Posts

Showing posts from January, 2017

481. காய மாய

ராகம் : ஹம்சானந்தி தாளம் : 1½ + 1½ + 1½ + 2 + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 2 (19) காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்பு தந்த னிற்கு ரம்பை கொண்டுநாளுங் காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி யப்ர மந்த டித்த லைந்து சிந்தைவேறாய் வேயி லாய தோள மாமட வார்கள் பங்க யத்து கொங்கை யுற்றி ணங்கி நொந்திடாதே வேத கீத போத மோனமெய் ஞான நந்த முற்றி டின்ப முத்தி யொன்று தந்திடாயோ

480. கனகசபை மேவு

ராகம் : கரஹரப்ரியா தாளம் : ஆதி கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் பெருமாள்காண்

479. கட்டி முண்டக

Image
ராகம் : முகாரி தாளம் : ஆதி 4 களை (32) கட்டி முண்டகர பாலி யங்கிதனை முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி மிசையேறிக் கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ டசையாமற் கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத முறமேவித் துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ

478. எழுகடல் மணல்

ராகம் : அடாணா தாளம் : மிஸ்ர சாபு 2 + 1½ (3½) எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் தருவாயே

477. எலுப்புத் தோல்

ராகம் : சிந்துபைரவி தாளம் : ஆதி எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ டண்டவாதங் குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ அன்புதாராய்

476. இருளுமோர்

ராகம் : வாசஸ்பதி தாளம் : மிஸ்ர சாபு (3½) இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ னிடம தேறியெ னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட ரிலகு மூலக வொளிமேவி அருவி பாயஇ னமுத மூறவுன் அருளெ லாமென தளவாக அருளி யேசிவ மகிழ வேபெற அருளி யேயிணை யடிதாராய்

475. இருவினையின்

ராகம் : ஆரபி அங்கதாளம் (9) 2½ + 1½ + 2 + 3 இருவினையின் மதிம யங்கித் திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே கனகசபை மருவு கந்தப் பெருமாளே.

474. அவகுண விரகனை

ராகம் : மோகனம் அங்கதாளம் அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சுபூதம் அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை அன்பிலாத கவடனை விகடனை நானாவி காரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பிவீழுங் களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ தெந்தநாளோ

473. பங்கயனார் பெற்றிடும்

ராகம் : பெஹாக் தாளம் : ஆதி பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர அண்டம தாயுற் றிருந்த பார்மிசை பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர உருவாயே பந்தம தாகப் பிணிந்த ஆசையில் இங்கித மாகத் திரிந்து மாதர்கள் பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் படிறாயே சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை வந்துடல் மூடக் கலங்கி டாமதி தந்தடி யேனைப் புரந்தி டாயுன தருளாலே சங்கரர் வாமத் திருந்த நூபுர சுந்தரி யாதித் தருஞ்சு தாபத தண்டைய னேகுக் குடம்ப தாகையின் முருகோனே

472. சிரத்தானத்தில்

Image
ராகம் : கானடா சதுச்ர ஜம்பை (7) சிரத்தா னத்திற் பணியாதே செகத்தோர் பற்றைக் குறியாதே வருத்தா மற்றொப் பிலதான மலர்த்தாள் வைத்தெத் தனையாள்வாய்

471. சரக்கேறி

ராகம் : கல்யாணி அங்கதாளம் (8½) 2½ + 2 + 2 + 2 சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப் பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச் சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் செயல்மேவிச் சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற் சுகித்தே சுற்றத் தவரோ டின்பத் தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் குடிபேணிக் குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக் குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனைக் குறித்தே முத்திக் குமறா வின்பத் தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க் குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் கழல்தாராய்

470. விரகொடு வளை

ராகம் : முகாரி தாளம் : மிஸ்ரசாபு 2 + 1½ (3½); விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு விழிவெங் கனல்போல வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி வழிவந் திடுபோதிற் கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற வினர்கண் புனல்பாயுங் கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு மியல்தந் தருள்வாயே

469. விதியதாகவெ

ராகம் : ஆஹிரி அங்கதாளம் (14½) 3½ + 1½ + 1½ + 1 + 3½ + 3½ விதிய தாகவெ பருவ மாதரார் விரகி லேமனந் தடுமாறி விவர மானதொ ரறிவு மாறியே வினையி லேஅலைந் திடுமூடன் முதிய மாதமி ழிசைய தாகவே மொழிசெய் தேநினைந் திடுமாறு முறைமை யாகநி னடிகள் மேவவே முனிவு தீரவந் தருள்வாயே

468. வலிவாத

ராகம் : கௌரி மனோஹரி தாளம் : கண்ட சாபு (2½) வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம் மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை வருநீர டைப்பினுடன் வெகுகோடி சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை தெளியாவெ னக்குமினி முடியாதே சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ சிவஞான சித்திதனை யருள்வாயே

467. பேதக விரோத

ராகம் : ஹிந்தோளம் அங்க தாளம் (17) 4½ 4½ + 4½ + 3½ பேதகவி ரோதத் தோதகவி நோதப் பேதையர்கு லாவைக் கண்டுமாலின் பேதைமையு றாமற் றேதமக லாமற் பேதவுடல் பேணித் தென்படாதே சாதகவி காரச் சாதலவை போகத் தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன் தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற் சாரல்மற மானைச் சிந்தியேனோ

466. புலையனான

ராகம் : சிந்துபைரவி அங்கதாளம் (5½) 1½ + 1½ + 2½ புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் பொறையி லாத கோபீகன் முழுமூடன் புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி பொறிக ளோடி போய்வீழு மதிசூதன் நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியி லாத வேமாளி குலபாதன் நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல் நினையு மாறு நீமேவி யருள்வாயே

465. பரியகைப் பாசம்

ராகம் : ஸாரமதி தாளம் : கண்டசாபு பரியகைப் பாசம்விட் டெறியுமக் காலனுட் பயனுயிர்ப் போயகப் படமோகப் படியிலுற் றாரெனப் பலர்கள்பற் றாவடற் படரெரிக் கூடுவிட் டலைநீரிற் பிரியுமிப் பாதகப் பிறவியுற் றேமிகப் பிணிகளுக் கேயிளைத் துழல்நாயேன் பிழைபொறுத் தாயெனப் பழுதறுத் தாளெனப் பிரியமுற் றோதிடப் பெறுவேனோ

464. தமர குரங்களுங்

ராகம் : ஆனந்தபைரவி அங்கதாளம் (9) 2 + 2½ + 1½ + 1½ + 1½ தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க மரணபக் குவமாநாள் கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க தமுமடற் சுடர்வேலுங் கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து வரமெனக்கருள்கூர்வாய்

463. செயசெய அருணாத்திரி

ராகம் : தேஷ் தாளம் : ஆதி செயசெய அருணாத் திரிசிவ யநமச் செயசெய அருணாத் திரிமசி வயநச் செயசெய அருணாத் திரிநம சிவயத் திருமூலா செயசெய அருணாத் திரியந மசிவச் செயசெய அருணாத் திரிவய நமசிச் செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறி செயசெய அருணாத் திரிதனின் விழிவைத் தரகர சரணாத் திரியென உருகிச் செயசெய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச் சிவசிவ சரணாத் திரிசெய செயெனச் சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத் திருவடி சிவவாக் கியகட லமுதைக் குடியேனோ

462. சிவமாதுடனே

ராகம் : ஆபோகி தாளம் : ஆதி சிவமா துடனே அநுபோ கமதாய் சிவஞா னமுதே பசியாறித் திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய் திசைலோ கமெலா மநுபோகி இவனே யெனமா லயனோ டமரோ ரிளையோ னெனவே மறையோத இறையோ னிடமாய் விளையா டுகவே யியல்வே லுடன்மா அருள்வாயே

461. கீத விநோத

ராகம் : திலங் அங்கதாளம் (8) 2 + 1½ + 1½ + 3 கீத விநோத மெச்சு குரலாலே கீறு மையார் முடித்த குழலாலே நீதி யிலாத ழித்து முழலாதே நீமயி லேறி யுற்று வரவேணும்

460. காணாத தூர

ராகம் : மோகனம் அங்கதாளம் (16) 4 + 4 + 2½ + 2 + 1½ +2 காணாத தூர நீணாத வாரி காதார வாரம தன்பினாலே காலாளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவுமு னிந்துபூமேல் நாணான தோகை நூலாடை சோர நாடோர்க ளேசஅ ழிந்துதானே நானாப வாத மேலாக ஆக நாடோறும் வாடிம யங்கலாமோ

459. குழவியுமாய்

ராகம் : பந்துவராளி அங்கதாளம் (6½) 3 + 1½ + 2 குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி குலவனு மாய்நாடு காடொடு தடுமாறிக் குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட விறகுட னேதூளி யாவது மறியாதாய்ப் பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர பரிவிலி வானாலை நாடொறு மடைமாறிப் பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக பதியழி யாவீடு போயினி யடைவேனோ

458. குமரி காளி (அமுதம் ஊறு)

ராகம் : செஞ்சுருட்டி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) குமரி காளிவ ராகிம கேசுரி கவுரி மோடிசு ராரிநி ராபரி கொடிய சூலிசு டாரணி யாமளி மகமாயி குறளு ரூபமு ராரிச கோதரி யுலக தாரிஉதாரிப ராபரி குருப ராரிவி காரிந மோகரி அபிராமி சமர நீலிபு ராரித னாயகி மலைகு மாரிக பாலிந னாரணி சலில மாரிசி வாயம னோகரி பரையோகி சவுரி வீரிமு நீர்விட போஜனி திகிரி மேவுகை யாளிசெ யாளொரு சகல வேதமு மாயின தாயுமை யருள்பாலா

457. கருணை சிறிதுமில்

ராகம் : ஹம்சானந்தி அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½) கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர் பிசித அசனம றவரிவர் முதலிய கலக விபரித வெகுபர சமயிகள் பலர்கூடிக் கலக லெனநெறி கெடமுறை முறைமுறை கதறி வதறிய குதறிய கலைகொடு கருத அரியதை விழிபுனல் வரமொழி குழறாவன் புருகி யுனதருள் பரவுகை வரில்விர கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள றதுபோக உதறி லெனதெனு மலமறி லறிவினி லெளிது பெறலென மறைபறை யறைவதொ ருதய மரணமில் பொருளினை யருளுவ தொருநாளே

456. கரிமுக

ராகம் : மத்யமாவதி கண்டசாபு 2½ கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் கஜமுகத் தவுணனைக் கடியானை கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக் கனிவயிற் றினிலடக் கியவேழம் அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் தமர்புரிக் கணபதிக் கிளையோனே அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் றியைமிகுத் தறுமுகக் குமரேசா

455. கயல் விழித்தேன்

ராகம் : சிவரஞ்சனி தாளம் : ஆதி கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் கணவகெட் டேனெனப் பெறுமாது கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக் கதறிடப் பாடையிற் றலைமீதே பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப் பறைகள்கொட் டாவரச் சமனாரும் பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப் பரிகரித் தாவியைத் தரவேணும்

454.கடல் பரவு

ராகம் : ஆரபி அங்கதாளம் (10) 3 + 3½ + 3½ கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ

453. இருவினை ஊண்

ராகம் : ஆரபி திச்ர ரூபகம் (5) 2 + 1½ + 1½ இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை யிடரடை பாழ்ம்பொ தும்ப கிதவாரி இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப மிரவிடை தூங்கு கின்ற பிணநோவுக் குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ டுயிர்குடி போங்கு ரம்பை யழியாதென் றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து னுபயப தாம்பு யங்க ளடைவேனோ

452. இருவினை அஞ்ச

ராகம் : பூர்விகல்யாணி மிஸ்ரசாபு (3½) 2 + 1½ இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்க ொ டருள்வாயே

451. இருவர் மயலோ

ராகம் : சாவேரி மிஸ்ரசாபு (3½) 1½ + 2 இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ அணுகாத இருடி அயன்மா லமர ரடியா ரிசையு மொலிதா னிவைகேளா தொருவ னடியே னலறு மொழிதா னொருவர் பரிவாய் மொழிவாரோ உனது பததூள் புவன கிரிதா னுனது கிருபா கரமேதோ

450. இரவு பகல்

ராகம் : சாமா கண்டசாபு (2½) இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞானா அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.

449. இரவியும் மதியும்

ராகம் : குந்தலவராளி மிஸ்ரசாபு 2 + 1½ (3½) இரவியு மதியுந் தெரிவுற எழுமம் புவிதனி லினமொன் றிடுமாதும் எழில்புதல் வருநின் றழுதுள முருகும் மிடர்கொடு நடலம் பலகூறக் கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண் டுயிரினை நமனுங் கருதாமுன் கலைகொடு பலதுன் பமுமக லிடநின் கழலிணை கருதும் படிபாராய்

448. இமராஜன் நிலா

ராகம் : சரஸ்வதி தாளம் : மிஸ்ர ஜம்பை இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே இளவாடையு மூருமொ றுக்கும் படியாலே சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே குமராமுரு காசடி லத்தன் குருநாதா குறமாமக ளாசைத ணிக்குந் திருமார்பா அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.

447. அழுதும் ஆவாவென

ராகம் : சந்த்ரகௌன்ஸ் தாளம் : கண்டசாபு அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக் கவசமா யாதரக் கடலூடுற் றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க் கறியொணா மோனமுத் திரைநாடிப் பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப் பெரியஆ தேசபுற் புதமாய பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப் பெறுவதோ நானினிப் புகல்வாயே

446. அருக்கார் நலத்தை

ராகம் : செஞ்சுருட்டி ஆதி கண்ட நடை (20) அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக் கடுத்தாசை பற்றித் தளராதே அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட் டறப்பே தகப்பட் டழியாதே கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக் கலிச்சா கரத்திற் பிறவாதே கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக் கலைப்போ தகத்தைப் புகல்வாயே

445. பரிமள மிகவுள

ராகம் : தேஷ் அங்கதாளம் (7½) 2 + 2 + 3½ பரிமள மிகவுள சாந்து மாமத முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு முகில்போலே பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலரடி வேண்டி யேவிய பணிவிடை களிலிறு மாந்த கூளனை நெறிபேணா விரகனை யசடனை வீம்பு பேசிய விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு வெகுளியை யறிவது போங்க பாடனை மலமாறா வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது மொருநாளே

444. நாடித் தேடி

ராகம் : சுத்த சாவேரி அங்கதாளம் 1½ + 1½ + 3 (6) நாடித் தேடித் தொழுவார்பால் நானத் தாகத் திரிவேனோ மாடக் கூடற் பதிஞான வாழ்வைச் சேரத் தருவாயே பாடற் காதற் புரிவோனே பாலைத் தேனொத் தருள்வோனே ஆடற் றோகைக் கினியோனே ஆனைக் காவிற் பெருமாளே.

443. குருதி புலால்

ராகம் : ரஞ்சனி அங்கதாளம் 2 + 2½ + 1½ + 2 (8) குருதிபு லாலென்பு தோன ரம்புகள் கிருமிகள் மாலம்பி சீத மண்டிய குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன பொதிகாயக் குடிலிடை யோரைந்து வேட ரைம்புல அடவியி லோடுந்து ராசை வஞ்சகர் கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய அதனாலே சுருதிபு ராணங்க ளாக மம்பகர் சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை துதியொடு நாடுந்தி யான மொன்றையு முயலாதே சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய துரிசற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே

442. ஓல மறைகள்

ராகம் : ஹம்சானந்தி அங்கதாளம் (7½) 1½ + 1½ + 2½ + 2 ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ னவியோமஞ் சாரு மநுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் பெறுவேனோ