Valli Kalyanam
Read about Valli Sanmargam here.
Also, read the story of How Murugan married Valli for a quick recall.
Valli kalyanam is the metaphor for the union of Jiva with Paramatma.
Jiva remains separated from the Supreme because of ignorance about his own true nature. The lord being benign, sends a guru to bring the jiva on the right path. In the case of Valli and Murugan, Sage Narada acts as a mediator. He visits Valli-malai and meets Valli, then goes to to Tanigai/Thiruththanigai to appraise Murugan about Valli's exceptional beauty and her devotion to the him as a personal god. Valli represents every living being in this world. Our minds are the thinai fields in which we grow good crops we need for our life. To destroy these crops, evil forces come as birds. We need to sing 'alolam' like Valli to chase the birds away. Then God will take the next extra step to help us unite with Him.
Click the button to find the pdf of Valli kayananam
For viewing the book: வள்ளி கல்யாணம்
Listen to Valli Kalyana Paadalgal
ராகம் : சிவரஞ்சனி தாளம்: ஆதி
வள்ளிக்கு வாய்த்தவனே வா வா ஷண்முகா
அடியர் உள்ளம் கொள்ளை கொண்ட அன்பனே நீ வா வா
ஆறுபடை வீடுடைய ஆண்டவனே வா வா
இபமுகனின் இளையனான இறைவனே நீ வா வா
ஈடில்லாத அழகுடைய ஈசனே நீ வா வா
உம்பர்கட்கு உவப்பளித்த உத்தமனே வா வா
ஊனுமாகி உயிருமான ஊழியனே வா வா
எத்திசையும் போற்றி வாழும் எம்பிரானே வா வா
ஏழைகட்கிரங்கியாளும் ஏரகனே வா வா
ஐவர் துயர் தீர்த்தருள ஐயனே நீ வா வா
ஒன்றுமாகி பலவுமான ஒருவனே நீ வா வா
ஓங்கார பொருளோனே ஓடியே நீ வா வா
ஔவியம் தீர்த்தருள ஆண்டவனே வா வா
அன்பனே | ஆறுமுகா | இறைவனே | ஈசனே | உத்தமனே | ஊழியனே | எம்பிரானே | ஏரகனே வா வா
ஐயனே | ஒருவனே | ஓடியே | ஆடியே நீ வா வா
வள்ளியை மணம் புரிய வா வா ஷண்முகா
ராகம்: மனோலயம் தாளம்: ஆதி (திச்ரகதி)
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வரவேணுமே (2)
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வரவேணுமே (2)
வரவேணுமே வரவேணுமே வள்ளியை மணம் புரிய வரவேணுமே
வள்ளியை மணம் புரிய வரவேணுமே (2)
உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும்
உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனே
உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய
உதகமகள் பக்கல்வரு சோதிச் ஷடானனே (வரவேணுமே)
உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர்
ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனே
உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம்
உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனே (வரவேணுமே)
உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர
னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனே
உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனே; (வரவேணுமே)
உரககண சித்தகண கருடகண யக்ஷகணம்
உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனே
ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனே உத்தமனே
உபயமுறும் அக்நிகர மீதிற்ப்ர பாகரனே (வரவேணுமே)
அவரைபொரி யெட்பயறு துவரைஅவல் சர்க்கரையொ
டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனே
அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன்
அபயமிட விற்படைகொ டாயத்த மானவனே (வரவேணுமே)
அரிபிரம ருக்குமுதல் அரியபர மற்குயரும்
அருமறை முடிப்பையுப தேசித்த தேசிகனே
அநுபவனே அற்புதனே அநுகுணனேஅக்ஷரனே
அருமனம் ஒழிக்கும்அநு பூதிச் சுகோதயனே (வரவேணுமே)
எழுபரி ரதத்திரவி எழுநிலமொ டக்கரிகள்
இடர்பட முழக்கியெழு சேவற் பதாகையனே
இணையிலி நிர்ப்பயனே மலமிலி நிஷ்களனே
இளையவனே விப்ரகுல யாகச் சபாபதியே (வரவேணுமே)
வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன
வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனே
வரதனேஅநுக்ரகனே நிருதர்குல நிஷ்டுரனே
மநுபவன சித்தனும நோதுக்க பேதனனே (வரவேணுமே)
வயிரிசை முழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும்
மகிழ்குரவை யுட்டிரியும் வேடிக்கை வேடுவனே
தினமிசை சுகம் கடிந்த புனம் மயில் இளங்குருத்தி
மனம் மகிழ மணம் புரிய வர வேணுமே. (வரவேணுமே)
அதிரவீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க
அரிய ஞான வாசகத்தை அருள்வோனே
விளையுமோக போக முற்றி அளவிலாத காதல் பெற்ற
குறமகளை நீ மணக்க வர வேணுமே (வரவேணுமே)
பூரனமதான திங்கள் சூடும் அரனாரிடம்கொள்
பூவை அருளால் வளர்ந்த முருகோனே
பூவுலகெலாமடங்க ஓரடியிநாலளந்த
பூவை வடிவானுகந்த மருகோனே (வரவேணுமே)
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
ஆலுமயி லேறி நிற்கு மிளையோனே
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
மேவுமிரு பாத முற்று வரவேணுமே. (வரவேணுமே)
பஞ்சரங் கொஞ்சு கிளி வந்து வந்தைந்து கர
பண்டிதன் தம்பி எனும் வயலூரா
சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர்
வள்ளியை மணம் புரிய வர வேணுமே. (வரவேணுமே)
வடவரை யுற்றுறைந்த மகாதேவர் பெற்ற கந்த
மதசல முற்ற தந்தி இளையோனே
குடமென வொத்த கொங்கை குயில்மொழியொத்த இன்சொல்
குறமகளை நீ மணக்க வர வேணுமே (வரவேணுமே)
துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை
தொக்க திக்க தோதி தீத வெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
சொற்கு நிற்கு மாறு தார மொழிவோனே (வரவேணுமே)
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர்
திக்குகள் ஓர் நாலிரட்டின் கிரிசூழ
செக்கண் அரிமா கனைக்கும் சித்தணிகை வாழ் சிவப்பின்
செக்கர் நிறமாயிருக்கும் பெருமாளே (வரவேணுமே)
சந்த டர்ந்த ழுந்த ரும்பு மந்தர ரஞ்செ ழுங்க ரும்பு
கந்த ரம்பை செண்ப தங்கொள் செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று பண்ப டங்க டர்ந்த இன்சொல்
திண்பு னம்பு குந்து கண்டி றைஞ்சுகோவே
முருகன் - வள்ளி அறிமுகம்
ராகம்: ஆனந்த பைரவி முருகன்எழுதரிய ஆறுமுகமும், மணிநுதலும்
வயிரமிடையிட்டு சமைந்த செஞ்
சுட்டிக் கலங்களும், துங்க நீள்
பன்னிரு கருணை விழிமலரும், இலகு
பதினிரு குழையும், ரத்ன குதம்பையும்
பத்மக் கரங்களும், செம்பொனூலும்,
மொழி புகழும் உடைமணியும்
அரைவடமும், அடியிணையும், முத்தச்
சதங்கையும், சித்ரச் சிகண்டியும்,
செங்கை வேலும், முழ்தும் அழகிய முருகன்
(எங்கள் முருகன் அம்மா வள்ளிநாயகியே)
அம்மா எங்கள் முருகன்
மந்தாகினித் தரங்க சடிலருக்கு அரிய
மந்திர உபதேசம் நல்கும் வரதேசிகன்
கிஞ்சுகச் சிகாலங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செங்காந்தளும்
கூதாள மலரும் தொடுத்தணியும் மார்பினன்
தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவாந்தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரி பருவுடற் பஃறலைத்
தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையும்
கடலாடை மங்கையும் பதம் வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன்
எங்கள் முருகன்
தேவி பார்ப்பதி சேர் பரபாவனார்க்கு ஒரு ஜாக்ர
அதீத தீக்ஷை பரீட்சைகள் அற ஓதும் தேவன்
மேவினார்க்கு அருள் தேக்கு
துவாதசாக்ஷ ஷடாக்ஷரன்
மேரு வீழ்த்த பராக்கிரம வடிவேலன்
(எங்கள் முருகன் அம்மா வள்ளிநாயகியே)
மாலை மாற்றல்
ராகம்: திலங் தாளம் : ஆதி (திஸ்ரகதி)மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
வள்ளி
முதலி பெரியம்பலத்துள் வரையசல மண்டபத்துள்
முனிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான் முருகனுக்கு
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
முருகன்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
குயில் மொழி கயல் விழி, துகரிதழ் சிலைநுதல்
சசிமுகத்தி குறவர் மகள் வள்ளிப் பிராட்டிக்கு
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
வள்ளி
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
சுருதிகள் உரைத்த வேதம் உரை மொழி தனக்குள் ஆதி
சொலு என உரைத்த ஞான குருநாதன் முருகனுக்கு
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
முருகன்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
அழகு மோகக் குமரி விபுதை ஏனற் புனவி
அரிய வேடச் சிறுமியான வள்ளிப் பிராட்டிக்கு
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
வள்ளி
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன்
எனதுளத்திலுறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலனுக்கு
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
முருகன்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மறுவிலாத தினைவிளைந்த புனம் விடாமல் இதணிருந்து
கிளி கடிந்து காவல் கொண்ட வள்ளிப் பிராட்டிக்கு
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
வள்ளி
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
கொல்லைமிசை வாழ்கின்ற வல்லிபுனமே சென்று
கொய்து தழையே கொண்டு செல்லும் வடிவேலனுக்கு
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
முருகன்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
எயினர் இடும் இதணதனில் இளகுதினை கிளி கடிய
இனிது பயில் சிறுமியான வள்ளிப் பிராட்டிக்கு
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
வள்ளி
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வரையில் ஏனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளும்
செல்லப் பிள்ளை முருகனுக்கு
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
முருகன்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
கிஞ்சுகம் எனச் சிவந்த தொண்டையள் மிகக் கறுத்த
கெண்டையள், புனக்கொடி மறச் சிறுமி வள்ளிக்கு
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
வள்ளி
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
ஆலமொன்று வேலையாகி ஆனை அஞ்சல் தீரு மூல
ஆழி அங்கை ஆயன் மாயன் மருகனான முருகனுக்கு
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
முருகன்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மரகத மணிப்பணியின் அணிதழை உடுத்துலவும்,
வரிசிலை மலைக்குறவர் வேடிச்சி வள்ளிக்கு
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
வேடனான முருகனுக்கு மாலை சூட்டினாள்
வேங்கையான முருகனுக்கு மாலை சூட்டினாள்
கிழவனான முருகனுக்கு மாலை சூட்டினாள்
மாலை சூட்டினாள் வள்ளி மாலை சூட்டினாள்
மாலை மாற்றினான் முருகன் மாலை மாற்றினான்
ஆடிலூஞ்சல்
- **அரகர சிவாய சம்பு குருபர குமார நம்பும்
அடியர் தமை ஆளவந்த பெருமாள்
நவநீதமும் திருடி உரலோடெ ஒன்றும் ஹரி
ரகுராமன் சிந்தை மகிழ் மருகன் (ஆடில்)
- **மலையிறை மடந்தை பெற்ற ஒரு முதலை என்றுதித்து
மலையிடியவுந் துணித்த தோளினான்
நீறு பட மாழை பொரு - மேனியவ வேலன்
அணி நீல மயில் வாகன் உமை தந்த பாலன் (ஆடில்)
-
**பன்றியங் கொம்பு கமடம் புயங்கஞ் சுரர்கள்
பண்டையென் பங்க மணிபவர் சேய்
திங்களும் செங்கதிரு மங்குலங் தங்குமுயர்
தென்பரங் குன்றிளுறை பெருமாளே (ஆடில்)
- ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரி வளம் வந்த செம்பொன் மயில் வீரன்
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த
இறைவன் குகன் கந்தன் என்றும் இளையோன் (ஆடில்)
-
பகர்வரியர் எனலாகும் உமை கொழுநர் உளமேவு
பரமகுரு என நாடும் இளையோன்
பணில மணி வெயில் வீசு மணிசிகர மதிசூடு
பழனிமலை தனில் மேவு பெருமாள் (ஆடில்)
-
சில காவியத் துறைகள் உணர்வோர் படித்த தமிழ்
செவியார வைத்தருளும் முருகோன்
சிவனார் தமக்குரிய உபதேச வித்தையருள்
திருவேரகத்தில் அருள் பெருமாள் (ஆடில்)
-
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை
வேதாகமத்தொளிகள் கடல்போல்
வீறாய் முழக்க வரு சூராரிறக்கவிடும்
வேலன் திருத்தணியில் பெருமாள்(ஆடில்)
-
சூரர் கிளையே தடிந்து பாரமுடியே யரிந்து
தூள்கள் பட நீறுகண்ட வடிவேலன்
சோலைதனிலே பறந்துலாவு மயிலேறி வந்து
சோலைமலை மேலமர்ந்த பெருமாள் (ஆடில்)
-
வல்லை குமார கந்தன் தில்லை புராரி மைந்தன்
மல்லு பொராறிரண்டு புய வீரன்
வள்ளிக் குழாமடர்ந்த வள்ளிக் கல்மீது சென்று
வல்லிக்கு வேடை கொண்ட பெருமாள் (ஆடில்)
-
ஆடுமரவும் பிறையும் நீரும் அணியும் சடையர்
ஆதிபரவும்படி நினைந்த குருநாதன்
ஆறுமுகவுங்குரவும் ஏறுமயில் குறவி
யாறும் உரமுந் திருவும் அன்பும் உடையோன் (ஆடில்)
கன்னூஞ்சல்
கன்னூஞ்சல் ஆடுகின்றாள் வள்ளிப் பிராட்டிகன்னூஞ்சல் ஆடுகின்றாள்
- ஆன பயபக்தி வழிபாடு பெரு முக்தி அதுவாக நிகழ்
பக்த ஜன வாரக்காரனும்
ஆயிரமுகத்து நதி பாலனும் அகத்தடிமையானவர்
தொடுத்த கவிமாளைக்காரன் முருகனுடன் (கன்னூஞ்சல்)
-
யானென தெனச் சருவும் ஈன சமயத்தெவரும்
யானும் உணர்தற்கரிய நேர்மைக்காரனும்
யாது நிலையற்றலையும் எழுபிறவிக்கடலை
ஏறவிடு நற்கருணை ஓடக்கார முருகனுடன் (கன்னூஞ்சல்)
- யாமளை மணக்குமுக சாமளை மணிக்குயிலை
ஆயென அழைத்துருகும் நேயக்காரனும்
ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும்
யாகமுனிவர்க்குரிய காவற்கார முருகனுடன் (கன்னூஞ்சல்)
-
வாழி என நித்தம் மறவாது பரவில் சரண
வாரிஜம் அளிக்கும் உபகாரக்காரனும்
மாசிலுயிருக்குயிரும் ஆசில் உணர்வுக்குணர்வும்
வானிலணுவுக்கணு உபாயக்கார முருகனுடன் (கன்னூஞ்சல்)
-
வேலை துகள்பட்டு மலை சூரனுடன் பட்டுருவ
வேலையுற விட்ட தனி வேலைக்காரனும்
வேதியர் வெறுக்கையும் அநாதி பர வஸ்துவும்
விசாகனும் விகற்ப வெகுரூபக்கார முருகனுடன் (கன்னூஞ்சல்)
-
வேடுவர் புனத்தில் உருமாறி முநிசொற்படி
வியாகுல மனத்தினொடு போம் விற்காரனும்
மேவிய புனத்திதணில் ஓவியமெனத்திகழும்
மேதகு குறத்தி திருவேளைக்கார முருகனுடன் (கன்னூஞ்சல்)
-
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ டணைவோன் முருகனுடன் (கன்னூஞ்சல்)
-
கணகணென வீரதண்டை, சரணமதிலே விளங்க
கலபமயில் மேல் உகந்த குமரேசன்
கருவிவரு சூரனங்கம் இருபிளவதாக விண்டு
கதறிவிழ வேலெறிந்த முருகன் குமரனுடன் (கன்னூஞ்சல்)
-
துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
துயிலதர னாத ரித்த மருகன்
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகத கலாப பச்சை மயில்வீரன் முருகனுடன் (கன்னூஞ்சல்)
-
உருவந் தரித்து உகந்து கரமும் பிடித்து வந்து
உறவும் பிடித்தணங்கை வனமீதே
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து
ஒளிர் வஞ்சியை மணக்கும் மணிமார்பன் முருகனுடன்(கன்னூஞ்சல்)
வேல் முருக வேல் முருக வேலன் வேலன்
வேல் முருக வேல் முருக வேலன்
வேல் முருக வேல் முருக வேலன் வேலன்
வேல் முருகன் ஆடிலூஞ்சல்
-
கங்காளி, சாமுண்டி, வாராகி, இந்த்ராணி
கௌமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி திரிபுரை பயிரவி அமலை
கௌரி சுதன் ஆடிலூஞ்சல்
-
சிங்காரி, யாமளை பவானி, கார்த்திகை, கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன் வள்ளியுடன் ஆடிலூஞ்சல்
-
தாதார் மலர்சுனைப் பழனிமலை சோலைமலை
தனிபரங் குன்றேரகம்
தணிகை செந்தூரிடைக்கழி ஆவினங்குடி
முருகனுடன் ஆடிலூஞ்சல்
-
போதார் பொழிற் கதிர்காமத் தலத்தினைப்
புகழும் அவரவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் ஆடிலூஞ்சல்.
கல்யாண ஆரம்பம்
வள்ளி கல்யாண வைபோகமேமுருகன் கல்யாண வைபோகமே
- மாதினை மேனி வைத்த நாதனுமோது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில்வீரன் (முருகன் கல்யாண)
- எயினர் இடும் இதணதனில் இளகுதினை கிளி கடிய திணை காவல் கற்ற குற மட மாது (வள்ளி கல்யாண)
- அண்டர் வாழப் பிரபை சண்டமேருக் கிரியை அளைந்து வீழப் பொருத கதிர் வேலன் (முருகன் கல்யாண)
- கலக இரு பாணமும் திலகவொரு சாபமும் களப மொழியாத கொங்கை குற மாது (வள்ளி கல்யாண)
- வேலையன்பு கூரவந்த ஏகதந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைந்த வடிவேலன் (முருகன் கல்யாண)
- திருமால் அளித்தருளும் ஒரு ஞான பத்தினி விதியானவள் இளையாள் திருமகள் குமாரி (வள்ளி கல்யாண)
- குயில்மொழிக் கயல்விழி துகிர் இதழ் சிலை நுதல் எழுதிட அரிய எழில் மடமகள் வஞ்சி (முருகன் கல்யாண)
- தாதகி, செண்பகம், பூகமார், மந்தாரம், வாஸந்தி அணியும் எங்கள் புனமேவும் வஞ்சி (வள்ளி கல்யாண)
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வாழி என்றே வாழ்த்துகின்றோமே
- தீயிசைந்தெழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்தவர் சேனையுஞ் செலமாள வென்றவன் மருகோனே உனை வாழ்த்துகின்றோமே
- முடிய கொடு முடியசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா குறவர் மடமகளமுத கனதன குவடு திருமார்பா உனை வாழ்த்துகின்றோமே
- நாலுவேத முடாடு வேதனை ஈன கேசவனார் சகோதரி நாதர் பாகம்விடாள் சிகாமணி உமைபாலா உனை வாழ்த்துகின்றோமே
- தினைவனந்தனில் வாழ்வளி நாயகி வளர்தனம் புதை மார்பழகா மிகு திலக பந்தணை மாநகர் மேவிய பெருமாளே உனை வாழ்த்துகின்றோமே
- கோதைப் பித்தாயொரு வேடுவ ரூபைப் பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரு முருகோனே உனை வாழ்த்துகின்றோமே
- வரையை முனிந்து விழவே கடிந்து வடிவே லெறிந்த திறலோனே மதுரித செஞ்சொல் குற மடமங்கை நகிலது பொங்க வரும் வேலா உனை வாழ்துகின்றோமே
- கொண்டலார் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழிகூறுங் கொங்கையாள் குற மங்கை வாழ்தரு குன்றில் மால்கொடு செலும் வேலா உனை வாழ்த்துகின்றோமே
- வழுவார் கட் கூர்சிவ லோகத்தே தரு மங்கை பாலா நீலக்க்ரீப கலாப தேர்விடு நீபச் சேவக செந்தில் வாழ்வே உனை வாழ்த்துகின்றோமே
- பரம கணபதி அயலின் மதகரி வடிவு கொடுவர விரவு குறமகள் அபயமென அணை முருகோனே உனை வாழ்த்துகின்றோமே