Search with Song Number

Ramyana in Thiruppugazh (3)

Read the previous posts:

 1. In விடுங்கை, the poet Saint Arunagirinathar describes in great detail not only the Vali vatham but also the slaying of Ravana.

  கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
  நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
  குரங்கைச் செற்றும கோததி தூளெழ நிருதேசன்

  குலங்கட் பட்டநி சாசரர் கோவென
  இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
  குமண்டைக் குத்திர ராவண னார்முடி அடியோடே

  பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
  ப்ரியங் கொட் டக்கநன் மாமரு கா

Ramayana in Thiruppugzh (2)

Read here the first part of the trilogy on Ramayana as described in Thiruppugazh.....

The next episodes that find mention in a few of the 503 Thiruppugazh songs taught by Guruji Shri A.S.Raghavan:

 1. Rama and Sita, along with Lakshmana, live in the Panchavati hermitage where Surpanakha comes across them and is infatuated with the handsome brothers. Angered by their spurning her love, Surpanakha attacks Sita, and Lakshmana, obeying Rama's orders, chops off Surpanakha's nose. Surpanakha stomps into Ravana's court, and incites Ravana to force Sita to marry him.

  மூக்கறை மட்டைம காபல காரணி
  சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
  மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி
  மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
  பேற்றிவி டக்கம லாலய சீதையை
  மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு முகிலேபோய்
  மாக்கன சித்திர கோபுர நீள்படை
  வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
  மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே

  Notice that the poet refers to Surpanakha as the sister of the virtuous Vibhishana rather than the depraved Ravana. This refers to the events in the past lives of Surpanakha and Vibhishana, who were Chandrachuda and Sumukhi in their previous births.

Ramayana in Thiruppugazh (1)

References to Ramayana have occurred in more than 150 Thiruppugazh songs, but in this post we will cover only a few of them from the 503 songs that Guruji Shri A.S.Raghavan has taught us.

The objective of Rama's incarnation was to annihilate asuras and their king, the demon Ravana. Asuras complain to Vishnu about the atrocities committed by Ravana and seek His asylum. Lord Vishnu then decides in what forms various devas should be born on earth and assist Him in this mission. Accordingly, devas take birth as vanaras in Kishkintha with Surya and Indra as Sugriva and Vali respectively and Rudra as Hanuman; Brahma descends on earth as Jambhavan, the king of bears and Agni as Neela. This is described beautifully in karuvadainthu (கருவடைந்து)

Vamana Avathaaram in Thiruppugazh

Though his Ishta devata was Lord Murugan, Saint Arunagirinathar showed equal love for Vishnu and Shiva. In his poems he decribes the divine sports of Vishnu and then addresses Murugan as His beloved nephew, just as he sings the glories of Shiva and eulogises Murugan as His son. In this way, he brings about a rapproachment between Vaishnavites and Shaivites.

The Vamana Avatar is the first incarnation of Lord Vishnu as a human and the fifth of the Dasavatars. In the Vamana Avatar Lord Vishnu incarnates as Mahabali, the grandson of Prahlada, a great ruler who is loved by his people. Mahabali learns the Vedhas from his grandfather Prahlada and from the great Asura teacher Shukracharya.

Mahabali performs severe penance to please Lord Brahma. Lord Brahma grants him invincibility against Indra. Subsequently, Bali defeats Indra and takes over the heavens. However, Bali remains always righteous and is devoted to Lord Vishnu. Indra begs Lord Vishnu to help him.

Lord Vishnu incarnates as the son of Aditi and Kashyap, who performs his sacred thread ceremony and teaches him all the scriptures.

Meanwhile Mahabali has performed 99 Ashwamedha Yagna and has to perform just one more yagna after which he can be crowned as the King of the Gods.

Some of Saint Arunagirinathar's Prayers

In many of the poems, Saint Arunagiri deplores the life of humans who fritter away their youth in immoral pursuits under the sway of lust, despite knowing that the bodies, made of the five elements, are subject to degeneartion and disease. In the poem சேமக்கோமள, he wonders:
காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான்

Instead, he implores the lord to give him the mind that seeks His feet alone so that he could spend his time in the service of the Lord in the company of His true devotees.

 1. இரு நல்லவாகும் உனது அடிபேண இன வல்லமான மனது அருளாயோ (மருமல்லியார்)
 2. மாமணி நூபூர சீதள தாள் தனில் வாழ்வுற ஈவதும் ஒரு நாளே (ஏவினை நேர் விழி)
 3. யானுமுன் இணையடிகள் பாடி வாழ என் நெஞ்சில் செஞ்சொல் தருவாயே (அருணமணி)
 4. இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே (துன்பம் கொண்டு)
 5. தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய் சிந்தை வர என்று நின் தெரிசனை பட அருள்வாயே (அந்தகன் வரும்)
 6. எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
  சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
  என்றன் முந்துறத் தோணி யுன்றனது சிந்தைதாராய் (வந்து வந்து வித்தூறி)

Quiz 2

In the first Thiruppugazh Kaitthala niraikani (கைத்தல நிறைகனி), Saint Arunagirinathar sings:

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே

It is believed that Agastya dictated the treatise on Tamil grammar to Vinayaka who transcribed them on the Meru mountain. muththamizhadaivu (முத்தமிழடைவு) could also mean Mahabharatha. In the Thiruppugazh orupadhumiru (ஒருபதுமிரு), Arunagirnathar addresses Murugan as the younger brother of Ganapathi who wrote the old language (or Mahabharatha?) (on the Meru mountain).

பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
எழுதிய கணபதி மிளையோனே

In the preamble to Seval Viruththam (kappu), Arunagirinathar specifically mentions that Vinayaka writes the epic story of Mahabharatha on the Meru mountain with a piece of the tusk that He chops out forcibly out of himself.
வன்கோடொன்றை ஒடித்து பாரதம் மாமேருவில் எழுதி (சேவல் விருத்தம் - காப்பு)

Out of the 503 Thiruppugazh songs that Guruji taught us, there is one song in which Arunagirinathar specifically mentions that Vinayaka writes with the tusk on the mighty mountain what Sage Vyasa dictated faultlessly. Which song is it?

QUIZ 1

The Thiruppugazh journey that I undertook more than three years ago has just completed its first phase. When I started, I never had the confidence that I would take the task of translating all the 503 songs that Guruji Shri A.S.Raghavan taught us to its completion. I know I could have done a better job, but I was afraid that if I spent inordinate time in refining the work, I'd lose the momentum. As we now march ahead, I would regularly visit all my posts and improve them.

The plan I have for the second phase calls for a lot of reader participation. So please brace yourself for a more intense study of Thiruppugazh in the days ahead. To kickstart, I have a quiz for which there could be more than one answer for each of these questions. You can give your answer as a comment in Tamil or English.

 1. In which song does Saint Arungirinathar say that Murugan resides in the minds of those who constantly meditate on Ganesha? கணபதியை இடை விடாது சிந்திப்பவர் மனதில் முருகன் எப்போதும் வாழ்வார் என்று எந்த பாட்டில் அருணகிரியார் குறிப்பிட்டுள்ளார்?
 2. In which song is it stated that Ganesha sucked the water in the milky ocean? Why was this done? எந்த பாட்டில் விநாயகர் கடல் நீரை துதிக்கையால் உறிஞ்சினது குறிப்பிடப்பட்டுள்ளது? இந்த நிகழ்ச்சியின் பின்னணி என்ன?'
Let your answers keep flowing!

503. முத்து நவரத்ன


ராகம் : வலசி தாளம்: 1½ + 1 + 1½ + 1
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதருவெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுரரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி
பற்குனனை வெற்றிபெறரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம்அருள்வாயே

502. முறுகு காள


ராகம்: கமாஸ் தாளம்: ஆதி திச்ர நடை
முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
முளரி வேரி முகைய டர்ந்தமுலைமீதே
முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து
முகமொ ராறு மிகவி ரும்பி அயராதே
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
அடைய வாரி மிசைபொ ழிந்துனடிபேணி
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
னடிமை யாகு முறைமை யொன்றைஅருள்வாயே

501. வாதினை அடர்ந்த


ராகம்: சக்ரவாஹம்/குந்தலவராளி தாளம்: ஆதி
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்துதெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்துபணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்றுதெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்பதறியேனே

500. துடிகொள் நோய்


ராகம்: சங்கராபரணம்தாளம்: ஆதி திச்ர நடை
துடிகொ ணோய்க ளோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இரும லீளை வாத பித்தமணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமு ளாநு பூதி பெற்றுமகிழாமே
உடல்செய் கோர பாழ்வ யிற்றை
நிதமு மூணி னாலு யர்த்தி
யுயிரி னீடு யோக சித்திபெறலாமே
உருவி லாத பாழில் வெட்ட
வெளியி லாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்ம முறுவேனோ

499. தலைமயிர்


ராகம்: யமுனா கல்யாணிதாளம்: ஆதி
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் டுயிர்போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக்கருள்தாராய்

498. சீலமுள தாயர்


ராகம்: சிமேந்திரமத்யமம்தாளம்: அங்கதாளம் (2½ + 1½ + 1½ (5½)
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு தடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்றுதெருவூடே
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை மெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு புரிவாயே

497. காரணமதாக


ராகம் : ஹம்சத்வனி    தாளம்: அங்கதாளம் (8½)
2½ + 1½ + 1½ + 3
காரணம தாக வந்துபுவிமீதே
காலனணு காதி சைந்துகதிகாண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநட மேபு ரிந்து வருவாயே

496. கருவாகியெ


ராகம்: தேனுகாதாளம்: திஸ்ர த்ரிபுடை
கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி நரைமாதர்
கையிலேவிழ வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினிலினிதாகித்
தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனைநினையாத
சதுராயுன தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வதொருநாளே

495. ஆசை நாலு


ராகம்: பீம்பளாஸ் தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 1 + 1½ + 1 + 1½ + 1 (9)
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின்விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிருநந்தியூடே
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய்

154. சரியையாளர்க்கும்

ராகம் : வசந்தா தாளம் : கண்டசாபு (1 + 1½) சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் சகலயோ கர்க்குமெட் டரிதாய சமயபே தத்தினுக் கணுகொணா மெ...

Popular Posts