளூறத் தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ சீவன் சிவச்சொருப மெனதேறி நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி நாதம் பரப்பிரம வொளிமீதே ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ நாளுங் களிக்கபத மருள்வாயே

158. அரிவையர்கள்

ராகம் : சாவேரி அங்கதாளம் (6) 2½ + 1½ + 2 அரிவையர்கள் தொடரு மின்பத் துலகுநெறி மிகம ருண்டிட் டசடனனென மனது நொந்திட் டயராமல் அநுதினமு முவகை மிஞ்சிச் சுகநெறியை விழைவு கொண்டிட் டவநெறியின் விழையு மொன்றைத் தவிர்வேனோ பரிதிமதி நிறைய நின்றஃ தெனவொளிரு முனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற் றகமேவும் படர்கள்முழு வதும கன்றுட் பரிவினொடு துதிபு கன்றெற் பதயுகள மிசைவ ணங்கற் கருள்வாயே

157. வருபவர்கள் ஓலை

ராகம் : பீம்பளாஸ் அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½) வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று மடிபிடிய தாக நின்று தொடர்போது மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று வசைகளுட னேதொ டர்ந்து அடைவார்கள் கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து கரியபுன லேசொ ரிந்து விடவேதான் கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு கடுகிவர வேணு மெந்தன் முனமேதான்

156. மாதர் வசம்

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் (7) 2½ + 1½ + 3 மாதர்வச மாயுற் றுழல்வாரும் மாதவமெ ணாமற் றிரிவாரும் தீதகல வோதிப் பணியாரும் தீநரக மீதிற் றிகழ்வாரே நாதவொளி யேநற் குணசீலா நாரியிரு வோரைப் புணர்வேலா சோதிசிவ ஞானக் குமரேசா தோமில் கதிர்காமப் பெருமாளே.

155. திருமகளுலாவு

ராகம் : குந்தலவராளி தாளம் : ஆதி திருமக ளுலாவு மிருபுய முராரி திருமருக நாமப் பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதரு குமாரப் பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம யூரப் பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் பெருமாள்காண்

154. சரியையாளர்க்கும்

ராகம் : வசந்தா கண்டசாபு (1 + 1½) சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் சகலயோ கர்க்குமெட் டரிதாய சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட் டருபரா சத்தியிற் பரமான துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச் சுடர்வியா பித்தநற் பதிநீடு துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற் சுகசொரூ பத்தையுற் றடைவேனோ

How Shiva Slayed Gajasura

One of the Namas of Shiva is Krittivasa ("who has skin as his garment"), a name that refers to His slaying of Gajasura and wearing his hide/skin on his body. Another Nama is Gajaha, the slayer of the elephant. According to the Shiva Puranas Gajasura is the son of the Mahishasura, the buffalo demon who was killed by Goddess Durga. To avenge his father's death, he is said to have performed a penance. Lord Brahma was impressed and granted him a boon that he would be killed only by a Jitendriya, one who has overcome all lust and desires. Thinking that he was invincible, the demon harassed the people of the Earth, asking them to worship him instead of the Gods. He went to Benares and attacked the sages who prayed to Lord Shiva for help. Shiva emerged from this linga, slew the demon, skinned the animal and wore its hide around his body. Reference To This Story in Thiruppugazh கரித்தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் (சரத்தே உதித்தாய்) கரி புராரி

153. சரத்தே உதித்தாய்

ராகம் : காபி தாளம் : ஆதி கண்ட நடை (20) சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே சமர்த்தா யெதிர்த்தே வருசூரைச் சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய் தகர்த்தா யுடற்றா னிருகூறாச் சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய் செகுத்தாய் பலத்தார் விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய் திருத்தா மரைத்தா ளருள்வாயே

152. கடகட கருவிகள்

ராகம் : தோடி தாளம் : ஆதி 2 களை கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர் காமத் தரங்கம் மலைவீரா கனகத நககுலி புணரித குணகுக காமத் தனஞ்சம் புயனோட வடசிக ரகிரித விடுபட நடமிடு மாவிற் புகுங்கந் தவழாது வழிவழி தமரென வழிபடு கிலனென வாவிக் கினம்பொன் றிடுமோதான்

151. எதிரிலாத பத்தி

ராகம் : சக்ரவாஹம் தாளம் : திஸ்ரரூபகம் (7½) எதிரி லாத பத்தி தனைமேவி இனிய தாள்நி னைப்பை யிருபோதும் இதய வாரி திக்கு ளுறவாகி எனது ளேசி றக்க அருள்வாயே கதிர காம வெற்பி லுறைவோனே கனக மேரு வொத்த புயவீரா மதுர வாணி யுற்ற கழலோனே வழுதி கூனி மிர்த்த பெருமாளே

150. உடுக்கத் துகில்

ராகம் : காம்போதி தாளம் : மிஸ்ரசாபு (1½ + 2) உடுக்கத் துகில்வேணு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே