குமரி காளி - J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan

You may read Kumari Kali for an explanation in English.

சோணாசலத்தின் சுந்தரா சரணம். "குமரி காளி" என்று இதமாய் இடையில் தொடங்கும் திருவருணைப் பாடல் (ஆரம்ப வரி - அமுதமூறு சொலாகிய)

முன்னுரை

ஒப்புயர்வற்ற அத்தனுக்கும், அன்னைக்கும் செல்வக் குமாரன், குமரன். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் அந்தப் பெற்றோரின் ஆற்றலை, கருணையை, பாடிக் களிக்கிறார் அருணகிரியார். ஷண்முகனைப் பாடும் பொழுதே ஷண்மதத்தின் தலையாய தெய்வங்களையும் பாடி மத இணைப்புக்கும், மன இணைப்புக்கும் வழி வகுக்கிறார். இந்தப் பாடலில் 35 நாமங்களால் ஜகன் மாதாவைத் துதிக்கிறார். அன்னையின் ஒவ்வொரு நாமமும் அமுத ஊற்று. ஊற்றுக் கண் திறப்போம்.

பரிய கைப் பாசம் - ஜானகி ரமணனின் கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune.

For a paraphrasing of this song in English, click pariya kai paasam

சோணாசலத்தின் ஜோதிப் பிழம்பே சரணம். "பரிய கைப் பாசம்" என்று தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல்.

முன்னுரை

ஒரு விதத்தில் வாழ்க்கையின் இறுதிப் போட்டி, ஒரு கயிறு இழுக்கும் போட்டி தானோ! ஒருபுறம் நம் பாச பந்தங்கள். மறுபுறம் காலனின் பாசக் கயிறு. ஒரு கட்டத்தில் போராட்டம் நிற்கிறது. உயிர் தன் இச்சைப்படி உடலை விட்டுப் பறக்கிறது. அதன் பிறகு இந்த உடலைச் சீண்டுவார் இல்லை. இதற்கா போராடிப் போராடி வாழ்கிறோம்? ஜனன மரண சுழற்சியில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அர்த்தம் வேண்டுமானால் மெய் ஞானம் பெற வேண்டும் என உணர்ந்து கொள்ளும் அருணகிரியார், அந்த ஞானத் தெளிவு தந்து தன்னை ஆட்கொள்ளுமாறு அறுமுகவனிடம் வேண்டும் பாடல்.

பல பாடல்களில் பல்வேறு விதமாக இந்தக் கருத்தையே ஏன் திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார்?

சலித்துக் கொள்வதையும், திசை திரும்புவதையும், திசை திருப்புவதையுமே தொழிலாகக் கொண்ட மனித மனது ,இன்றில்லா விட்டால் நாளை, இந்தப் பாடலில் இல்லாவிட்டால் இன்னொரு பாடலில் லயித்து, தான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதா என்ற தவிப்பிலே பிறந்தன இந்த பாடல்கள்.

புலையனான மாவீனன்: ஜானகி ரமணனின் கருத்துரை

By Smt. Janaki Ramanan, Pune

For a paraphrase of this song in English, click pulaiyanaana maaveenan

திருவருணையின் திருவருளே சரணம். "புலையனான மாவீனன்" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். சேற்றிலே உழன்று பின் ஞானச் செந்தாமரையாய் மலர்ந்த அருணகிரிநாதர், அத்தனை பழி பாவங்களையும் தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு முருகனிடம் மன்னிப்புக்காக மன்றாடும் தூய பக்தனாக ஜொலிக்கும் பாடல். அந்த நீண்ட பாவப் பட்டியல் ஒரு தனி மனிதனின் பாவச் சுமையாய் இருக்க முடியாது. மனித இனத்தின் பாவங்களைச் சொல்கிறார். அவரவர் தத்தம் பாவம் உணரந்து பரமகுருவின் மன்னிப்பைப் பெற வேண்டும் என்ற ஆதங்கம் அடி நாதமாய் ஒலிக்கும் பாடல். பாவப் புயலிலிருந்து விடுபட்டு அமைதி அடைய அவர் போட்டுத் தந்திருக்கும் ஆன்மீகப் பாதை இந்த பாடல்.

Sivam in Thiruppugazh–Part 1

What is the goal of Bhakti? The ultimate goal of bhakti is to help the individual soul to merge itself in the Supreme Soul or Paramatman tha...

Popular Posts