வேல் வகுப்பு

ராகம் : மோகனம் தாளம்: ஆதி திச்ர நடை (12)
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமிவிழிக்குநிக ராகும்
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளைதெறிக்கவர மாகும்
பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையையிடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்புசிக்கவருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்இடுக்கண்வினை சாடும்
சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்ஒளிப்பிரபை வீசும்
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்எனக்கொர்துணை யாகும்
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழுமறத்தைநிலை காணும்
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறைகழற்குநிக ராகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனைவிதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவுபகற்றுணைய தாகும்
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்விருப்பமொடு சூடும்
திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரநிறைத்துவிளை யாடும்
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவறவிசைத்ததிர வோடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழிவிழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனேன துளத்திலுறை கருத்தன்மயில்நடத்துகுகன் வேலே.

திருவேளைக்காரன் வகுப்பு

ராகம் : நாதநாமக்கிரியை தாளம்: கண்டசாபு (3½)

ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது
வாகநிகழ் பத்தசனவாரக் காரனும்
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய
னாருடனு ணக்கைபரிதீமைக் காரனும்
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றுமதிவேகக் காரனும்
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு
பூதியடை வித்ததொருபார்வைக் காரனும்
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம
ராவதிபு ரக்குமடல்ஆண்மைக் காரனும்
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு
ணாபுரியில் நிற்கும்அடையாளக் காரனும்
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை
யானவர் தொடுத்தகவிமாலைக் காரனும்
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும்
ஆதிமுடி வற்றதிருநாமக் காரனும்
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும்
யாரும்உணர் தற்கரியநேர்மைக் காரனும்
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை
யேறவிடு நற்கருணையோடக் காரனும்
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி
யேரணிசெ ருத்தணியில்வாசக் காரனும்

173. சத்தி பாணீ


ராகம் : சிந்து பைரவிதாளம்: அங்கதாளம் (6) 1½ + 2 + 1½ + 1
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
தத்வ வாதீ நமோநமவிந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
தற்ப்ர தாபா நமோநமஎன்றுபாடும்
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷிதகொங்கைமேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
பத்ம சீர்பாத நீயினிவந்துதாராய்

172. தவள ரூப (குவளை பூசல்)


ராகம்: ஆனந்த பைரவிதாளம்: அங்கதாளம் (7½) 1½ + 2 + 2 + 2
தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரிபுவநேசை
சகல காரணி சத்தி பரம்பரி
யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலியெமதாயி
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள்முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசிராமலை அப்பர் வணங்கியபெருமாளே

171. அந்தோ மனமே

ராகம் : கல்யாணிதாளம் : திஸ்ர திரிபுடை (7)
அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர
மம்போருக னாடிய பூட்டிதுஇனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையைஒழியாமல்
வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கியசிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புயமறவாதே

170. மலைக்கு நாயக (விலைக்கு)


ராகம் : ஹம்சவினோதினிதாளம்: அங்கதாளம் (9)
2 + 2 + 1½ +1½ + 2
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ்தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வருமுருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரிபெருமாளே.
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயுமொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள்தரவேணும்

169. வேத வெற்பிலே


ராகம் : பீம்ப்ளாஸ் தாளம்: ஆதி திஸ்ர நடை (12)
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்குமபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சைமுடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டிபுயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்திபுகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்கமகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தியிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்தமுநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்தபெருமாளே.

168. எழுகு நிறை நாபி


ராகம் : ஹிந்தோளம்தாளம்: ஆதி
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர்முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறுகனிவாயா
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடுதமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர குருநாதா

167. மனையவள் நகைக்க

ராகம் : ரீதிகௌளை தாளம்: அங்கதாளம் 5½ (2 + 2+ 1½)
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதைதமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளுமடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாதமருள்வாயே

166. தொல்லை முதல்

ராகம் : பிருந்தாவன சாரங்கா தாளம்: கண்டசாபு (2 ½)
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்தமெனவாகி
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்கமெனமேவும்
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றியிசையாகிப்
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
பெளவமுற வேநின்றதருள்வாயே

165. ஐங்கரனை

ராகம் : மனோலயம் தாளம்:
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
ரந்திபக லற்றநினைவருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
அன்பொடுது திக்கமனமருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திரவெ ளிக்குவழியருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
சம்ப்ரமவி தத்துடனெயருள்வாயே

Sivam in Thiruppugazh–Part 1

What is the goal of Bhakti? The ultimate goal of bhakti is to help the individual soul to merge itself in the Supreme Soul or Paramatman tha...

Popular Posts