164. வஞ்சக லோப

ராகம் : தோடி தாளம்: அங்க தாளம் 2 + 1½ + 1½ (5)
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
மஞ்சரி கோவை தூதுபலபாவின்
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
வந்தியர் போல வீணிலழியாதே
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
திண்டிறல் வேல்ம யூர முகமாறும்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொலருள்வாயே
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
பஞ்சற வாது கூறுசமண்மூகர்
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
பண்டித ஞான நீறு தருவோனே
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
குன்றவர் சாதி கூடிவெறியாடிக்
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
குன்றுதோ றாடல் மேவு பெருமாளே.

Learn The Song

Embed Music Files - Embed Audio Files - vanjagalobha

Paraphrase

வஞ்சக லோப மூடர் தம் பொருள் ஊர்கள் தேடி(vanjaga lOba mUdar thamporu LUrgaL thEdi): I go from town to town and seek the money of cunning people who are foolish and greedy,

மஞ்சரி கோவை தூது பல பாவின்(manjari kOvai dhUdhu palapAvin): and and sing a variety of Tamil literary compositions such as Manjari, Kovai and ThUthu,

வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி(vaNpugazh pAri kAri endrisai vAdhu kURi): in a flattering way, comparing them with renowned kings, PAri and KAri (who are great philanthropists and are one the famous seven philanthropists -- or கடை ஏழு வள்ளல்); வண்(vaN): philanthropical, benevolent;

வந்தியர் போல வீணில் அழியாதே(vandhiyar pOla veeNil azhiyAdhE): as Not wasting my time like minstrels in this vain sycophancy, வந்தியர்(vanthiyar): paid panegyrists, retained minstrels, poets;

செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை(senchara NAdha geetha kiNkiNi neeba mAlai): (I would like to sing about) Your reddish lotus feet, the sweetly tinkling anklets, Your garland of kadappa flowers,

திண் திறல் வேல் மயூர முகம் ஆறும்(thiNdiRal vElma yUra mugamARum): strong and powerful spear, Peacock and six holy faces,

செம் தமிழ் நாளும் ஓதி உய்ந்திட(senthamizh nALu mOdhi uyndhida): in chaste Tamil language, every day, and pave way for my redemption.

ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே(nyAna mURu sengkani vAyil Orsol aruLvAyE): To accomplish this, kindly bless me with a gracious word from Your rosy fruit-like mouth that oozes wisdom.

The next four lines refer to the story of the Pandya king whose hunchback was straightened and raging fever brought down by Tirugyana Sambandhar.

பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற (panjava needu kUnum ondridu thApa mOdu panju aRa): PANdiya King's hunchback and his high fever flew away like a piece of cotton; பஞ்சவன்(panchavan): The Pandya king;

வாது கூறு சமண் மூகர்( vAdhu kURu samaNmUgar): the dumb SamaNa priests, who were known to be argumentative,

பண்பு அறு பீலியோடு வெம் கழு ஏற (paNbaRu peeli yOdu vengkazhu vEra Odhu): went to the gallows, in disgrace, with their peacock feathers intact (after losing their debate);

ஓது பண்டித ஞான நீறு தருவோனே(paNditha nyAna neeRu tharuvOnE): when You, as the wise man ThirugnAna Sambandhar, sang the hymns, and distributed the holy ash of True Knowledge to all!

குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு(kunjaram yALi mEvu paimpuna meedhu lAvu): In this greenish millet field, where many elephants and yALis (lion-elephants) roam about, குஞ்சரம்(kunjaram): elephant;

குன்றவர் சாதி கூடி வெறி ஆடி(kundravar jAdhi kUdi veRiyAdi):the hunter tribes assemble and dance in frenzied ecstasy;

கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு(kumbida nAdi vAzhvu thandhava rOdu veeRu): and then they worship You seeking a blissful life. You grant their boons, standing tall in their esteem!

குன்று தொறாடல் மேவு பெருமாளே.(kundrutho RAdal mEvu perumALE.): You play around in all mountains with relish, Oh Great One! ():

Comments