ta The Nectar of Thiruppugazh: June 2013

Saturday, 22 June 2013

75. ஞானம் கொள்

ராகம்: பிலஹரி தாளம்: அங்க தாளம் (5½) 2½ + 1½ + 1½
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாயவரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவிவிளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகியிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாடஅருள்தாராய்

Friday, 21 June 2013

74. சுருதிமுடி மோனம்

ராகம்: நாட்டைகுறிஞ்சி தாளம்: சதுச்ர த்ருவம் கண்ட நடை
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுதலொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடையஉணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல்வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉனதருள்தாராய்

Sunday, 16 June 2013

73. சீறலசடன் வினைகாரன்

ராகம்: ஹம்சனாதம் தாளம்: ஆதி
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடிபவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலிஎவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியுனடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள்புரிவாயே

Saturday, 15 June 2013

72. சீயுதிரம்

ராகம்: வலசி தாளம்: 1½ + 1 + 1½
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்துநிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்றுமடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்புபுரிவாயே

Thursday, 13 June 2013

71. சிவனார் மனம்

ராகம்: ஜோன்புரி/ சங்கராபரணம் தாளம்: கண்டசாபு(2½) 1+ 1½
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய்குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின்
செயலேவி ரும்பியுளம்நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலெனவரவேணும்