503. முத்து நவரத்ன


ராகம் : வலசி தாளம்: 1½ + 1 + 1½ + 1
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதருவெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுரரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணை விட்டஅரி
பற்குனனை வெற்றிபெறரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம்அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததெனதெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகையெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள்புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரிபெருமாளே.

Learn The Song



Raga Valaji (Janyam of 16th mela Chakravakam)

Arohanam: S G3 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P G3 S


Paraphrase

Saint Arunagirinathar asks Murugan, the Preceptor who preached the Fundamental Truth to Lord Shiva — the venerated consort of Devi and the sacred tree that yields the fruit of liberation to His devotees — to fill his heart with love and compassion.

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி ( muththu nava rathna maNi paththi niRai saththi idam moyththa giri) : "He is like a mountain, with His left side united with Devi Parvathi, adorned with rows of pearls and nine precious gems; முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ளவரும், மலை போன்றவரும், பத்தி நிறை (paththi niRai) : வரிசையாக விளங்கும்;

முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள் (muththi tharu ena Othum mukkaN iRaivarkkum aruL vaiththa murugak kadavuL) : He is the sacred tree that grants the fruit of Liberation; He is the three-eyed Lord SivA" - to Lord SivA who is praised thus, Lord Murugan kindly preached! முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம் ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள்,

முப்பது முவர்க்க சுரர் அடி பேணி (muppathu muvarkka surar adi pENi) : When all the celestials of thirty-three kinds prostrated at His feet, முப்பத்து மூன்று வகையான தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,

பத்து முடி தத்தும் வகை உற்ற கணை விட்ட அரி (paththu mudi thaththum vagai utRa kaNai vitta ari) : Lord VishNu (as RAmA) shot His arrow knocking down the ten heads (of RAvaNA); (இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால், கணை (kaNai) : arrow;

பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் (paRgunanai vetRi peRa ratham Urum) : and the same Lord VishNu (as KrishNA) drove the chariot for ArjunA making him the victor in the (Mahabharata) war; அருச்சுனன் (மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து) தேரைச் செலுத்திய, பற்குனன் (paRgunan) : Arjuna;

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் (pacchai niRam utRa puyal accham aRa vaiththa poruL) : He is of the hue of greenish dark cloud; that VishNu was terrified of the demons (SUrapathman, Singamukan and ThArakan); and You are the Lord who removed His fear, Oh MurugA! பச்சை நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க வைத்த முருகக் கடவுளே,

பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே (paththar manathu utRa sivam aruLvAyE) : Kindly grant me the bliss that prevails in the hearts of all Your devotees! பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.

தித்திமிதி தித்திமிதி ... மத்தளம் இடக்கை துடி (thiththimithi thiththimithi ..... maththaLam idakkai thudi) : (To the meter thiththimithi..) the drums, idakkai (a percussion instrument made of leather beaten only by the left hand) and udukkai (hand-drums) were beaten; (தித்திமிதி ...) ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி, உடுக்கை ஆகியவை ஒலிக்க, துடி (thudi) : உடுக்கை;

தத்ததகு செச்சரிகை செச்சரிகை என ஆடும் (thaththathaku seccharikai seccharikai ena Adum) : He danced to the meter of "thaththathaku seccharikai seccharikai" தத்ததகு செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும்

அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி அருள் புரிபாலா (aththanudan oththa nadani thripuvanaththi navasiththi aruL saththi aruL puri bAlA) : synchronising with that dance of Father SivA, She too dances; She is the primordial Goddess of the three worlds; She is PArvathi who bestows fresh boons on Her devotees; You are Her child, Oh Lord! தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம் புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய குழந்தையே,

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் (aRpa idai thaRpam athu mutRu nilai petRu vaLar al) : This town is full of multi-storied mansions where women with slender waists live; it is also surrounded by tall fortress walls; நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம் நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும், தற்பம் (thaRpam) : multi-storeyed houses, மெத்தை வீடுகள்; அல் (al) : மதில்களுடன் விளங்கும்;

கனக பத்ம புரி பெருமாளே.(kanaka pathma puri perumALE.) : this is Madhurai, famous for its Golden Lotus Tank; and it is Your abode, Oh Great One! பொற்றாமரைக் குளம் அமைந்த பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. கனக பத்ம புரி (kanaka pathma puri) : பொற்றாமரைக் குளம் விளங்கும் பட்டணமாகிய மதுரை.
இதன் சிறப்பு: சிவபெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களில் வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, நக்கீரரை உயிரோடு எழுப்பியது முதலிய திருவிளையாடல்களை நடத்திய இடமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம் திகழ்கிறது. புராணப்படி போரில் விருத்திராசுரனைக் கொன்றதால் தேவேந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கடம்பவனமாக இருந்த இந்தத் தலத்துக்கு வந்தபோது ஈசன் சுயம்புவாக வெளிப்பட்டு இந்திரனுக்கு தரிசனம் கொடுத்தாராம். இறைவனுக்கு மலர்கொண்டு இந்திரன் வழிபட விரும்பியபோது குளத்தில் பொற்றாமரைகள் உருவானதாகவும் அதைக் கொண்டு இந்திரன் சிவனுக்கு பூஜை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த குளம் ‘பொற்றாமரைக் குளம்’ என்று பெயர் பெற்றது. சங்க காலத்தில் சங்கப் பலகை ஒன்று இந்தக் குளத்திலிருந்ததாகவும் தகுதியுடைய நூல்களை சங்கப் பலகை ஏற்கும் என்றும் புராணம் சொல்கிறது.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே