79. திடமிலி சற்குணமிலி


ராகம்: பந்துவராளி கண்ட சாபு (2½)
திடமிலிசற் குணமிலி நற்றிறமிலியற் புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க்கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற்றழிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப்பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப்பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக்கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக்கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப்பெருமாளே

thidamili saRguNamili natriRamili aRbuthamaana
seyalili meyththavamili naRjepamili sorgamumeedhE
idamili kaikodaiyili soR kiyalbili naR thamizh paada
irupadha mutr iruvinaiyatr iyal gadhiyai peRavENum
kedu madhiyutridum asura kiLai madiya porum vElaa
kiraNa kuRaip piRai aRugak kidhazh malar kokkiRagOdE
padar sadaiyil punainadana paramar thamak korubaalaa
pala vayalil tharaLa niRaip pazhani malai perumaaLE.


Learn the song




Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini)

Arohanam: S R1 G3 M2 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M2 G3 R1 S


Paraphrase

திடம் இலி சற் குணம் இலி நல் திறம் இலி ( thidamili saR guNamili nal RiRamili) : I do not have the determination (to seek your grace); I am devoid of virtuous qualities; I am not competent;

அற்புதமான செயல் இலி மெய் தவம் இலி நல் செபம் இலி (aRputhamAna seyalili mey thavamili nal jebamili) : I am incapable of performing any extraordinary feat; I have not done any true penance; I have never chanted any efficacious mantras;

சொர்க்கமும் மீதே இடம் இலி கை கொடை இலி சொற்கு இயல்பு இலி நல் தமிழ் பாட (sorgamumeedhE idamili kai kodaiyili soRku iyalbili nal tamizh pAda) : thus I have not earned a place for me in heaven; My hands have not been known to give alms; I do not have the expertise to sing good Tamil songs;

இரு பதம் உற்று இரு வினை அற்று இயல் கதியை பெற வேணும் (iru padham utRu iru vinai atRu iyal gadhiyaip peRavENum) : Yet, I desire to reach Your two feet and rid myself of the bondage from my good and bad deeds. தங்களது திருவடிகள் இரண்டையும் சார்ந்து இருவினைகளும் நீங்கப்பெற்று உயர்ந்த முத்தி வீட்டை நான் உய்யும்படி எனக்கு தந்தருளல் வேண்டும். இருவினைகள் நீங்கினால் மௌனநிலை தானே இயல்பாக கிட்டும் என்பதால் “இயற்கதி” என்று முக்தி பேற்றை அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.

கெடு மதி உற்றிடும் அசுர கிளை மடிய பொரும் வேலா (kedu madhi utRidum asura kiLai madiya porum vElA) : You fought to exterminate the entire race of evil-minded asuras,

கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே (kiraNa kuRai piRai aRugu akku idhazh malar kokku iRagOdE) : With the crescent moon, aRugam (cynodon) grass, rudrAksha beads, vilvam (bael) leaves, kondRai (Indian laburnum) flower and the feather from the crane; கிரணங்கள் குறைந்துள்ள இளம்பிறையையும் அறுகம்புல்லையும் எலும்புகளையும், (அல்லது ருத்ராக்ஷ மாலையையும்), கொன்றை மலரையும், கொக்கின் இறகுடனே பரந்துள்ள சடையிற் புனைந்துள்ள நடனம் செய்கின்ற பரம ருடைய ஒப்பற்ற பாலனே! கொக்கிறகு = கொக்குருவம் கொண்டு தேவர்களைத் துன்புறுத்திய குரண்டாசுரன் என்னும் அசுரனைக் கொன்று, அக்கொக்கின் இறகைச் சிவபிரான் அணிந்தனர். (குரண்டம் கொக்கு) கிரண குறைப் பிறை (kiraNa kuRai piRai) : deficiently lighted crescent moon; அக்கு (akku ) : rudraksha;

படர் சடையில் புனை நடன பரமர் தமக்கு ஒரு பாலா (padar sadaiyil punai nadana paramar thamakku oru bAlA) : on His tresses, the Supreme Lord Shiva dances the Cosmic Dance and You are His son! விரிந்த சடைமுடியில் (சந்திரன் முதலியவற்றை) தரித்துக் கொண்டிருப்பவரும், பஞ்சகிருத்ய ஆனந்தத் தாண்டவம் புரிபவரும் ஆகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற புதல்வனே!

பல வயலில் தரள(ம்) நிறை பழனி மலை பெருமாளே.(pala vayalil tharaLa niRai pazhani malai perumALE. ) : You reside on the Mount of Pazhani, the numerous fields of which are filled with pearls.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே