77. தமரும் அமரும்


ராகம்: ஹமீர் கல்யாணி தாளம்: ஆதி திச்ர நடை (12)
தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளையஎறியாதே
கமல விமல மரக தமணி
கனக மருவுமிருபாதங்
கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவுதரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநிமலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமிமணவாளா
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய்தருள்வோனே
அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடையபெருமாளே.

thamarum amarum manaiyum iniya
dhanamum arasum ayalaaga
thaRukaN maRali muRugu kayiRu
thalaiyai vaLaiya eRiyaadhE
kamala vimala marakatha maNi
kanaka maruvum irupaadham
karudha aruLi enadhu thanimai
kazhiya aRivu tharavENum
kumara samara muruga parama
kulavu pazhani malaiyOnE
kodiya pagadu mudiya mudugu
kuRavar siRumi maNavaaLaa
amarar idarum avuNar udalum
azhiya amarsey dharuLvOnE
aRamu niRamum ayilu mayilum
azhagum udaiya perumaaLE.

Learn the Song



Raga Hamir Kalyani (Janyam of 65th mela Kalyani)

Arohanam: S P M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 M1 G3 P M1 R2 S


Paraphrase

When Yama casts his noose around our necks, all the material acquisitions and relationships become futile and distant. The only consolation in those lonely hours are the holy feet of our lord. அருளைத் தேடாமல் பொருளையே தேடித் திரியக்கூடாது. நம் உயிர் காலன் வசம் போகும் தருணத்தில் நாம் சேமித்த பொருள்கள் உதவாது. அந்த நேரத்தின் தனிமையும் பரிதவிப்பும் கழிய வேண்டுமானால் இறையருள் வேண்டும். அப்பொழுது நமக்கு முருகன் திருவடிகள் மட்டுமே நமக்கு ஆறுதல் அளிக்க வல்லன. ஆகவே ஆன்மாவின் தனிமை அகல, மெய்யறிவைப் பெறவேண்டும்.

தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக (thamarum amarum manaiyum iniya dhanamum arasum ayalAga) : The relatives living in my household, happiness-yielding money and political power – all become distant when அமரும் மனையும் = இருக்கின்ற மாளிகையும்; இனிய தனமும் = இனிமையான செல்வமும்;

தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே (thaRukaN maRali muRugu kayiRu thalaiyai vaLaiya eRiyAdhE) : when the fierce god of death Yama throws a tight noose around my head; தறு = கொடுமை; தறுகண் = கொல்லுதல், அஞ்சாமை; முறுகு = வலிய;

கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம் கருத அருளி (kamala vimala maragatha maNi kanaga maruvum iru pAdham karudha aruLi) : (To avoid this fate) I should meditate on Your lotus-like, pure feet adorned with emerald and gold

எனது தனிமை கழிய அறிவு தர வேணும் ( enadhu thanimai kazhiya aRivu tharavENum) : grant me the wisdom (to meditate on Thy feet) and end my desolation.

குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே (kumara samara muruga parama kulavu pazhani malaiyOnE) : Oh KumarA, Oh Warrior, MurugA, and Supreme God, You belong to this beautiful Pazhani Hill

கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா (kodiya pagadu mudiya mudugu kuRavar siRumi maNavALA) : You instigated the fierce elephant (ganesha) and married the tribal hunter girl Valli; வள்ளியம்மையிடம் கொடும் வேகமுடைய மதயானையை வரும்படிச் செய்து அவரை மணந்த மணவாளரே! பகடு = யானை; முடிய = (தன் எண்ணம்) முடிய, நிறைவேற; முடுகு(ம்) = செலுத்தும்;

அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே (amarar idarum avuNar udalum azhiya amar seydhu aruLvOne) : You fought to destroy the miseries of devas and the bodies of demons

அறமும் நிறமும் மயிலும் அயிலும் அழகும் உடைய பெருமாளே. (aRamum niRamum mayilum ayilum azhagum udaiya perumALE.) : You are Righteous, have a pleasing complexion, spear, peacock and good looks, Oh Great One!

Comments

  1. enadhu thanimai kazhiya aRivu tharavENum - fantastic lines, thanks for sharing!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே