ta The Nectar of Thiruppugazh: June 2016

Tuesday, 28 June 2016

322. கும்பகோணம்

ராகம் : யமுனாகல்யாணி தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2½ + 2 (8)
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவசெகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில்வருதேவே

Saturday, 25 June 2016

321. கழைமுத்து மாலை

ராகம்: மத்யமாவதி தாளம்: ஆதி
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலைமலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலையரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவஅடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொடருள்வாயே

320. மாலினால் எடுத்த

ராகம் : மனோலயம் தாளம்:
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தையநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் கணமூடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்துஅருள்வாயே

Wednesday, 22 June 2016

319. எத்தனை கோடி

ராகம்: திலங் தாளம்: திஸ்ர ரூபகம் 2 + 1½ + 1½ (5)
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போனதளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேதுஇனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயுமடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாதமருள்வாயே

Tuesday, 21 June 2016

318. உரத்துறை

ராகம்: வாசஸ்பதி தாளம்: சதுஸ்ர ஜம்பை (7)
உரத்துறை போதத்தனியான
உனைச்சிறி தோதத்தெரியாது
மரத்துறை போலுற்றடியேனும்
மலத்திருள் மூடிக்கெடலாமோ
பரத்துறை சீலத்தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற்றருள்வோனே
வரத்துறை நீதர்க் கொருசேயே
வயித்திய நாதப்பெருமாளே.

317. குரைகடல்

ராகம்: பீம்ப்ளாஸ் தாளம்: அங்கதாளம் 2 + 2 + 2 + 1½ + 2 + 2 + 2 + 2 (15½)
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்றகுடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றியவிரோதம்
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்குமநுபூதி
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்தருளவேணும்

Monday, 20 June 2016

316. சூழும் வினை

ராகம்: மோகனம் தாளம்: சங்கீர்ண ரூபகம் (11)
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணிகழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறுதுணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தினமுழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனைதருவாயே

Sunday, 19 June 2016

315. வதன சரோருக

ராகம் : பிருந்தாவனசாரங்கா தாளம்: அங்கதாளம் 4 + 4 + 2 + 1½ + 1½ + 7 + 3½ (23½)
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரையொன்றுமூரும்
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
மாலாய்மட லேறுங் காமுகஎம்பிரானே
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
லீலாசல மாடுந் தூயவன்மைந்தநாளும்
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதமொழிந்தவாதான்

Saturday, 18 June 2016

314. சிகரிகளிடிய

ராகம்: மாயாமாளவகௌளை தாளம்: அங்க தாளம் 2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 1½ + 3 (15)
சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்வி மலர்க்க டம்புசிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி
திவ்ய கரத்தி ணங்குபொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சிகணவாஎன்
றகிலமு முணர மொழிதரு மொழியி
னல்லது பொற்பதங்கள் பெறலாமோ

Friday, 17 June 2016

313. இல்லையென நாணி

ராகம்: குமுதக்ரியா தாளம்: ஆதி
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
லெள்ளினள வேனும்பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங்கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென்றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
துய்யகழ லாளுந் திறமேதோ

312. அடலரி மகவு

ராகம்: சாமா தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 1½ +3
அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவ ருமொய்க்கு ரம்பையுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
வைவர் தமக்கு டைந்துதடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
டெல்லை விடப்ர பஞ்சமயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
வெல்லை குறிப்ப தொன்று புகல்வாயே

Wednesday, 15 June 2016

311. பசையற்ற உடல்

ராகம் : ரேவதி தாளம்: ஆதி கண்ட நடை
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல்வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கினிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்றுதடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்பதொருநாளே

Monday, 13 June 2016

310. திருமொழி

ராகம் : ஹரிகாம்போதி தாளம்: ஆதி 2 களை
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிடவிடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வருமயில்வீரா

Saturday, 11 June 2016

309. மருவும் அஞ்சு பூதம்

ராகம் : மோகனம் தாளம்: திச்ர த்ருவம் திஸ்ர நடை (16½)
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போடஅறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராதஅடியேனும்
உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேசஅறியாத
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாதமருள்வாயே

Friday, 10 June 2016

308. நிகரில் பஞ்ச பூதமும்

ராகம்: மனோலயம் தாளம்: அங்கதாளம் (1½ + 1½ + 2)
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படுமவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகமதருள்வாயே

Tuesday, 7 June 2016

307. குடல் நிணம் என்பு

ராகம்: ஹம்சானந்தி தாளம்: சதுஸ்ர ரூபகம் (6)
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடியமலமாசு
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெயழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமுமுயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல ரடைவேனோ