78. தலைவலி மருத்தீடு

ராகம்: செஞ்சுருட்டிதாளம்: சதுஸ்ர த்ருவம் கண்ட நடை
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும்விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்களிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசைவரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனுமருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசரண வித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறுமணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள்துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழனிவரு கற்பூர கோலாக லாவமரர்பெருமாளே.

thalaivali maruththeedu kaamaalai sOgaijuram
vizhi vali vaRat soolai kaayaa suvaasam vegu
chalamigu vishappaaga maayaa vikaara piNi aNugaadhE
thalamisai adhaRkaana pErOdu kooRiyidhu
pari kari enakkaadhu kELaadhu pOlum avar
sariyum vayadhukkEdhu thaareer soleer enavum vidhiyaadhE
ulaivaRa viruppaaga neeLkaavin vaasa malar
vagai vagai eduththE thodaa maalikaabaraNam
unadhadiyinil soodavE naadu maathavargaL irupaadham
uLamadhu thariththE vinaavOdu paadi aruL
vazhipada enakkE dhayaavOdu thaaL udhava
uragam adheduththaadu mEkaara meedhin misai varavENum
alaikadal adaiththE mahaagOra raavaNanai
maNi mudi thuNith thaavi yEyaana jaanakiyai
adaludan azhaiththE koL maayOnai maamanenu marugOnE
aRuginai mudiththOnai aadhaaram aanavanai
mazhuvuzhai pidiththOnai maakaLi naaNamunam
avaidhanil nadiththOnai maathaadhaiyE enavum varuvOnE
palakalai padiththOdhu paavaaNar naaviluRai
irucharaNa viththaara vElaayudhaa uyar sey
paraNmisai kuRappaavai thOl mEva mOgamuRu maNavaaLaa
padhuma vayaliR pooga meedhE varaalgaL thuyil
varu punal perukkaaRu kaavEri soozha vaLar
pazhani varu kaRpoora kOlaahalaa amarar perumaaLE.

Learn the song



Raga Senjurutti(Janyam of 28th mela Hari Kambhoji) By Charulata Mani

Arohanam: D2 S R2 G3 M1 P D2 N2   Avarohanam: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 S


Paraphrase

தலைவலி மருந்து ஈடு காமாலை சோகை சுரம் விழி வலி வறட் சூலை காயா சுவாசம் வெகு சலம் மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே ( thalaivali maruththeedu kAmAlai sOgaijuram vizhivali vaRatcUlai kAyAsu vAsam vegu chalamigu vishappAga mAyA vigAra piNi aNugAdhE) : Headache, diseases caused by evil spirits (vasiyam), water retention (jaundice), anaemia, fever, eye problems, stomach ache caused by spasms, tuberculosis, breathlessness, diabetes, several diseases caused by bodily toxins, and various peculiar ailments caused by worldly delusion - I do not want any of these to afflict me.

தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் ( thalamisai adhaRkAna pErOdu kURi idhu parikari ena kAdhu kELAdhu pOlum) : For that reason, I consulted many physicians requesting them to suggest remedies, but they turned a deaf ear to me. இவ்வுலகில், (வைத்தியர்களிடம் சென்று) மேற்கூறிய நோய்களின் துன்பத்தையும் அந்நோய்களின் பேரையும் விவரமாக எடுத்துச் சொல்லி, இந்நோய்களை நீக்குவீர். என்று சொன்னால், அவ்வைத்தியர்கள் நான் சொன்னது காது கேட்காதது போல் இருந்து,

அவர் சரியும் வயதுக்கு ஏது தாரீர் எனவும் விதியாதே ( avar sariyum vayadhukkEdhu thAreer soleer enavum vidhiyAdhE) : they criticize the use of medicines at an advanced age and ask me what could be prescribed under the circumstances; and I do not want to be destined to listen to such people.

உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகை வகை எடுத்தே தொடா மாலிக ஆபரணம் உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் இரு பாதம் உளம் அது தரித்தே (ulai vaRa viruppAga neeL kAvin vAsa malar vagai vagai eduththE thodA mAlika AbaraNam unadhu adiyinil sUdavE nAdum mAdhavargaL irupAdham uLamadhu thariththE ) : Wearing the twin feet of Your devotees who tirelessly pluck various fragrant flowers from large gardens and enthusiastically weave a garland with it to offer to Your feet, ஊக்கக் குறைவு இல்லாமல் விருப்பத்துடன் பெரிய பூந்தோட்டத்திலிருந்து நறு மணம் உள்ள மலர்களை வகை வகையாக எடுத்து தொடுத்து அம் மலர் மாலையான ஆபரணங்களை உனது திருவடியில் சூடுதற்கு நாடும் தவசிகளுடைய இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில் தரித்து

வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும்.(vinAvOdu pAdiy aruL vazhipada enakkE dhayAvOdu thAL udhava uragam adhu eduththAdu mEkAra meedhin misai varavENum.) : Kindly appear on the peacock that dances and playfully throws the serpent and give me Your feet so that I can sing and worship You with an enlightened self inquiry; ஆய்ந்த அறிவோடு பாடித் துதித்து வழிபட எனக்குக் கருணை கூர்ந்து உனது திருவடிகைளைத் தர பாம்பை எடுத்து ஆடுகின்ற மயில் வாகனத்தின் மீது ஏறி வர வேண்டுகின்றேன். உரகமது எடுத்தாடு மேகாரம் = குண்டலினி சக்தியாகிய விந்துவின் குறியீடான மயில் பிராணவாயு என்ற பாம்பை மிதித்து ஆடுகிறது. மயிலைக் கண்டு பாம்பு மிகவும் நடுங்கும். பாம்பு என்பது மாயை. மயில் என்பது விந்து தத்துவம். எப்பொழுதும் விந்து-நாதம் இரண்டும் ஒன்றோடு ஒன்று பொருந்தியது. விந்து குண்டலினி சக்தி, சிதாகாசம் நாதம்; விந்து ஒளி, நாதம் ஒலி; விந்து மயில், நாதம் சேவல். உரகம் (uragam) : serpent; மேகாரம் (mEkaram ) : peacock; மேக ஆரம் என்பது வானவில். வானவில் போலத் தோகை விரித்து ஆடுவது மயில் என்பதால் மயிலைக் குறிக்கும்.

அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து (alai kadal adaiththE mahA gOra rAvaNanai maNimudi thuNiththu AviyE Ana jAnakiyai adaludan azhaiththE koL mAyOnai mAmanenum marugOnE) : Lord Rama obstructed the turbulent sea and cut off Ravana's crown

ஆவியேயான ஜானகியை அடல் உடன் அழைத்தே கொள் மாயோனை மாமன் என்னும் மருகோனே (AviyEyAna jAnakiyai adal udan azhaiththE koL mAyOnai mAman enum marugonE) : and brought his wife Sita, dear to him as His life; He is Your uncle and You are His nephew;

அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் மு(ன்)னம் அவை தனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே (aRuginai mudiththOnai AdhAram Anavanai mazhuvuzhai pidiththOnai mAkaLi nANa munam avai dhanil nadiththOnai mAthAdhaiyE enavum varuvOnE ) : Your have for your father Lord Shiva who wears arugam grass on his tresses, who is the universal founding principle, who holds a pick-axe and a deer in His arms, and who once danced so exquisitely on the stage that Mother KALi was put to shame; திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடிக்க சிவபெருமான் ஆடிய ஊர்த்துவ தாண்டவம் பற்றி அருணகிரிநாதர் இங்கு தெரிவிக்கிறார். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். சிவபெருமான் ஏழு வகையான தாண்டவங்கள் ஆடி ஏழு சுவரங்களைப் படைத்ததாக ஆன்றோர் கூறுவர். இந்த ஏழு தாண்டவங்களாவன – காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், சம்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்த தாண்டவம் ஆகியனவாகும்.

பல கலை படித்து ஓது(ம்) பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா (palakalai padiththOdhu pAvANar nAviluRai iru charaNa viththAra vElAyudhA ) : Your hallowed feet resides on the tongues of poets who are well versed in several arts; You are a great scholar and You hold the Spear as Your weapon!

உயர் செய் பரண் மிசை குறப்பாவை தோள் மேவும் மோகம் உறு மணவாளா (uyar sey paraN misai kuRappAvai thOl mEva mOgamuRu maNavALA ) : You are the Consort of VaLLi, the damsel of the tribal hunters, who guards the millet field sitting on a high plank and you hug her shoulders passionately !

பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் (padhuma vayalil pUgam meedhE varAlgaL thuyil) :The varAl fish sleep on the lotus in the field and on top of the betel nut trees;

வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர் பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. (varu punal perukkARu kAvEri sUzha vaLar pazhani varu kaRpUra kOlAhalA amarar perumALE ) : You reside at Pazhani which is surrounded by the river Cauvery overflowing with water; you are adorned with fragrant camphor; You are the Lord of the Celestials, Oh Great One!

Comments

  1. " ... worship You with an enlightened self inquiry" - unparalleled beauty of expression by aruNagiri naathar!

    ReplyDelete
  2. Wonderful explanation:)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே