Posts

Showing posts from February, 2017

494. அகரமுமாகி

ராகம் : சிந்துபைரவி/பூர்வி கல்யாணி தாளம் : மிஸ்ரசாபு 2 + 1½ (3½) அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

493. விடுங்கை

ராகம் : சங்கராபரணம் அங்கதாளம் (8½) 1½ + 1 + 2 + 2 + 2 விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும் விழுங்கப் பட்டற வேயற லோதியர் விழியாலே விரும்பத் தக்கன போகமு மோகமும் விளம்பத் தக்கன ஞானமு மானமும் வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் விடுநாளில் இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல் கிடந்திட் டுத்தம ரானவர் கோவென இடங்கட் டிச்சுடு காடுபு காமுன மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும் இருந்திட் டுப்பெற வேமதி யாயினும் இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே

492. வாத பித்தமொடு

ராகம் : கானடா தாளம் : ஆதி 4 களை 1½ + 1½ + 1 (32) வாத பித்தமொடு சூலை விப்புருதி யேறு கற்படுவ னீளை பொக்கிருமல் மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ டந்திமாலை மாச டைக்குருடு காத டைப்பு செவி டூமை கெட்டவலி மூல முற்றுதரு மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ளுண்டகாயம் வேத வித்துபரி கோல முற்றுவிளை யாடு வித்தகட லோட மொய்த்தபல வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் சிங்கியாலே வீடு கட்டிமய லாசை பட்டுவிழ வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற வீட ளித்துமயி லாடு சுத்தவெளி சிந்தியாதோ

491. வந்து வந்து

ராகம் : தர்பார் ஆதி 4 களை 1½ + 1½ + 1 (32) வந்து வந்துவித் தூறி யென்றனுடல் வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும் வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி வங்களாலே மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள வந்து சிந்துரத் தேறி யண்டரொடு தொண்டர்சூழ எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர மந்திமேவும் எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி சுந்த ரந்திருப் பாத பங்கயமும் என்றன் முந்துறத் தோணி யுன்றனது சிந்தைதாராய்

490. மனமே உனக்குறுதி

ராகம் : கல்யாணி ஆதி தாளம் மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில் வருவா யுரைத்தமொழி தவறாதே மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு மனமாயை யற்றசுக மதிபாலன் நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல நிலைவே ரறுக்கவல பிரகாசன் நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம நிழலாளி யைத்தொழுது வருவாயே

489. பரம குருநாத

ராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி பரமகுரு நாத கருணையுப தேச பதவிதரு ஞானப் பெருமாள்காண் பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை பகருமதி காரப் பெருமாள்காண் திருவளரு நீதி தினமனொக ராதி செகபதியை யாளப் பெருமாள்காண் செகதலமும் வானு மருவையவை பூத தெரிசனைசி வாயப் பெருமாள்காண்

488. நாடா பிறப்பு

Image
ராகம் : ஷண்முகப்ரியா சங்கீர்ண சாபு (4½) 2 + 1½ + 1 நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி நாயே னரற்றுமொழி வினையாயின் நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்குமுன தருள்பேசி வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை அருள்கூர வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது வாரே னெனக்கெதிர் முன் வரவேணும்

487. நஞ்சினைப் போலு

ராகம் : ஆபோகி தாளம் : கண்டசாபு (2½) நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை நம்புதற் றீதெனநி னைந்துநாயேன் நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை நங்களப் பாசரண மென்றுகூறல் உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல் உன்சொலைத் தாழ்வு செய்து மிஞ்சுவாரார் உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர் உம்பருக் காவதினின் வந்துதோணாய்

486. தறுகணன் மறலி

ராகம் : வலசி அங்க தாளம் (14) 2 + 1½ + 2 + 1½ + 2 + 2 + 1 + 2 தறுகணன் மறலி முறுகிய கயிறு தலைகொடு விசிறீக் கொடுபோகுஞ் சளமது தவிர அளவிடு சுருதி தலைகொடு பலசாத் திரமோதி அறுவகை சமய முறைமுறை சருவி யலைபடு தலைமூச் சினையாகும் அருவரு வொழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற் கருள்வாயே

485. சுடர் அனைய

ராகம் : கௌளை தாளம் : கண்டசாபு சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருபகிரி யிடமேவு முகமாறும் சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய துகிரிதழின் மொழிவேத மணம்வீச அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட அயில்கரமொ டெழில்தோகை மயிலேறி அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை அதிசயமெ னருள்பாட வரவேணும்

484. கைத்தருண சோதி

ராகம் : ஜோன்புரி தாளம் : ஆதி கைத்தருண சோதி யத்திமுக வேத கற்பகச கோத்ரப் பெருமாள்காண் கற்புசிவ காமி நித்யகலி யாணி கத்தர்குரு நாதப் பெருமாள்காண் வித்துருப ராம ருக்குமரு கான வெற்றி யயில் பாணிப் பெருமாள்காண் வெற்புளக டாக முட்குதிர வீசு வெற்றிமயில் வாகப் பெருமாள்காண்

483. குகனே குருபரனே

ராகம் : வசந்தா அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2 குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் கழல்தாராய்

482. காவி உடுத்தும்

ராகம் : மத்யமாவதி தாளம் : மிஸ்ர சாபு 2 + 1½ (3½) காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் தடுமாறிக் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந் திரியாதே சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் தேற வுதிக்கும் பரஞான தீப விளக்கங் காண எனக்குன் சீதள பத்மந் தருவாயே