75. ஞானம் கொள்
naadaNdi nama sivaaya varaiyERi
naavinba rasama dhaana aanandha aruvi paaya
naadhanga Loduku laavi viLaiyaadi
oonagaL uyirgaL mOga naan enbadh aRivilaamal
Omangi uruva maagi iruvOrum
Orandha maruvi nyaana maavinjai mudhugi nERi
lOkangaL valama dhaada aruLthaaray
thEnankoL idhazhi thaagi thaarindhu salila vENi
seerangan enadhu thaadhai orumaadhu
sErpanja vadivi mOgi yOgankoL mavuna jOthi
sErpangin amala naathan aruLbaala
kaanangaL varaikaL theevu OdhangaL podiya neela
kaadandha mayilil Eru murugOnE
kaamankai malargaL naaNa vEdampeN amaLi sErvai
kaaNengaL pazhani mEvu perumaaLE.
Learn the Song
Raga Bilahari (Janyam of 29th mela Shankarabaranam)
Arohanam: S R2 G3 P D2 S Avarohanam: S N3 D2 P M1 G3 R2 SParaphrase
அருணகிரிநாதர் முருகப் பெருமானுடன் இரண்டறக் கலந்து, மெய்ஞ்ஞானக் புரவியின் மீது அமர்ந்து உலகெங்கும் வியாபித்து நிற்க அருள் வேண்டும் பாடல்.
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நம சிவாய வரை ஏறி (
gnAnam koL poRigaL kUdi vAnindhu kadhir ilAdha nAdaNdi nama sivAya varai yERi) : All my organs that perceive knowledge must converge; they should reach the cosmos that is bright without a sun or a moon. Then they should climb to the top of the Mount NamasivAya. வரை (varai) : mountain; ஐம்புலன்களும் ஞான நிலையை நாடி நிற்பதாய், அதாவது ஞானேந்திரியங்கள் ஒருவழிப் பட்டு நின்று, ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சந்திர சூரியர் இன்றியே ஒளிசெய்யும் நாட்டினை அடைந்து, நமசிவாயம் என்ற ஐந்தெழுத்தாகிய மலையின்மீது ஏறி, (ஒப்பு நோக்குக: இருளு மோர்கதி ரணுகொ ணாதபொனிடம தேறி (இருளுமோர்)
ஞானேந்திரியங்கள் வெளி உலக பொருட்களைக் குறித்த அறிவை நமக்கு தரும் உடல் உறுப்புகள் ஞானேந்திரியங்கள் ஆகும். கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல் ஆகிய உடல் உறுப்புக்களின் மூலம் வெளி உலக அறிவை நாம் அடைவதால், இந்த உடலுறுப்புகள் ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மனம் பொறிகள்பால் கவரப்படும். பொறிகளை புலன்களின் வழிப் போதல் தவிர்த்து, உள்ளத்தை ஒருநெறி படுத்தும் மெய்யடியார்களின் சிந்தனையுள் அமுதாகிய பெருமான் எழுந்தருளுவர்.
நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி (nA inba rasam adhAna Anandha aruvi pAya nAdhangaLodu kulAvi viLaiyAdi) : The waterfall of bliss should flow sweetening my tongue; In that Siva-yogic trance, they should mingle with several sounds and play around.(பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபிப்பதால்) நாக்கிற்கு இனம் அளிக்கும் ஆனந்தமான அருவியில் மூழ்கி அந்த மந்திர ஓசைகளோடு நெருங்கி; பொறி புலன்கள் ஒன்றி சித்திரதீபம் போல் பேசா அநுபூதியில் தன் வசமிழந்து நிற்பார்களுக்கு அமிர்தரசமான ஆனந்த வெள்ளம் பொங்கித் ததும்பிக் கரை புரண்டோடுகின்றது.
ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி (UnangaL uyirgaL mOga nAn enbadhu aRivu ilAmal Omangi uruvam Agi ) : Consciousness about my body, that lusted over flesh and skin, should be gone. It should take the form of the effulgent PraNava ManthrA "OM", and; ஊனமாகிய உடல் பற்றும், மனைவி பிள்ளை பிற மாதர் என்ற உயிர்கள் மீதுள்ள மோகமும் 'நான்' என்ற அகங்காரமும் ஒழிந்து என் நினைவெல்லாம் 'ஓம்' என்ற ஜோதியில் ஒன்றி, ஊனங்கள் = ஊன் பொதிந்த உடம்புகள்;
இருவோரும் ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகி(ல்) ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள் தாராய் (iruvOrum Or andham maruvi nyAna mAvinjai mudhugil ERi lOgangaL valam adhu Ada aruL thAray ) : both of us, namely myself (JeevAthma) and You (ParamAthma), should merge as one! Then I should mount on the horseback of True Knowledge and majestically go around all the world by Your Grace! நீயும் நானும் ஒன்று என்ற அத்வைத நிலை அடைந்து ஓம்கார பொருளான குதிரையாகிய மயிலின் முதுகில் ஏறி உலகங்களை வலம் வர அருள் தாராய். ஓர் அந்தம் மருவி = இரண்டறக் கலந்து, ஒன்று சேரும் முடிவை அடைந்து; விஞ்சை = கல்வி, ஞானம், வித்யா, Spiritual knowledge;
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை (thEnam koL idhazhi thAgi thAr indhu salila vENi seer angan enadhu thAdhai ) : On His tresses, He wears beautiful kondRai (Indian laburnum) flowers oozing with honey, garland of Aththi (mountain ebony) flowers, the crescent moon and River GangA; He has a fine body; He is my Father; தா(த)கி (thA(tha)gi) : mandara or aththi; தார் ( thAr) : garland; இந்து (indu ) : moon; சலில (salila) : water, Ganga;
ஒரு மாது சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா (oru mAdhu sEr panja vadivi mOgi yOgam koL mavuna jOthi sEr pangin amala nAthan aruL bAla) : She is the unique mother; She is a pretty combination of Five MahA Sakthis; She is the beloved of SivA; She is the Light seen by the silent Yogis deeply immersed in Siva-yOgA; and She has shared half of His body; and He is the purest Leader, Lord SivA. You are the Son of that SivA! பஞ்சவடிவி = அம்பிகை ஐந்து வர்ணங்களை உடையவள்: பிங்கலை (பொன்னிறம்), நீலி (நீல நிறம்), செய்யாள் (செந்நிறம்), வெளியாள் (வெண்ணிறம்), பசும் பொன் (பச்சை). பஞ்சபூத வடிவி எனவும் பொருள் கொள்ளலாம். மோகி = ஞான மயமாக இருக்கிற ஈஸ்வரனை லோக க்ஷேமத்துக்காக மோகிக்க வைத்த மோகினி; யோகங் கொள் மவுன ஜோதி = சிவயோக மேவிய மௌன நிலையுடையவர் காணும் அருட்பெருஞ் சோதியுமாகிய பார்வதி தேவியார்,
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய ( kAnangaL varaikaL theevu OdhangaL podiya) : Forests, mountains, islands and seas were all shattered when
நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே ( neela kAdu andha mayilil Eru murugOnE) : You mount the beautiful blue peacock that struts in the forest! காடு அந்த = வனத்தில் உலாவுவதும் அழகியதும் ஆகிய,
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே. (kAman kai malargaL nANa vEdam peN amaLi sErvai kAN engaL pazhani mEvu perumALE.) : You united with VaLLi, the damsel of the hunters, putting the flowery arrows of Manmatha to shame, in the flowery bed at our favourite place Pazhani, which is Your abode, Oh Great One!
ஓம் என்ற பிரணவ ஒலி
"ஓம்' எனும் ஒலி சூரியனின் வளி மண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் தன் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.
Comments
Post a Comment