500. துடிகொள் நோய்
Learn The Song
Paraphrase
துடி கொள் நோய்களோடு வற்றி (thudi koL nOykaLOdu vatRi) : Squirming in pain caused by several painful diseases that drains me out totally; துடிதுடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றிப் போய்,
தருண மேனி கோழை துற்ற (tharuNa mEni kOzhai thutRa) : the once robust physique now suffers with thick slimy mucus in the throat, இளமையாக இருந்த மேனியில் கபமும் கோழையும் மிகுந்து,
இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் (irumal eeLai vatha piththam aNugAmal) : in order that cough, wheezing, rheumatism and biliousness do not chase me, இருமலும், காச இழுப்பும், வாதமும், பித்தமும் என்னை அணுகாதபடி,
துறைகளோடு வாழ்வு விட்டு (thuRaigaLOdu vAzhvu vittu) : I have to renounce this worldly life – be it family life or ascetic, இல்லறம், துறவறம் என்ற வகைப்படும் இந்த வாழ்வை விட்டு,
உலக நூல்கள் வாதை அற்று ( ulaga nUlkaL vAthai yatRu) : and keep away from the burden of learning all pedantic works in this world. உலகிலுள்ள சாத்திர நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கி,
சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே ( sugamuLa anubUthi petRu magizhAmE) : Rather than experiencing and enjoying the blissful self-realisation சுகத்தைத் தரும் சுய அனுபவம் அடைந்து மகிழாமல்,
உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி (udalsey gOra pAzhvayitRai nithamum UNinAl uyarththi) : I have been feeding the wretched stomach every day with varieties of food to fatten this body. உடலை வளர்க்கும் கோரமான பாழும் வயிற்றுக்கு நாள்தோறும் உணவு வகைகளைத் தந்து உடலைக் கொழுக்கச் செய்து,
உயிரி நீடு யோக சித்தி பெறலாமே (uyiri needu yOga siththi peRalAmE) : should I merely extend the life and consider it a yogic achievement? வெறும் ஆயுளை நீட்டிக்கும் யோக சித்தியைப் பெறலாமோ?
உருவிலாத பாழில் வெட்ட வெளியில் ஆடு நாத நிர்த்த (uruvilAtha pAzhil vetta veLiyil Adu nAtha nirththa) : In the cosmos that has no shape or form, You dance liltingly to the rhythmic music! உருவம் கடந்த பாழ்வெளியில் ஆகாயமாகிய வெட்டவெளியில் இசையுடன் ஆடுகின்ற நடனனே,
உனது ஞான பாத பத்மம் உறுவேனோ (unathu njAna pAtha pathmam uRuvEnO ) : Will I ever be able to attain Your hallowed dancing feet that symbolise True Knowledge? உனது கூத்தாடும் ஞான மயமான திருவடித் தாமரையை நான் அடைவேனோ?
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு (kadithu lAvu vAyu petRa makanum vAli sEyu) : Hanuman, the son of VAyu (God of Air), who is capable of leaping with immense speed, and Angathan, the son of VAli, வேகமாகத் தாவ வல்லவனும், வாயு பெற்ற மகனுமான அநுமனும், வாலியின் மகன் அங்கதனும்
மிக்க மலைகள் போட ஆழி கட்டி (mikka malaikaL pOda Azhi katti) : built a bridge to LankA by throwing many mountains on the sea; நிரம்ப மலைகளைக் கடலின் மீது போட்டுக் கட்டிய அணை வழியாக
இகலூர் போய்க் களமுற ஆனை தேர் நுறுக்கி (igalUr pOyk kaLamuRa Anai thEr nuRukki) : through that bridge He went to the enemy's land, destroyed armies of elephants and chariots in the battlefield பகைவனது ஊராம் இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும், தேர்ப்படையையும் தூளாக்கி,
தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே (thalaigaL ARu nAlu petRa avanai vALi yAla daththan marugOnE) : and killed Ravana, the ten-headed one, with His arrow; He is Rama, and You are His nephew! பத்துத் தலைகள் கொண்ட ராவணனை அம்பினால் கொன்ற அண்ணல் ராமனின் மருகனே,
முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக (muduku veera sUra pathmar thalaiyin mULai neeRu pattu mudivathAga) : The menacing demons, namely SUran, Padman, Singamukan and Tarakasuran were killed, with their brains shattered to pieces, வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரின் தலைகளில் உள்ள மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற,
ஆடு நிர்த்த மயில் வீரா (Adu nirththa mayil veerA) : and then Your peacock danced a special dance (called thudi), Oh valorous One!(துடிக் கூத்து) நடனம் ஆடிய மயிலின் மீதமர்ந்த வீரனே,
முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் முருக வேல (munivar thEvar njAna mutRa punitha sOlai mAmalaikkuL muruga vEla) : Many sages and celestials attained enlightenment in this impeccable grove at this great mountain (PazhamuthirchOlai), which is Your abode, Oh MurugA with the Spear! முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்) வீற்றிருக்கும்
த்யாகர் பெற்ற பெருமாளே. (thyAgar petRa perumALE.) : You are the son of ThyAgar (the Sacrificer, SivA), Oh Great One! வேல் முருகனே, தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே.
Wonderful
ReplyDelete