Posts

Showing posts from May, 2019

உனைத் தினம் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song unai thinam ( உனைத் தினம் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "உனைத் தினம்" என்று தொடங்கும் திருப்பரங்குன்றம் திருத்தலப் பாடல். மீண்டும், மீண்டும் அருணகிரிநாதர் மனித மனத்தில் பதிக்க நினைப்பது என்ன? எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்கிறோம் என்ற துல்லியமாக எடை போட்டு ,நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல். அவர் வாழ்க்கையையே படம் பிடித்துப் பாடம் நடத்தும் பாடல்கள். இந்தப் பாடலிலும் கடந்த காலக் கரடு முரடான வாழ்வைச் சொல்கிறார். பக்திப் பாதையில் நடந்ததில்லை. சக்தி பாலனை நெஞ்சில் வைத்து துதித்ததில்லை. சத்சங்கம் எதிலும் சேர்ந்ததில்லை. இடிபாடுகளுக்கிடையில், தரு ஒன்று துளிர்த்தது போல், முருக பக்தி உதிக்கிறது. ஆனால் அதற்குள் மரண பயம் எதிர்கொள்கிறது. முருகனை முழுவதுமாகச் சரண் அடைகிறார்.

எனக்குச் சற்று: J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song enakku chattru ( எனக்குச் சற்று ) in English, click the underlined hyperlink. முன்னுரை "எனக்குச் சற்று உனக்குச் சற்று" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். ஆசைகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருப்பவை. பெண்ணாசை, எப்படியெல்லாமோ பொருள் தேடும் ஆசையில் கொண்டு சேர்க்கிறது. இப்படிச் சேர்த்த பொருளை பங்கிட்டுக் கொள்ள, கழுகாய் காத்திருக்கும் கூட்டம் இருக்கும். எந்த ஆசையும் முழுவதுமாய் நிறைவேறப் போவதுமில்லை. தளர்ந்து முடியும் உடலின் பற்றுக்களை விட்டு, முருகனைப் பற்றச் சொல்கிறார். அவன் அடியார்க்கு எளியவன். ஜீவனைக் கடத்தேற்றக் காத்திருப்பவன் என்பதை நமக்குள்ளே பதிய வைக்கத் தான் நிலையாமை பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

ஓலமறைகள்: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song Olamaraigal ( ஓலமறைகள் ) in English, click the underlined hyperlink. முன்னுரை திருவானைக்காவின் திருப்புதல்வா சரணம். "ஓலமறைகள் " என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி என்ற இணையற்ற தாய் தந்தையரின் அருமைப் புதல்வனாய் திருவானைக்காவில் கோயில் கொண்டிருக்கும் முருகன், ஐந்து சன்னிதிகளில் வள்ளி தெய்வானை சமேதராகவும, ஒரு சன்னிதியில் பால தண்டாயுதபாணியாகவும், இன்னொரு புறம் ஒரு சிற்ப அற்புதமாகவும், ஒரே கோவிலில் ஏழு விதமாகத் தரிசனம் தருவது பக்தர்கள் செய்த தவமல்லவா! வெள்ளை யானை வழிபட்ட தலம். வெண் நாவல் மரத்தடியில் ஈஸ்வரனின் திருக்கோலம் என்ற சிறப்புக்கள் கொண்ட இந்தப் புனிதத் தலத்தில் அருணகிரியார் கண்டது தயாபரனின் தண் தேனாம் கருணை ததும்பும் அவன் தாமரைப் பாதங்கள் தானோ! அந்தச் சிலிர்ப்பிலே பிறந்தது இந்தப் பாடலோ! உவமைகளுக்கு அப்பாறபட்டதாய், அந்தக் கழல்கள் இருப்பதாலே கவித்துவத்தை மட்டும் கைக்கொளாமல் தத்துவார்த்தமாக கந்தன் கழலின் அருமைகளைப் பெருமைகளைக் காட்டுகிறார் அருணகிரிநாதர். வேதநாதம் அத