315. வதன சரோருக
Learn The Song
Raga Brindavana Saranga (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 M1 P N3 S Avarohanam: S N2 P M1 R2 G2 SParaphrase
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று (vadhana sarOruga nayana sileemuka vaLLi punaththil nindru) : You went to the millet field to meet VaLLi who has a lotus face and eyes like arrows; தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய வள்ளிநாயகி (காவல் புரிந்து வருகின்ற) தினைப்புனத்தில் இருந்துக் கொண்டு, சரோருகம் (sarOrugam) : lotus; சிலீமுகம் (chileemugam) : arrow, bee;
வாராய் பதி காதம் காதரை (vArAy padhi kAdhang kAdharai) : and said "Come over to me. Your town (VaLLimalai) is just 25 miles away from my town (ThiruththaNigai). காதம் (kAtham) : a measure of distance equal to 10 miles; காதம் காதம் அரை (kAtham kAtham arai) : (10 + 10 + 5 = 25) or 25 miles; "நீ என்னுடன் வருவாயாக, என் ஊர் (திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல்)
ஒன்றும் ஊரும் வயலும் ஒரே இடை (ondrumUrum vayalu morEvidai) : Both of our hometowns are so close to each other that there is only a millet-field in between them," என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல் தான் உள்ளது,"
எனவொரு கா இடை வல்லபம் அற்றழிந்து (enavoru kAvidai vallabam atrazhindhu) : Thus You spoke to her in that grove where You surrendered all Your strength. கா இடை (kA idai) : ஒரு சோலையில்; வல்லபம் (vallabam) : வலிமை;
மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே (mAlAy madalERung kAmuka embirAnE) : You were so enchanted with VaLLi that You were ready to climb the "madal", Oh my Lord!
பனை மட்டையில் உருளையுடன் கூடிய குதிரை போன்ற உருவம் செய்து அந்த வண்டியின் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருக்க அதை கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும். உடம்பு முழுதும் திருநீற்றைப் பூசி, மயில் தோகை (பீலி), பூளைப்பூ, ஆவாரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிந்து ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள ஓவியம் வரையப்பட்ட துணியிலாலான கிழியின் மேல் பார்வையை வைத்து, மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் படாமல் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும். தலைவனின் துன்பத்தை ஊரில் உள்ளவர்கள் பார்த்து துன்பம் தீர்வதற்காகத் தலைவியைத் தலைவனிடம் சேர்த்து வைக்க முயல்வார்கள்.
இதவிய காண் இவை ததையென வேடுவன் (idhaviya kANivai thadhaiyena vEduvan) : The hunter (Kannappan) offered food saying that it was very sweet and dense; ததை (thadhai) : be very close, நெருங்கு 'இதோ, இவ்வுணவு இனிமையானது அடர்ந்து இருக்கிறது, பார்!' என்று கூறிய வேடன், இதவு - இனிப்பு, நன்மை, இதம்; ததை என – சதையுடன் கூடியது;
எய்திடும் எச்சில் தின்று லீலாசலம் ஆடும் (eydhidum echchil thindru leelAchalam Adum) : and after taking a bite by himself, he then offered the food that was gladly accepted by Him (Lord SivA), thus enacting a divine play. வேடுவன் திண்ணன்/கண்ணப்பன் சேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று (கண்ணில் ரத்தத்துடன்) திருவிளையாடல் ஆடிய
தூயவன் மைந்த (thUyavan maindha) : You are the Son of that pure SivA!
நாளும் இளையவ (nALum iLaiyava) : You remain forever youthful;
மூதுரை மலை கிழவோனென (mUdhurai malai kizhavOn ena) : (at the same time) the ancient work in Tamil (ThirumurugAtRuppadai) calls You the old man of the mountains! பழைய நூல் திருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே (மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால் மூதுரை = மூதுரையாகிய திருமுருகாற்றுப் படையில் சொன்னபடி; கிழவன் = தலைவன், உரிமை உடையவன். குறிஞ்சி நிலத்தின் அதாவது மலை மற்றும் மலைசார்ந்த நிலத்திற்குரிய தலைவன்.
வெள்ளமெனக் கலந்து நூறாயிர பேதம் சாதம் ஒழிந்தவா தான் (veLLam enak kalandhu nURu Ayira bEdham jAtham ozhindhavA dhAn) : (When You are worshipped this way), millions of births that surge like a flood are destroyed. This is indeed a miracle! சாதம்/ஜாதம்(satham/jatham) : birth; நூறாயிர பேதம் சாதம் = பல ஆயிரக் கணக்கான பேதமாக வரும் 84 நூறாயிரம் வகை பிறப்புக்களை;
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த (gadhai gana chApa thigiri vaLai vALodu kaivasi viththa) : He holds in His hands five different weapons; GowthamOthaki as the mace, the great SArangam as the bow, Sudharsanam as the wheel, PAnchajanyam as the Conch and NAndhakam as the sword; கெளமோதகி என்னும் கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், சுதரிசனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கமும், நாந்தகம் என்னும் வாளும் கையில் தங்க வைத்த, கன சாபம்(gana chApa) : பெருமை பொருந்திய வில் (சாரங்கம்); திகிரி (thigiri) : chakra; வளை (vaLai) : conch;
நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ (nandha gOpAla mageepan dEvi magizhndhu vAzha) : Yasodhai, the consort of King NandagOpan, was delighted
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் ( kayiRod ulUkalam uruLa ulAviya kaLvan) : when the grinding stone to which she tied Him was dragged by the famous butter thief; உலூகலம் (uloogalam) : உரல்;
அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள (aRap payandhu AgAya kapAlam peeRa nimirndhuneeLa) : He grew terrifyingly upto the sky piercing it with His head; மிகவும் பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக வளர்ந்து
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற (vitharaNa mAvali veruva mahAvrutha veLLa veLukka nindra) : and stood innocently in front of the benevolent Emperor MahAbali as pious little VAmanan seeking alms; கொடையில் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அச்சம் உற, சிறந்த விரத சீல உருவத்துடன் (வாமனனாக) பகிரங்கமாய் எதிரில் நின்ற நாராயணனாகிய திருமாலின் குழந்தையாகிய பிரமனை கோபித்தத் தலைவனே விதரண (vitharaNa) : philanthropist; வெள்ள வெளுக்க நின்ற (veLLa veLukka nindra) : பகிரங்கமாய் எதிரில் நின்ற;
திருமால் காசிபரிடத்து வாமனனாக அவதரித்து, அசுர சக்ரவர்த்தி மாபலியிடம் மூன்று அடி மண் கேட்டார். அசுரப் புரோகிதன் சுக்கிரன் தடுத்தும் மாபலி இதற்கு சம்மதித்தார். வாமனன் இரண்டு அடியால் மூவுலகை அளந்து, ஓரடி வைக்க இடம் பெறாமலிருக்க, மாவலி தன் தலையைக் காட்டினார் திருமால் மூன்றாவது அடியால் மாவலியைப் பாதளத்தில் அழுத்திச் சிறை இட்டார்.
நாராயண மாமன் சேயை முனிந்த கோவே ( nArAyaNa mAman sEyai munindhakOvE) : and He is Your Uncle NarAyaNan! You lost Your temper with His son, BrahmA, Oh Lord!
விளை வயலூடு இடை வளை விளையாடிய (viLai vayalUdu idai vaLai viLaiyAdiya) : Amid the fertile paddy field, there are plenty of conch shells in this place,
வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத (veLLinagark amarndha vElAyudha) : called VeLLinagar (VeLLigaram), which is Your abode, Oh Lord of the Spear!
மேவும் தேவர்கள் தம்பிரானே.(mEvun dhEvargaL thambiRAnE.) : You are the Master of all the DEvAs worshipping You!
Comments
Post a Comment