Posts

Showing posts from July, 2018

இருவினை ஊண் — J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation of the song iruvinai UN by clicking the underlined hyperlink. நினைத்தவுடன் முக்தி தரும் அருணையின் முத்துக் குமரா சரணம். "இருவினை ஊண்" என்று தொடங்கும் திருவருணைப் பாடல் முன்னுரை சிவலோகமோ என பிரமிக்க வைக்கும் அருணையில் அமரர் குழாமும், முனி புங்கவர்களும், ரிஷிகளும் வந்து குவிந்து, கை குவித்து, அரனாரையும், முருகவேனளயும் தொழுது நிற்கும் சிறப்புச் சொல்கிறார் அருணகிரிநாதர். சாட்சாத் முருகனே "அருணகிரி நாதா" எனப் பெயர் சூட்டி, அவரை அன்புடன் அழைத்த தலம் அல்லவா! துன்பக் கடலில் அலைப்புண்டு தத்தளிக்கும் மரக்கலம் போன்ற இந்த நிலையற்ற உடல் மேல் மாந்தர்க்கு ஏன் இந்த மயக்கம் எனப் பரிதவிக்கிறார். மயக்கங்கள் நீங்கி முருகன் மலர்ப் பாதம் கிடைக்குமோ என ஏங்குகிறார். அருணையில் அவன் ஆட்கொணட பின்னரும் ஏன் இந்தக் கலக்கம்? வினைகளை வேரறுக்க இடையறாமல் வேலவனைத் தொழ வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகிறார். சைவ வைணவ பேதம் காட்டாமல் ஆடல் அரசனையும், அண்டம் உண்டவனையும் பாடும் பாடல

கரிமுகக் கடக் களிறு — J.R. விளக்கவுரை

By Smt.Janaki Ramanan, Pune For an explanation of the song in English, click the underlined hyperlink karimugak kada அருணையின் கருணை மழையே சரணம். "கரிமுகக் கடக் களிறு" என்று தொடங்கும் திருவருணைப் பாடல். முன்னுரை முருகன் அருட் பார்வை பட்டுவிட்டால் வறண்டு கிடக்கும் நிலம், மக்கள் மனம் எல்லாம் வளம் கொழிக்கும் இடமாக மாறிவிடும் அல்லவா! அவன் நிலையாகக் கோயில் கொண்டிருக்கும் அருணை பற்றிக் கேட்கவா வேண்டும்! 'கரிமுகக் கடக் களிறு' என்ற இன்ப மயமான திருவருணைப் பாடல். அருணையின் வளத்தைப் படம் பிடிக்கும் பைந்தமிழின் சுவை. கஜானனன் புகழ் பாடும் கனிச்சுவை. நான்மாடக் கூடலில், நடன சுந்தரனின் திருவிளையாடல் சொல்லும் சொற்சுவை. வேலனின் வீரமும், கருணையும் வழி வழி வந்தவை என உணர்த்துகிறாரோ அருணகிரிநாதர்! இதோ பாடலை சுவைப்போம்.

நிராமய — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune. You may read in English the meaning of the song niramaya by clicking the underlined hyperlink. விராலிமலை வேந்தே சரணம். "விராலிமலைக்கு வா, வா" என அருணகிரிநாதரை அழைத்து, திருப்புகழ் என்னும் அமுத ப்ரவாகம் கங்கையாய்ப் பொங்கி வருவதற்கு வழி செய்து விட்டான் வடிவேலன். "நிராமய " என்று தொடங்கும் பாடல் ஒன்றிலேயே திருப்புகழின் சாரம் முழுவதும் அடங்கி விடும் அற்புதம். தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனதான என்று துள்ளி வரும் சந்தம் . "ரா" என்ற எதுகை பாடல் முழுவதும் பரவி நிற்கும் இன்பம். பொருள் பொதிந்த ஒவ்வொரு சொல்லாகப் பார்ப்போம்.

குடிவாழ்க்கை — J.R.விளக்கவுரை

By Janaki Venkatraman, Pune. You may read in English the meaning of the song kudivaazhkkai by clicking the underlined hyperlink. வெள்ளிமலையும் வள்ளிமலையும் காத்து நிற்கும் புள்ளி மயில் வாகனா சரணம். காக்கும் கடவுள் கந்தன் தான் என்பதைக் 'குடி வாழக்கை" என்ற பாடலில் தீர்மானமாய்ச் சொல்லி நம் கலக்கங்கள் தீர்க்கிறார் அருணகிரிநாத ஸ்வாமிகள். வட நாட்டில் வெள்ளி மலை காத்துப் புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா