318. உரத்துறை

ராகம்: வாசஸ்பதிசதுஸ்ர ஜம்பை (7)
உரத்துறை போதத்தனியான
உனைச்சிறி தோதத்தெரியாது
மரத்துறை போலுற்றடியேனும்
மலத்திருள் மூடிக்கெடலாமோ
பரத்துறை சீலத்தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற்றருள்வோனே
வரத்துறை நீதர்க் கொருசேயே
வயித்திய நாதப்பெருமாளே.

Learn The Song




Paraphrase

Hindu religion considers gy(jn)ana or wisdom as the total experience of the Supreme Reality, gained in a state of intellect/awareness/perception that goes beyond reasoning and inference. All the phenomena we observe in the entire cosmic creation are rooted in Universal Consciousness or Brahman. With our minds covered with impurities or malas, we cannot experience the Supreme reality, and we would spend our lives like dead wood.

உரத்து உறை போதத் தனியான உனைச் (uraththu uRai bOdhath thaniyAna unai) : You are unique, and a strong entity of knowledge, திண்மையான அறிவிலே உறைகின்ற சிறந்த ஞானப்பொருளான உன்னை; போதம் (botham) : wisdom, ஞானம்; தனியான (thaniyaana) : unique; உரம் (uram) : strong, அறிவு, மனத்திண்மை. அறிவு வெற்றுக் கல்வியாக இல்லாமல் ஞானமே வடிவானவன் இறைவனை பற்றிய உண்மை அறிவு மனதில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

சிறிது ஓதத் தெரியாது (chiRidhu Odhath theriyAdhu) : but I do not know to worship You even a little.

மரத்து உறை போலுற்று அடியேனும் (maraththu uRai pOl utru adiyEnum) : I simply stand inert as a dead log of wood from the trees. மரத்துறை = மரக்கட்டை;

மலத்திருள் மூடிக் கெடலாமோ (malaththu iruL mUdik kedalAmO) : and let my mind be tarnished by the darkness from the three vices, namely haughtiness, karma and delusion. Should I get destroyed thus?

பரத்துறை சீலத்தவர் வாழ்வே ( paraththuRai seelath thavar vAzhvE) : You are the treasure of the virtuous, pious and wise people leading venerable lives! மேலான நிலையில் புனித வாழ்க்கை வாழ்பவர்களின் செல்வமே! பரத்து உறை = மேலான நிலையிலுள்ள; சீலத்தவர் = நல்லொழுக்கத்தவர்;

பணித்தடி வாழ்வுற்று அருள்வோனே (paNiththadi vAzhvutru aruLvOnE) : You have to command me with grace to serve Your holy feet. உந்தனை பணிந்து இருக்கும்படி நெறிப்படுத்தி, உந்தன் திருவடிப் பணியிலேயே வாழுகின்ற நல்வாழ்வை அருள்பவரே!

வரத்துறை நீதர்க்கு ஒரு சேயே (varaththuRai neethark orusEyE) : You are the unique son of SivA whose policy is to always be ready to grant boons! வரம் தரும் வழியையே தமது நீதியாக கொண்ட சிவனது குழந்தையே!

வயித்திய நாதப் பெருமாளே (vayidhdhiya nAthap perumALE) : You are the Master of the Lord at Vaiththeeswaran KOyil, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே