309. மருவும் அஞ்சு பூதம்


ராகம் : மோகனம் திச்ர த்ருவம் திஸ்ர நடை (16½)
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போடஅறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராதஅடியேனும்
உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேசஅறியாத
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாதமருள்வாயே
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசிகடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதிகுருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செருவ டங்க வேலைவிடுவோனே
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவுபெருமாளே.

Learn The Song




Know The Raga Mohanam (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S D2 P G3 R2 S

Paraphrase

மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது (maruvum anju bUtham urimai vandhidAdhu ) : In order that it does not get consigned to the five elements, namely, the earth, water, fire, air and cosmos, மண், நீர், தீ, கனல், காற்று, வெளி என்ற இந்த ஐந்து பூதங்களால் ஆன உடம்பு நமக்கு வசப்படவில்லை. புலன்கள் சென்ற வழியில் நாம் செல்லுகின்றோம். இதனை மாற்றி, உடம்பையும் உலகத்தையும் நம் வசம் ஆக்கி, அவைகளை உரிமையாக்கிக் கொள்ளவேண்டும்.

மலம் இதென்று போட அறியாது (malam idhendru pOda aRiyAdhu) : I should dismiss and discard this body, considering it as a dirty scum; but I do not know how to do this.

மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத (mayalkoL indha vAzhvu amaiyum endha nALum vagaiyil vandhirAdha ) : I never thought any day "Iam tired of this illusory life", மயக்கம் நிறைந்த இந்த உலக வாழ்வு போதுமே என்று எந்த நாளிலும் நினைத்திராத அடியேனும்; அமையும் = போதும்;

அடியேனும் உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் (adiyEnum urugi anbi nOdu unaininaindhu nALum) : I want to melt everyday in the loving thoughts of You,

உலகம் என்று பேச அறியாத (ulagam endru pEsa aRiyAdha ) : without talking about material worldly matters,

உருவம் ஒன்றிலாத பருவம் வந்து சேர ( uruvam ondri lAdha paruvam vandhu sEra ) : and reach a stage at which I do not see You in any particular form;

உபய துங்க பாதம் அருள்வாயே (ubaya thunga pAdham aruLvAyE ) : in order that I do so, please bless me with Your two holy feet.

அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் (ari virinjar thEda ariya thambirAnum) : He is a great master, beyond the reach of Vishnu and BrahmA;

அடி பணிந்து பேசி கடையூடே அருளுக என்ற போது (adi paNindhu pEsi kadaiyUdE aruLu gendra pOdhu) : that SivA prostrated at Your feet and requested to teach Him the significance of OM, the PraNava ManthrA; தேவரீரது திருவடிகளில் பணிந்து துதி செய்து, "கடையூடே அருளுக" —பிரணவத்தின் முடிவான உட்பொருளை அருள் புரிவீர் என்று கேட்டபோது

பொருள் இதென்று காண அருளு மைந்த (poruL idhendru kANa aruLu maindha ) : then, You showed Him its precise meaning graciously, Oh Young One, "உண்மைப் பொருள் இதுதான்" என்று அவர் உணரும்படியாக உபதேசித்து அருளிய திருக்குமாரரே!

ஆதி குருநாதா ( Adhi gurunAthA ) : You are the foremost Master!

திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து (thiriyum umbar needu giri piLandhu ) : The seven mounts of of SUran, rising up to the sky, used to travel wherever he went; they were shattered to pieces; மாயையினால் சுழல்கின்ற, விண்ணுலகம் வரை நீண்ட கிரவுஞ்ச மலையைப் பிளந்து,

சூரர் செருவு அடங்க வேலை விடுவோனே (sUrar seruv adanga vElai viduvOnE ) : and the war of the demons was conquered when You wielded the spear!

செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி (seyal amaindha vEdha dhoni muzhangu veedhi ) : The harmonious sound of the VedA chanting reverberates in the chaste/pious streets of ஒழுக்கம் வாய்க்கப் பெற்றதும், மறையொலி முழங்க விளங்குவதும் ஆகிய திருவீதிகளுடன் கூடிய

திரு விரிஞ்சை மேவு பெருமாளே. (thiru virinjai mEvu perumALE.) : this lovely town, Virinjipuram, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே