322. கும்பகோணம்


ராகம் : யமுனாகல்யாணிஅங்கதாளம்
1½ + 2 + 2½ + 2 (8)
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவசெகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில்வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திரவயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணிமணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறுபெருமாளே.

Learn The Song




Yamuna Kalyani (Janyam of 65th mela Kalyani; Sampoorna Bhashanga)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 R2 S   OR
S N3 D2 P M2 G3 M1 G3 R2 S (M1 anya swara)



Paraphrase

கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் (kumbakONamodu ArUr chidhambaram) : KumbakONam, along with Thiruvaroor, Chidhambaram,

உம்பர் வாழ்வுறு சீகாழி (umbar vAzhvuRu seegAzhi) : Seerkazhi, preferred as a domicile by DEvAS,

நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் (nindridu kondRai vENiyar mAyUram) : MAyooram, belonging to SivA with everlasting kondRai (Indian laburnum) flower on His tresses,

அம்பெறு சிவகாசி (ampeRu sivakAsi) : beautiful Sivakasi,

கொந்து உலாவிய ராமேசுரம்(kondhu lAviya rAmEsuram) : Rameswaram, where pilgrims throng,

தனி வந்து பூஜை செய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் (thani vandhu pUjai sey nAl vEdha thandhirar kumbu kUdiya vELUr) : vELUr (Vaitheeswaran KOyil) where experts in the four VEdAs gather in strength to perform special worship, and . ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள் கூட்டமாகக் கூடும் வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில்,

பரங்கிரி தனில்வாழ்வே ( parangiri thanilvAzhvE) : ThirupparankundRam - these are the few places You choose for Your abode!

செம்புகேசுரம் ஆடானை (jembukEsuram AdAnai) : JembukEswaram (ThiruvAnaikkA), ThiruvAdAnai,

இன்புறு செந்தில் ஏடகம் (inbuRu sendhil Edagam): ThiruchchendhUr, Your favourite place, ThiruvEdagam,

வாழ்சோலை அம்கிரி (vAzh sOlai angiri) : PazhamuthirsOlai, Your dwelling place in SOlaimalai,

தென்றன் மாகிரி (thendran mAgiri) : and the great mount famous for southerly breeze, namely, Pothiyamalai; தென்றல் காற்று வீசும் சிறந்த பொதியமலை

நாடாள வந்தவ (nAdALa vandhava) : These are also a few places ruled by You!

செகநாத (jeganAtham) : Puri, where You manifested as JagannAthan,

செஞ்சொல் ஏரக (senchol Eragam ) : ThiruvEragam (SwAmimalai) where You preached the greatest message to Your Father,

மாவாவினன்குடி (AvAvinan kudi) : ThiruvAvinankudi - Pazhani

குன்று தோறுடன் (kundru thOrudan) : KunRuthOrAdal, as well as,

மூதூர் விரிஞ்சை (mUdhUr virinjai) : ThiruppunavAyil, the ancient town, and Thiruvirinjai known as Vrinjipuram -

நல் செம்பொன் மேனிய (nal sempon mEniya) : these are the places where You are seated with Your reddish gold complexion!

சோணாடு வஞ்சியில் வருதேவே (sONAdu vanjiyil varudhEvE) : You are the Lord at (22) Vanji (alias KaruvUr), the capital of ChozhA Kingdom.

கம்பை மாவடி மீதேய சுந்தர (kambai mA adi meedhEya sundhara) : You are the beautiful Lord prevailing at the foot of the mango tree in KAnchipuram, on the banks of River KampA.

கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் (kambu ulAviya kAvEri sangamukan) : You are at KAveripoompattinam where KAveri with conch shells merges with the sea. சங்குகள் உலவும் காவேரி கடலுடன் சங்கமமாகும் காவிரிப் பூம்பட்டினத்திலும்;

சிராமலை வாழ்தேவ தந்திர வயலூரா (chirA malai vAzhdhEva thandhira vayalUrA ) : You are at ThiruchirA malai as the Commander-in-Chief of all DEvAs and You also belong to VayalUr.

கந்த மேவிய போரூர் (gandha mEviya pOrUr) : You are at ThiruppOrUr, famous for its fragrance.

நடம்புரி தென் சிவாயமுமேயாய் (natampuri then sivAyamumEyA ) : You are in a dancing pose at the beautiful SivAyam (ThiruvAtpOkki); நீ நடனம் புரிந்த ஸ்தலமாம் அழகிய சிவாயம் என்ற திருவாட்போக்கி/ஐயர்மலை, ரத்னகிரி எனப்படும் தலங்களில் விளங்குபவனே

அகம்படு கண்டியூர் வரு சாமீ (agampadu kaNdiyUr varu sAmi) : You are the Lord at ThirukkaNdiyUr where all sins are washed away OR You are the Lord at ThirukkaNdiyUr where one of Brahma's heads was cut; அகம்படு- பாவத்தைத் போக்குகின்ற அல்லது அ + கம் படு – அந்த தலை (பிரமனது) அறுபட்ட; கம் = மண்டையோடு, பிரமன்; கண்டியூர் பிரமன் சிரசைக் கொய்த தலம் ஆகும்;

கடம்பணி மணிமார்பா (kadambaNi maNimArbA) : Your lovely chest displays the beautiful garlands of kadappa flowers!

எம்பிரானொடு வாதாடு மங்கையர் (empirAnodu vAdhAdu mangaiyar) : KALi and her dancing maids, who compete with our Lord SivA in dancing,

உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி (umbar vANi poneeLmAl savundhari) : Saraswathi of DEvAs, and Lakshmi, the beautiful consort of Vishnu,

எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று உறு துதியோதும் (endha nAL thorum ErbAga nindruRu thudhiyOdhum) : assemble everyday with utmost devotion to sing the glory of

இந்திராணி தன் மாதோடு (indhirANi than mAdhOdu) : DEvayAnai, Daughter of IndrANi.

நன்குற மங்கை மானையு மாலாய் மணந்து (nan kuRamangai mAnaiyu mAlAy maNandhu) : whom You married with love and also (married) Valli, the deer-like damsel of KuRavAs;

உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே. ( ulagengu mEviya dhEvAlayam thoRu perumALE.) : You have Your abode at every place of worship in this world, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே