Posts

Showing posts from August, 2018

நாலிரண்டு இதழாலே — J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song naalirandu ithazhaale in English, click the underlined hyperlink. உமையாள் சுதனே சரணம். "நாலிரண்டு இதழாலே என்று தொடங்கும் திருப்புகழ் பொதுப் பாடல். முன்னுரை பாரதத்தின் நீள அகலங்களை அளந்தது போல், ஐயன் முருகனின் அனைத்து திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று திருப்புகழ் பாடித் திருவண்ணாமலை திரும்பிய பின்னரும், பன்னிரு விழியோனின் புகழ் பாடும் ஆர்வம் அடங்காமல் இருந்த அருணகிரியார், திருவண்ணாமலைத் திருத்தலத்தில் இருந்தவாறே, தன் இதயத் தலத்தில் குமரனைக் கண்டு பாடிய பாடல்கள் பொதுப் பாடல்கள் என்று குறிக்கப் பெறுகின்றன. அத்தகைய பாடல்களில் ஒன்று தான் "நாலிரண்டு இதழாலே " என்று தொடங்கி, உமையாளையும், உமையாள் சுதனையும் துதிக்கும் பாடல். அன்னையின் புகழை அவர் பாடும் அருமையைக் கேட்போம். அத்தனையும் தித்திக்கும் தேன் மலர்கள்.