Posts

Showing posts from February, 2016

235. தினமணி சார்ங்க

ராகம் : ஹம்சநாதம் தாளம் : அங்கதாளம் 2 + 1½ + 1½ (5) தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால தினகர னேய்ந்த மாளி கையிலாரஞ் செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும் இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி யரசாகி இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய மொருபிடி சாம்ப லாகி விடலாமோ

234. சருவி இகழ்ந்து

Image
ராகம் : கல்யாணி     தாளம் : ஆதி சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமு மொன்றிலை யென்றவ ரும்பறி தலையரு நின்றுக லங்கவி ரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு நன்றியும் வென்றியு மங்கள பெருமைக ளுங்கன முங்குண மும்பயில் சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் தனிவேலும் விருதுது லங்கசி கண்டியி லண்டரு முருகிவ ணங்கவ ரும்பத மும்பல விதரண முந்திற முந்தர முந்தினை புனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் மறவேனே

233. ஊனத்தசை தோல்கள்

ராகம் : ஜோன்புரி அங்கதாளம் 2 + 2 + 1 +1½ ஊனத்தசை தோல்கள்சு மந்த காயப்பொதி மாயமி குந்த ஊசற்சுடு நாறுகு ரம்பை மறைநாலும் ஓதப்படு நாலுமு கன்ற னாலுற்றிடு கோலமெ ழுந்து ஓடித்தடு மாறியு ழன்று தளர்வாகிக் கூனித்தடி யோடுந டந்து ஏனப்படு கோழைமி குந்த கூளச்சட மீதையு கந்து புவிமீதே கூசப்பிர மானப்ர பஞ்ச மாயக்கொடு நோய்கள கன்று கோலக்கழ லேபெற இன்று அருள்வாயே

232. பிறவியான சடம்

ராகம் : பீம்பளாஸ் தாளம் : ஆதி திச்ர நடை (12) பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து பிணிக ளான துயரு ழன்று தடுமாறிப் பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி பிடிப டாத ஜனன நம்பி யழியாதே நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த நளின பாத மெனது சிந்தை யகலாதே நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி நலன தாக அடிய னென்று பெறுவேனோ

231. சீதள வாரிஜ

ராகம் : கேதாரம் தாளம் : அங்கதாளம் 4 + 2½ + 2 (8½) சீதள வாரிஜ பாதா நமோநம நாரத கீதவி நோதா நமோநம சேவல மாமயில் ப்ரீதா நமோநம மறைதேடுஞ் சேகர மானப்ர தாபா நமோநம ஆகம சாரசொ ரூபா நமோநம தேவர்கள் சேனைம கீபா நமோநம கதிதோயப் பாதக நீவுகு டாரா நமோநம மாவசு ரேசக டோரா நமோநம பாரினி லேஜய வீரா நமோநம மலைமாது பார்வதி யாள்தரு பாலா நமோநம நாவல ஞானம னோலா நமோநம பாலகு மாரசு வாமீ நமோநம அருள்தாராய்

230. அண்டர்பதி

Image
ராகம் : சிந்துபைரவி தாளம் : கண்டசாபு (2½) அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி வரவேணும்

229. மனமெனும் பொருள்

ராகம் : நீலாம்பரி அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 மனமெ னும்பொருள் வானறை கால்கனல் புனலு டன்புவி கூடிய தோருடல் வடிவு கொண்டதி லேபதி மூணெழு வகையாலே வருசு கந்துய ராசையி லேயுழல் மதியை வென்றுப ராபர ஞானநல் வழிபெ றும்படி நாயடி யேனைநி னருள்சேராய் செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி யெண்குண பூரணி காரணி சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற அசுரர் தங்கிளை யானது வேரற சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே

228. புலவரை ரக்ஷிக்கும்

ராகம் : பந்துவராளி தாளம் : ஆதி புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை பொருபுய திக்கெட் டும்போயு லாவிய புகழாளா பொருவரு நட்புப் பண்பான வாய்மையி லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய கவிபாடி விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள் எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும் வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு மிடிதீர மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு மருள்வாயே

227. தோழமை கொண்டு

ராகம் : பிருந்தாவன ஸாரங்கா அங்கதாளம் (7½) 4+ 3½ தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள் ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் பெரியோரைத் தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள் ஈவது கண்டுத கைந்த குண்டர்கள் சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் தொலையாமல் வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள் நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் மானவ கந்தைமி குந்த குண்டர்கள் வலையாலே மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள் தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள் வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி விழுவாரே

226. ஞாலமெங்கும்

ராகம் : ஹம்சானந்தி தாளம் : அங்கதாளம் 3½ + 3½ + 3 (10) ஞால மெங்கும் வளைத்த ரற்று கடலாலே நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் வசையாலே ஆலமுந்து மதித்த ழற்கும் அழியாதே ஆறி ரண்டு புயத்த ணைக்க வருவாயே

225. சால நெடு நாள்

ராகம் : கரஹரப்ரியா அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½) சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து சாமளவ தாக வந்து புவிமீதே சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து தாரணியி லேத வழ்ந்து விளையாடிப் பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள் பாரதன மீத ணைந்து பொருள்தேடிப் பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று பாதமலர் சேர அன்பு தருவாயே

224.ஆதி முதல் நாளில்

ராகம் : மாயா மாளவ கௌளை அங்கதாளம் 2½ + 1½ + 1½ (5½) ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து ஆகமல மாகி நின்று புவிமீதில் ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து ஆளழக னாகி நின்று விளையாடிப் பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து பூமிதனில் வேணு மென்று பொருள்தேடிப் போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே

223. நீல முகிலான

ராகம் : கேதாரகௌளை தாளம் : கண்டசாபு (1½ +1) நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன நேயமதி லேதினமு முழலாமல் நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை நீரிலுழல் மீனதென முயலாமற் காலனது நாவரவ வாயிலிடு தேரையென காயமரு வாவிவிழ அணுகாமுன் காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு கால்முருக வேளெனவு மருள்தாராய்

222. தரையினில் வெகு

ராகம் : லதாங்கி அங்கதாளம் (7½) 4 + 1½ + 2 தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை வெறியனை நிறைபொறை வேண்டி டாமத சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை மிகுகேள்வி தவநெறி தனைவிடு தாண்டு காலியை யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய் சமடனை வலியஅ சாங்க மாகிய தமியேனை விரைசெறி குழலியர் வீம்பு நாரியர் மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர் விழிவலை மகளிரொ டாங்கு கூடிய வினையேனை வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ அருள்வாயே

221. செனித்திடும்

ராகம் : மோகனம் தாளம் : ஆதி (2 களை) எடுப்பு 1/4 இடம் செனித்தி டுஞ்சல சாழலு மூழலும் விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு முடலூடே தெளித்தி டும்பல சாதியும் வாதியும் இரைத்தி டுங்குல மேசில கால்படர் சினத்தி டும்பவ நோயென வேயிதை யனைவோருங் கனைத்தி டுங்கலி காலமி தோவென வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு முடல்பேணிக் கடுக்க னுஞ்சில பூடண மாடைகள் இருக்கி டுங்கலை யேபல வாசைகள் கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு மருள்வாயே

220. கறுத்த குஞ்சி

ராகம் : அஸாவேரி ஆதி (எடுப்பு 3/4 இடம்) கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத் துருத்த வெண்பலு மடைய விழுந்துட் கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் சுருள்நோயாற் கலக்க முண்டல மலமுற வெண்டிப் பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக் கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் கொழுமேனி அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப் பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித் தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் சடமாகி அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப் பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட் டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் றிடுவேனோ

219. வேழமுண்ட

ராகம் : சாரங்கா அங்கதாளம் (8½) 1½ + 2 + 2 + 2 + 1 வேழ முண்ட விளாகனி யதுபோல மேனி கொண்டு வியாபக மயலூறி நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி நானு நைந்து விடாதருள் புரிவாயே

218. தாரணிக்கு அதிபாவி

Image
ராகம் : சநதிரகெளன்ஸ் மிஸ்ரசாபு (3½) 1½ + 2 தார ணிக்கதி பாவி யாய்வெகு சூது மெத்திய மூட னாய்மன சாத னைக்கள வாணி யாயுறு மதிமோக தாப மிக்குள வீண னாய்பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் தாமு யச்செயு மேது தேடிய நினைவாகிப் பூர ணச்சிவ ஞான காவிய மோது தற்புணர் வான நேயர்கள் பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனைப் பூசி மெய்ப்பத மான சேவடி காண வைத்தருள் ஞான மாகிய போத கத்தினை யேயு மாறருள் புரிவாயே