ta The Nectar of Thiruppugazh: July 2013

Friday, 12 July 2013

83. பாரியான கொடை

ராகம்: பாகேஸ்வரி தாளம்: 1½ + 1½ + 1 + 1½ + 2
பாரியான கொடைக்கொண்ட லேதிரு
வாழ்விசால தொடைத்திண்பு யாஎழு
பாருமேறு புகழ்க்கொண்ட நாயகஅபிராம
பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள்
சீலஞால விளக்கின்ப சீவக
பாகசாத னவுத்துங்க மானதஎனவோதிச்
சீரதாக எடுத்தொன்று மாகவி
பாடினாலு மிரக்கஞ்செ யாதுரை
சீறுவார்க டையிற்சென்று தாமயர்வுறவீணே
சேயபாவ கையைக்கொண்டு போயறி
யாமலேக மரிற்சிந்து வார்சிலர்
சேயனார்ம னதிற்சிந்தி யாரருகுறலாமோ

The Story of Paari

Paari giving his chariot to the creeper

Pari Vallal, the legendary 9CE Tamil Chola king was one of the 7 patron kings ("Vallal") who supported poets and scholars. After the Dwaraka deluge, a group of refugees are believed to have reached Kashmir, while the other group set southwards. King Paari was believed to have reached Tamil Nadu as a refugee from Dwaraka, following the great sage Agasthya. He is said to have ruled the Parambu Nadu.

One day Paari was going around the hill in his chariot. Suddenly a strong wind blew and the king noticed a lone Jasmine creeper which was violently tossed in the wind. He asked his charioteer to move the chariot close to the creeper. He gently bent down and took the creeper wrapping it carefully around the chariot. He set his horses to roam freely and walked to his palace along with his charioteer.

Thiruppugazhs in which the reference appears:

Paariyana kodai

Wednesday, 10 July 2013

82. பஞ்ச பாதகன்

ராகம்: ஹுசேநி தாளம்: அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழைபவுஷாசை
பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகுசதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுகழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள்புரிவாயே

Tuesday, 9 July 2013

81. பகர்தற்கரிதான செந்தமிழ்

ராகம்: வசந்தா தாளம்: 3 + 1½ +2
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயில்பல காவி யங்களையுணராதே
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படிவிரகாலே
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல்மெலியாமுன்
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள்புரிவாயே

Monday, 8 July 2013

80. திமிர உததி

ராகம்: பைரவி தாளம்: திச்ர ஏகம் (எடுப்பு 1 இடம்)
திமிர வுததி யனைய நரக
செனன மதனில்விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியுமணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும்வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும்வரவேணும்

Saturday, 6 July 2013

79. திடமிலி சற்குணமிலி

ராகம்: பந்துவராளி தாளம்: கண்ட சாபு (2½)
திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க்கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற்றழிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப்பெறவேணும்

Friday, 5 July 2013

78. தலைவலி மருத்தீடு

ராகம்: செஞ்சுருட்டி தாளம்: சதுஸ்ர த்ருவம் கண்ட நடை
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும்விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்களிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசைவரவேணும்

Thursday, 4 July 2013

77. தமரும் அமரும்

ராகம்: ஹமீர் கல்யாணி தாளம்: ஆதி திச்ர நடை (12)
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளையஎறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவுமிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவுதரவேணும்

76. தகர நறுமலர்

ராகம்: பூர்வி கல்யாணி தாளம்: அங்க தாளம் (7½) 1½ + 2 + 2 + 2
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு வதனாலே
தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு துயர்தீர
அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுனதிருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவரஇசைவாயே