502. முறுகு காள


ராகம்: கமாஸ் தாளம்: ஆதி திச்ர நடை
முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
முளரி வேரி முகைய டர்ந்தமுலைமீதே
முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து
முகமொ ராறு மிகவி ரும்பி அயராதே
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
அடைய வாரி மிசைபொ ழிந்துனடிபேணி
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
னடிமை யாகு முறைமை யொன்றைஅருள்வாயே
தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து
தமர வேலை சுவற வென்றவடிவேலா
தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு
தரணி யேழும் வலம்வ ருந்திண்மயில்வீரா
மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து
வலிய காவல் புனைய ணங்கின்மணவாளா
மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி
வளர்சு வாமி மலைய மர்ந்தபெருமாளே.

Learn The Song




Know the Ragam Khamas/Kamas

Janyam of 28th mela Hari Kambhoji
Arohanam: S M1 G3 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S

Paraphrase

The saint poet prays to the lord that instead of being enamored and ensnared by the beauty of the street women, he should seek the company of the Lord's devotees whose hearts melt with the love for the lord. With intense longing in their hearts, these true seekers of the Lord surrender self to become His willing slaves. They see the world as the play of the Divine, and do all the worldly duties as an offering to him. With tears of love drenching their tender hearts that is filled with universal and unconditional love, they long for signs that the lord has listened to their hearts' innermost thoughts, and returned the divine love that engulfs them in bliss. The poet desires to have such an ecstatic heart.

முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உ(ள்)ள(ம்) மயங்கி (muRugu kALa vidam ayinRa iru kaN vElin u(L)La(m) mayangi) : I lost my heart to those whores whose two spear-like eyes have imbibed the gushing and evil poison; அயில்தல் — உண்ணுதல்; கடுமையாகப் பொங்கி எழுந்த ஆலகால விஷத்தை உண்ட இரண்டு கண்களாகிய வேலினால் (இப் பொது மகளிரிடம்) மனம் மயங்கி, காள விடம்(kALa vidam) : black poison;

முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே முழுகு காதல் தனை மறந்து (muLari vEri mugai adarntha mulai meethE muzhugu kAthal thanai maRanthu) : I wish to forget my passion for drowning in their fragrant bosom that looks like the lotus bud, தாமரையின் மணம் உள்ள மொட்டுப் போன்ற மார்பின் மேல் முழுகுகின்ற காதலை மறந்து, முளரி (muLaari) : lotus; வேரி (vEri) : fragrance; முகை (mugai) : bud;

பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி (parama njAna oLi siRanthu mukam oru ARu mika virumbi) : desire to have the vision of Your six hallowed faces that radiate the bright light of the great Knowledge.மேலான ஞான ஒளியைச் சிறந்து வீசும் உனது ஆறு முகங்களையும் மிகவும் விரும்பி,

அயராதே அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி (ayarAthE aRuku thALi naRai avizhntha kuvaLai vAsa malar karanthai adaiya vAri misai pozhinthu un adi pENi) : and shower tirelessly plenty of aRugam (cynodon) grass, Umaththai flower, the fragrant lily and the green vilvam (bael) leaves dipped in the holy ash filled with aroma on Your hallowed feet which I am seeking with great devotion! சோர்வில்லாமல் அறுகம் புல், ஊமத்தை, மணம் வீசும் குவளை, வாசம் மிக்க திரு நீற்றுப் பச்சை வில்வ இவைகளை எல்லாம் நிரம்ப உன் பாதங்களின் மேலே சொரிந்து உனது திருவடியை விரும்பி,

அவசமாகி உருகு தொண்டர் உடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே (avasamAgi urugu thoNdar udan athAgi viLaiyum anbin adimaiyAgum muRaimai onRai aruLvAyE) : Kindly grant me the good fortune of mingling with Your devotees who spontaneously lose themselves and melt their heart so that I could abide by their great discipline and be deemed as Your servant in bondage of love, Oh Lord! தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களுடன் கலந்து கூடி, அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக.

தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா (thaRukaN veerar thalai arinthu porutha cUran udal piLanthu thamara vElai suvaRa venRa vadi vElA) : The demon SUran fought the war by severing the heads of many fearless warriors; by splitting his body into two, You triumphantly wielded the spear, which also dried up the roaring sea, Oh Lord!. அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை வெட்டிச் சண்டை செய்த சூரனுடைய உடலை இரு கூறாகப் பிளந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்ற கூரிய வேலனே, தறுகண் (tharukaN) : fearless, அஞ்சாமை தமரம்(thamaram) : noise/sound, ஒலி; வேலை (vElai) : sea;

தரள மூரல் உமை மடந்தை முலையில் ஆர் அமுதம் உண்டு தரணி ஏழும் வலம் வரும் திண் மயில் வீரா (tharaLam Ural umai madanthai mulaiyil Ar amutham uNdu tharaNi Ezhum valam varum thiN mayil veerA) : After copiously imbibing the nectar-like breast-milk of Goddess UmA, whose teeth are like pearls, You went around the seven worlds, mounting the powerful peacock, Oh valorous One!.முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியின் மார்பகங்களில் நிரம்ப பால் அமுதம் உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த வலிய மயில் வீரனே, மூரல் (mooral) : பல், புன்சிரிப்பு;

மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதணில் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா ( maRu ilAtha thinai viLaintha punam vidAmal ithaNil irunthu valiya kAval punai aNangin maNavALA) : She never left the millet-field that produced unblemished crops of millet; She was seated on the raised bamboo platform in the millet-field and zealously guarded the crops; and You are the consort of that damsel, VaLLi! குற்றம் இல்லாத தினை விளைந்த புனத்தை விட்டு நீங்காது, பரண் மீது இருந்து பலமாகக் காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் கணவனே,

மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன(ம்) நெருங்கி வளர் சுவாமி மலை அமர்ந்த பெருமாளே. (maruvu njAzhal aNi serunthi adavi cUtha vana(m) nerungi vaLar suvAmi malai amarntha perumALE.) : The flower garden in this place has aptly fitting kondRai (Indian laburnum) flowers of the variety of tiger's claws and beautiful cherunthi flowers; mango forests also abound in SwAmimalai (ThiruvErakam), and You are seated here, Oh Great One! பொருந்திய மயில் கொன்றை, அழகிய செருந்தி இவையுள்ள நந்தவனமும், மாமரக் காடும் நெருங்கி வளரும் (சுவாமிமலையில்) திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. ஞாழல் (njAzhal) : a small flowering tree, caesalpinia pulcherrima, மயில் கொன்றை ; சூதம் (sootham) : mango tree;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே