Posts

Showing posts from December, 2018

இருவர் மயலோ - பதவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune. Read here the meaning in English for the song Iruvar mayalo "இருவர் மயலோ" என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆதி முதற் பொருளாக, அண்டமெலாம் வியாபித்து நிற்கும் விஸ்வரூபனாக, பூத நாயகனாக, முருகனைக் கண்டு மலைக்கும் அருணகிரியாரின் பரவச நிலை சொல்லும் பாடல். முருகனிடம் முறையிடும் வழிமுறைகள் பற்றிய கேள்வி ஞானம் கூட இல்லாத தன் குரல் அவனுக்கு எட்டுமோ எனக் கேள்வி எழுப்பும் அதே நேரம், அவன் கடாட்சம் தன் மேல் படாததற்குக் காரணம், அவன் கவனம் தன் இரு தேவியரிடமே நிலைப்பது தானோ, என நயம் படக் கேட்கும் உரிமையுள்ள தூய பக்தராக அருணகிரியாரைப் பார்க்கிறோம்.

விரகொடு வளை: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song viragodu vaLai ( விரகொடு வளை ) in English, click the underlined hyperlink. முன்னுரை திருவருணையின் திருவருட் செல்வா சரணம். "விரகொடு வளை" எனத் தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல். ஏதேதோ துயரங்களில் மூழ்குகின்றோம்; எழுகின்றோம். அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மேடு பள்ளங்களில் ஏறி இறங்குகின்றோம். ஆனால் மீள முடியாத பெருந்துயராய் மரண பயம் அச்சுறுத்துகிறது. அந்தத் துயருக்கு வடிகால் உண்டா என்று தவிப்போருக்கு வடிவேலன் என்றொரு இணையிலா சக்தி உண்டு என்று கூறித் தொய்ந்த மனங்களைத் தூக்கி நிறுத்துகிறார் அருணகிரிநாதர். நிழல் அருமை வெய்யிலில் தெரிவது போல், ஐயன் கழல் அருமை மரணத்தின் உச்சக்கட்டத்தில் தெரியும் என்பதாலே அதையும் விளக்குகிறார். அச்சுறுத்தவில்லை; ஆழ்ந்த நம்பிக்கை கொடுக்கிறார். விரகொடு வளை சங்கடமது தரு வெம் பிணி கொடு"