501. வாதினை அடர்ந்த
Learn The Song
Ragam: Chakravaham
Ragam: Kuntalavarali
Paraphrase
ஆறுமுகனின் ஆறுமுகங்களும், வேத, புராண, இதிகாசங்கள் வரிந்து கட்டிக் கொண்டு விளக்க முயலும் கடவுள் தத்துவமான ஆறு மகா மந்திரங்கள் என்பதை இதுவரை அறியாமல் இருந்து விட்டேனே என மனம் நொந்து போகிறார் அருணகிரிநாதர். "ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற 'ஸோஹம்' அது தந்து எனையாள்வாய்" என்று வேண்டுகிறார். 'நானென்பதற்று உயிரோடு ஊனென்பதற்று வெளி நாதம் பரப்பிரம ஒளி மீதே ஞானம் சுரப்ப' என அருணகிரிநாதர் அருளியது போன்று அனுபவமே 'ஸோஹம்'. அருட்சோதியை யுணர்கின்ற சுகவாழ்வே சிவானந்தப் பேறு. ஆதி சங்கர பகவத்பாதரின் அத்வைத சித்தாந்தப்படியும் ஸ்ரீகண்டாசாரியாரின் சிவாத்வைத சித்தாந்தப்படியும், பரமாத்மா, ஜீவாத்மா, மாயை (அவித்யா) மூன்றுமே அனாதி. துக்க நிவ்ருத்தி, ஆனந்த ப்ராப்தி இரண்டும் மாயை விலகினாலேயே சித்திக்கும். அதற்கு ஈஸ்வராநுக்ரஹம் இருத்தல் அவசியம்.
Saint Arunagirinathar talks of the do's he hasn't imbibed in his life and the don'ts he hasn't yet given up, thus effectively enumerating the do's and don'ts to be followed in our lives.
The six faces of Murugan represent the composite of six attributes of the Lord and bestow on its devotees all the wealth that they need in this life and beyond. Saint Arunagirinathar also sings of the glory of His Vahana, the peacock. He describes the eternally radiant and the self-illumined state of Sadashiva. Life of/as Shiva begins when the wisdom of the mind and intellect is absorbed in that divine light of grace.
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் (vAdhinai adarndha vEl vizhiyar) : The illusory looks of the women with spear-like eyes that are close-knit as though ready for a combat – வம்பு செய்வது போன்று அடர்ந்து நெருங்கி வேலொத்த கண்களை உடைய பெண்களின், வாது ( vaathu ) : disputation, தர்க்கம்;
அது ஒழிந்து தெளியேனே (thangaL mAyamadhu ozhindhu theLiyEnE) : I am unable to overcome that enchantment and passion. மயக்குதல் என்னை நீங்கி நான் தெளிவு பெறவில்லையே.
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து (mA malargaL koNdu mAlaigaL punaindhu) : Making garlands from beautiful and fragrant flowers, நல்ல மலர்களால் ஆன மாலைகளைத் தொடுத்து
மாபதம் அணிந்து பணியேனே (mA padham aNindhu paNiyEnE) : I have never decorated Your two hallowed feet nor worshipped. நின் சீரிய அடிகளில் சூட்டி நான் பணியவில்லையே.
ஆதியொடும் அந்தமாகிய நலங்கள் (Adhiodum antham Agiya nalangaL) : From the very beginning till the very end, all good things முதலில் தொடங்கி இறுதி வரை உள்ள சகல நலன்களும்
ஆறுமுகம் என்று தெரியேனே (ARumugam endru theriyEnE) : are entirely due to ARumugam (Six Faces) — this Truth I did not know. ஆறுமுகம் என்ற உண்மையை நான் தெரிந்து கொள்ளவில்லையே.
The six faces of the Lord represent the six divine characteristics. கருணைகூர் முகங்கள் ஆறும் ஆறுகுணங்களே. அவ்வருட் குணங்களாவன:-
- முற்றறிவு உடைமை, Sarvagnatha sakthi, Omniscience;
- வரம்பிலி இன்பம் உடைமை, அளவிலா ஆனந்தம் உடைமை, nithya thirupthi sakthi, infinite happiness;
- இயற்கையுணர்வு, அநாதிபோதம் , Intuitive Wisdom, Making all lives intelligent; எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும்;
- தம்வயமுடைமை-- தன்வயத்தனாதல், அதாவது தனக்கு மேல் ஒருவன் இல்லாத நிலை, ஸர்வ சுதந்திர சக்தி ; self existence, Sarva suthanthira sakthi, Granting liberation to all lives;
- பேரருள் உடைமை, அலுப்த சக்தி - ஐந்தொழிலைப் புரியும்; aluptha sakthi: Performing five major cosmic tasks, namely, creation, protection, destruction, concealment and compassion;
- முடிவிலா ஆற்றல் உடைமை, அநந்த சக்தி - எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்; anantha sakthi: Omnipotence;
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது (Ana thani manthra rUpa nilai koNdadhu) : The shape of the Sacred and Unique ManthrA OM is ஒப்பற்ற ஓங்கார மந்திர ரூப நிலை கொண்டது
ஆடும் மயில் என்பது அறியேனே (Adu mayil enbadhu aRiyEnE) : that of the dancing peacock - even this I never knew. ஆடுகின்ற நிலையிலுள்ள மயில்தான் என்று அறியவில்லையே.
நாதமொடு விந்துவான உடல் கொண்டு (nAdhamodu vindhu Ana udal koNdu) : With this body made out of a sperm (vinthu) and an egg (naatham) நாதமும் விந்துவும் சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால்
நானிலம் அலைந்து திரிவேனே (nAnilam alaindhu thirivEnE) : I have been roaming the entire world. உலகமெல்லாம் அலைந்து திரிகின்றேனே.
நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு (nagam aNigindra nAtha nilai kaNdu) : Raising my Kundalini through breathing to reach the final scintillating stage (of Agnya Chakra) and viewing the Cosmic Light,
The following explanation is taken from Krupananda Variyar Swamigal's book:
நாகமணிகின்ற நாதநிலை கண்டு
நாகம் அணிகின்ற நாத என்ற சொல்லுக்கு அடியில் வருமாறு பல பொருள்கள் கூறலாம்.
- நாகம்-பாம்பு; சர்ப்பாபரணத்தை யணிகின்ற நாதரே!
- சர்ப்பத்தை அணிதலின் பொருளாகிய நாதத்தின் இருப்பிடத்தைக் கண்டு; (சுத்தமாயையின் அந்தமாயுள்ள நாதத்தத்துவத்தின் இருப்பிடங்கண்டு), நாகம் என்பது குண்டலினி-சுத்தமாயை. அதாவது பிராணாயாம் செய்வதனால் பாம்பு மண்டலமிட்டுப் படுத்திருப்பது போலுள்ள குண்டலினி நடுவிலுள்ள தீ மண்டி எழுந்திருக்க, அதனால் எழும் பிரம்ம நாதத்தைக் கேட்டு சிவயோகிகள் இன்புறுவர்.
- நாஹம் என்ற சொல் தமிழில் நாகம் என வந்தது. இதே பாடலில் 14 ஆவது வரியில் சோஹம் என்ற சொல் சோகமென வந்திருப்பதையுங்காண்க. ந-அஹம் என்பதும் நாஹம்; அஹம்- நான்; ந-அல்ல; நாஹம் - நானல்ல; அடியார்கள் இறைவன் திருவடியில் நானல்ல ('மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல; நான் என்ற அகங்காரமும் நானல்ல, அறிவும் சக்தியும் நானல்ல. உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல; ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல') என்ற சிவபோதத்தை ஒரு மலராக அர்ச்சிப்பர்.
நாடி அதில் நின்று தொழுகேனே (nAdi adhil nindru thozhugEnE) : I failed to concentrate on it for a steady worship. விருப்புற்று அந்த நிலையிலே நின்று நான் தொழவில்லையே.
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற (jOthi uNargindra vAzhvu sivam endra) : The realization of that Light in my life is seeing SivA; and அந்த ஞான ஒளியை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற
சோகமது தந்து எனை ஆள்வாய் (sOham adhu thandhu enaiyALvAy) : then He becomes Me - You have to bless me with that state. (soham - सोऽहम् or I am He) அதுவே நான் என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய்.
உமது திருவருள் நிலையை ஊன்றிப் பார்த்து அந்நிலையில் உறைத்து நின்று அருட்சோதியை யுணர்கின்ற சுகவாழ்வே சிவானந்தப் பேறு என்று தெளிந்து அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து அடியேனை யாட்கொண்டருள்வீர்.
சூரர் குலம் வென்று வாகையொடு சென்று (sUrar kulam vendru vAgaiyodu sendru ) : After destroying the SUras, You marched victoriously to சூரர் குலத்தை வென்று வெற்றியோடு போய்
சோலை மலை நின்ற பெருமாளே.(sOlai malai nindra perumALE. ) : PazhamuthirchOlai, on whose mount You stand, Oh Great One! பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
சுருக்கவுரை
முற்றறிவுடைமை முதலாக முடிவிலா ஆற்றலை கடையாகவுள்ள ஆறு அருட்குணங்களே முருகப்பெருமானுக்கு ஆறுமுகங்களாக அமைந்திருக்கின்றன என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. உன்னுடைய மயில் எல்லாக் கலைகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் பிறப்பிடமாக விளங்கும் ஒப்பற்ற ஒருமொழியாகிய ஓங்கார வடிவத்தைக் கொண்டது என்பதை அடியேன் அறிந்துகொள்ளவில்லை; நாதவிந்துக்களான உடம்பை நிலையெனக் கொண்டு, பூ மண்டலத்தில் வீணே அலைந்து அடியேன் திரிந்து கெடுகின்றேன். நான் அல்ல என்று அன்பர்கள் அர்ச்சிக்கும் சீவபோதமாகிய மலரைஅணிகின்ற தலைவனே! தேவரீருடைய நிலையைக் கண்டு, அந்நிலையை உற்றுப்பார்த்து அந்த அகப்பார்வையில் நிலைத்து, சலனமற்று நின்று, ஒருபோதும் தொழுதேனில்லை; அருட்சோதியை உணர்கின்ற சுகவாழ்வே மங்கலம் என்று கூறுகின்ற 'அது நான்' என்ற சிவோகம் பாவனையைத் தந்து அடியேனை ஆட்கொண்டருள்வீர்.
Very meaningful song. Glory to Lord Muruga and his Thiruppugazh
ReplyDeleteசுவையான பழத்தைக் குட்டை நீக்கிச்சாறாக்கித்தந்நமைக்கு நன்றி.
ReplyDeleteகொட்டை என்று படிக்கவும்
ReplyDelete