ஏறுமயில்
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
Learn The Song
In Ragam Mohanam
In Ragam Thodi
In Ragam Ananda Bhairavi
Paraphrase
ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே (ERumayil ERiviLai yAdumugam ondRE : One face of Yours mounted the mount-worthy peacock and flew around sportively; தாவி ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான்.
Significance : One face mounts the peacock that is my mind and plays with my thoughts. "maruvum adiyaargaL" (thirumagal ulavum) ஒரு முகம் என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடும். மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் (திருமகள் உலாவும்)
ஏறு (சிவபெருமானுடைய வாகனமான எருது) + மயில் = இரண்டிலும் ஏறி
ஏறு (உயரமான) மயில் மீது ஏறி
ஏறு (போர்) வாகன மயில் மீது ஏறி
ஏறு (ஆண்) மயில் மீது ஏறி
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே (eesarudan njAna mozhi pEsu mugam ondRE) : One face of Yours preached True Knowledge to Lord SivA;
One face comes as my Master and preaches True Knowledge to me;
சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம் தான்.
(கருத்து)ஒரு முகம் எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளும்;
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே (kURumadi yArgaLvinai theerththamugam ondRE) : One face of Yours removed the deeds of the devotees who sang Your praise;
One face suppresses my two slags, namely, egoism and possessiveness; and
உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்து வைப்பது உன் ஒரு முகம் தான்.
(கருத்து) ஒரு முகம் என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளும்;
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே (kundRuruva vElvAngi nindRamugam ondRE) : One face of Yours stoically directed the spear to pierce through the mount Krouncha;
You wield Your spear to destroy my delusion and attachments; தாரகன் என்னும் மாய அரக்கனின் மலையைப் பொடியாக்கி, வேல் பிடித்து நிற்கும் ஒரு முகமும்
(கருத்து) ஒரு முகம் என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளும்;
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே (mARupadu sUrarai vathaiththa mugam ondRE) : One face of Yours destroyed the rebellious demons;
kindly suppress my two slags, namely, egoism and possessiveness;
உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம் தான்.
(கருத்து) ஒரு முகம் என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளும்;
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே (vaLLiyai maNam puNara vandha mugam ondRE) : One face of Yours came forward to marry VaLLi in wedlock;
take me over to keep me affixed to Your hallowed feet.;
வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம் தான்.
ஒரு முகம் என்னை உன்னோடு புணர்த்தி அருளும்.
ஆறு முகமான பொருள் நீ அருளல் வேண்டும் (ARumugamAna poruL nee aruLal vENdum) : Kindly explain to me the meaning and the significance of Your six faces.
Sivan's five faces bless the devotees with worldly wealth and Uma Devi's face offers spiritual wealth and solace.
ஆறுமுகம் ஆன பொருள் நீ தான்! ஆறுமுகம் ஆன பொருளான உன் தத்துவத்தை நீ உபதேசித்து அருள வேண்டும். இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின் திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து இகபர செளபாக்கியத்தை அருளும். இவ்வாறு இறைவனது ஆறு திருமுகங்களும் எனக்கு கருணை புரியட்டும்.
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே ( Adhi aruNAsalam amarndha perumALE.) : Oh Lord, You are seated in the old town of ThiruvaNNAmalai, Oh Great One! அருணாசலம் என்னும் தொன்மை வாய்ந்த திருவண்ணாமலையில் கோயிலில் வீற்றிருக்கும் கம்பத்து இளையனாரே!
திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது; மக்கள் அடி/அணி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.
இந்த ஆலயமும் அண்ணாமலையார் ஆலயத்தை போன்றே மிக மிக பழமையானது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு முன்பே இந்த ஆலயம் உருவாகி இருக்கலாம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
Comments
Post a Comment