Saturday, 28 March 2015

115. இருப்பவல் திருப்புகழ்

ராகம்: வசந்தா தாளம்: ஆதி கண்ட நடை(2௦)
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ

Thursday, 26 March 2015

114. அரகரசிவன்

ராகம்: நாதநாமக்ரியா/ஷண்முகப்ரியாதாளம்: ஆதி
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவணபவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அனலென எழவிடுமதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள் முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி களிகூர

113. அமைவுற்றடைய

ராகம்: காபி தாளம்: ஆதி திச்ர நடை (12)
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக்கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக்கடவேனோ

Friday, 20 March 2015

112. மகரகேதனத்தன்

ராகம்: அமிர்தவர்ஷிணிதாளம்: திச்ர துருவம்-திச்ர நடை (16½)
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டுநெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் மடமாதர்
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்துவிடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்பதொருநாளே

Thursday, 19 March 2015

111. பாதிமதி நதி

ராகம்: காபி தாளம்: மிஸ்ர சாபு (1½ + 2)
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளியகுமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடியமணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிருமருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபடஅருள்வாயே

110. நிறைமதி

ராகம்: ஹம்சானந்தி தாளம்: ஆதி
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனுநிகராலே
உறவுகொள் மடவர்களுறவாமோ
உனதிரு வடிவியினியருள்வாயே

Wednesday, 18 March 2015

109. நாவேறு பாம ணத்த

ராகம்: யதுகுல காம்போதி தாளம்: அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்றுவகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்தநெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு னருள்கூர
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொலருள்வாயே

108. நாசர்தம்

ராகம்: காபி தாளம்: அங்க தாளம் (13½)
(2½ + 2½ + 2½ + 1½ + 1½ + 3)


நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்துசுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்றுபணிவேனோ

107. தெருவினில்

ராகம்: ஆனந்தபைரவிதாளம்: சதுஸ்ர த்ருவம்
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும்வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ் சலித்தும் விடலாமோ

106. செகமாயை

ராகம்: சுநாத வினோதினி தாளம்: ஆதி
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பமுடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்திலுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்திதரவேணும்

Monday, 16 March 2015

105. சுத்திய நரப்புடன்

ராகம்: மாயாமாளவ கௌளை தாளம்: சதுஸ்ர த்ருவம்
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
சுக்கிலம்வி ளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர்சங்குமூளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிகவங்கமூடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில்பஞ்சபூதம்
எத்தனைகு லுக்ககையுமி னுக்கையும னக்கவலை
யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில்மங்குவேனோ

Saturday, 14 March 2015

104. சரணகமலாலயம்

ராகம்: கல்யாணி தாளம்: 2½ + 1&frav12; + 1½
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்கஅறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்றகுமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்கபெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்தவடிவேலா

103. குமர குருபர

ராகம்: பிலஹரி தாளம்: 2 + 1½
குமர குருபர முருக சரவண
குகசண் முககரி பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குருமணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதினமுனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுரலறியாயோ

Thursday, 12 March 2015

102. காமியத்து அழுந்தி

ராகம்: பீம்பளாஸ் தாளம்: ஆதி
காமியத் தழுந்தியிளையாதே
காலர்கைப் படிந்துமடியாதே
ஓமெழுத்தி லன்புமிகவூறி
ஓவியத்தி லந்தமருள்வாயே
தூமமெய்க் கணிந்தசுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்தமயில்வீரா
ஏரகத் தமர்ந்தபெருமாளே.

Wednesday, 11 March 2015

101. கறைபடும் உடம்பு

ராகம்: யமுனா கல்யாணிதாளம்: 2½ + 1½ +2
கறைபடுமு டம்பி ராதெனக்
கருதுதலொ ழிந்து வாயுவைக்
கருமவச னங்க ளால்மறித்தனலூதிக்
கவலைபடு கின்ற யோககற்
பனைமருவு சிந்தை போய்விடக்
கலகமிடு மஞ்சும் வேரறச்செயல்மாளக்
குறைவறநி றைந்த மோனநிர்க்
குணமதுபொ ருந்தி வீடுறக்
குருமலைவி ளங்கு ஞானசற்குருநாதா
குமரசர ணென்று கூதளப்
புதுமலர்சொ ரிந்து கோமளப்
பதயுகள புண்ட ரீகமுற்றுணர்வேனோ