80. திமிர உததி


ராகம்: பைரவிதிச்ர ஏகம் (எடுப்பு 1 இடம்)
திமிர வுததி யனைய நரக
செனன மதனில்விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியுமணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும்வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும்வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருளமிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலைவிடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன்மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர்பெருமாளே

thimira udhathi yanaiya naraga
jenana madhanil viduvaayEl
sevidu kurudu vadivu kuRaivu
siRidhu midiyum aNugaadhE
amarar vadivu madhiga kulamum
aRivu niRaiyum varavE nin
aruLa dharuLi enaiyu manadhodu
adimai koLavum varavENum
samara mugavel asurar thamadhu
thalaigaL uruLa migavEneeL
saladhi alaRa nediya padhalai
thagara ayilai viduvOnE
vemara vaNaiyil inidhu thuyilum
vizhigaL naLinan marugOnE
midaRu kariyar kumara pazhani
viravum amarar perumaaLE.

Learn the song



Raga Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R2 S

Paraphrase

திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல் (thimira udhathi anaiya naraga jananam athanil viduvAyEl) : If you cause me to take birth which is a hell akin to a dark sea, திமிரம் = இருள், darkness;

செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே (sevidu kurudu vadivu kuRaivu siRidhu midiyum aNugAdhE) : then let me not be deaf, blind, ugly or be stricken by poverty, மிடி = வறுமை; poverty;

அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு(ம்) நிறையும் வரவே (amarar vadivum adhiga kulamum aRivu niRaiyum varavE) : Let me have god-like appearance, birth in a noble family, intelligence and righteous character.

நின் அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும் (nin aruLadhu aruLi enaiyu manadhodu adimai koLavum varavENum) : Shower on me Your grace and accept me wholeheartedly as Your slave.

சமர முக வெல் அசுரர் தமது தலைகள் உருள (samara muga vel asurar thamadhu thalaigaL uruLa ) : You conquered the demons in the battle field and made their heads roll, சமர முகம் = போர்க்களம், battle field;

மிகவே நீள் சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே (migavE neeL saladhi alaRa nediya padhalai thagara ayilai viduvOnE ) : You wielded Your vEl (spear) such that the huge ocean roared and the long and tall mount Krouncha was smashed into powder; பதலை (padhalai) : mountain; அயில் (ayil) : vel or spear; தகர = தகர்க்க;

வெம் அரவு அணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே (vem aravu aNaiyil inidhu thuyilum vizhigaL naLinan marugOnE ) : You are the nephew of Lord Vishnu who is sleeping peacefully on a serpent-bed and who has lotus-like eyes! வெம் அரவு அணையில் = வெப்பத்தைத் தரும் ஆதிசேடனாகிய சர்ப்ப சயனத்தின் மேல், அணை = ஆசனம், துயிலிடம்;

மிடறு கரியர் குமர பழனி விரவு அமரர் பெருமாளே. ( midaRu kariyar kumara pazhani viravum amarar perumALE. ) : You are the son of Shiva who has a black throat (due to swallowing alahala poison) and You reside in Pazhani and are the god of celestials. மிடறு (midaRu ) : throat, draught / a quantity of liquid taken with one swallow;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே