Posts

481. காய மாய

ராகம் : ஹம்சானந்தி தாளம் : 1½ + 1½ + 1½ + 2 + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 1½ + 2 (19) காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்பு தந்த னிற்கு ரம்பை கொண்டுநாளுங் காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி யப்ர மந்த டித்த லைந்து சிந்தைவேறாய் வேயி லாய தோள மாமட வார்கள் பங்க யத்து கொங்கை யுற்றி ணங்கி நொந்திடாதே வேத கீத போத மோனமெய் ஞான நந்த முற்றி டின்ப முத்தி யொன்று தந்திடாயோ

480. கனகசபை மேவு

ராகம் : கரஹரப்ரியா தாளம் : ஆதி கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் பெருமாள்காண்

479. கட்டி முண்டக

Image
ராகம் : முகாரி தாளம் : ஆதி 4 களை (32) கட்டி முண்டகர பாலி யங்கிதனை முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி கத்த மந்திரவ தான வெண்புரவி மிசையேறிக் கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர் பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ டசையாமற் கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத முறமேவித் துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ

478. எழுகடல் மணல்

ராகம் : அடாணா தாளம் : மிஸ்ர சாபு 2 + 1½ (3½) எழுகடல் மணலை அளவிடி னதிக மெனதிடர் பிறவி அவதாரம் இனியுன தபய மெனதுயி ருடலு மினியுடல் விடுக முடியாது கழுகொடு நரியு மெரிபுவி மறலி கமலனு மிகவு மயர்வானார் கடனுன தபய மடிமையு னடிமை கடுகியு னடிகள் தருவாயே

477. எலுப்புத் தோல்

Image
ராகம் : சிந்துபைரவி தாளம் : ஆதி எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ டண்டவாதங் குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ அன்புதாராய்

476. இருளுமோர்

ராகம் : வாசஸ்பதி தாளம் : மிஸ்ர சாபு (3½) இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ னிடம தேறியெ னிருநோயும் எரிய வேமல மொழிய வேசுட ரிலகு மூலக வொளிமேவி அருவி பாயஇ னமுத மூறவுன் அருளெ லாமென தளவாக அருளி யேசிவ மகிழ வேபெற அருளி யேயிணை யடிதாராய்

475. இருவினையின்

ராகம் : ஆரபி அங்கதாளம் (9) 2½ + 1½ + 2 + 3 இருவினையின் மதிம யங்கித் திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் கெளியோனே கனகசபை மருவு கந்தப் பெருமாளே.