476. இருளுமோர்
Learn The Song
Know Ragam Vachaspati (64th melakarta)
Arohanam: S R₂ G₃ M₂ P D₂ N₂ Ṡ Avarohanam: Ṡ N₂ D₂ P M₂ G₃ R₂ SParaphrase
Holy Saint Arunagirinathar pleads for admission into the land of Siva that is beyond the light and darkness, so that he can soak in the nectar of
இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத (iruLum Or kadhir aNugoNAdha) : Neither darkness nor a ray of light (of the sun or the moon) can penetrate this land; இருட்டும் சூரிய சந்திர ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத
பொன் இடம் அதேறி (pon idam adhERi) : may I reach that land where neither day nor night exists, இரவு பகல் அற்ற இடத்தை யான் அடைந்து,
என் இரு நோயும் எரியவே (en iru nOyum eriyavE) : where my two ailments, namely good and bad deeds, get burnt down; என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும்,
மலம் ஒழியவே (malam ozhiyavE) : my three slags, namely, arrogance, karma and delusion, are destroyed; ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும்,
சுடர் இலகு மூலக ஒளி மேவி (sudar ilagu mUlaka oLi mEvi) : the luminous and the fiery flame of Mulathara Chakra representing Shiva spreads; ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி,
அருவி பாய இன் அமுதம் ஊற (aruvi pAya in amudham URa) : and the heavenly and sweet nectar flows like a waterfall; அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற,
உன் அருளெலாம் எனது அளவாக (un aruLelAm enadh aLavAga) : and Your entire grace comes within my reach; உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக
அருளியே சிவ மகிழவே பெற (aruLiyE siva magizhavE peRa) : Grant me the bliss of SivA and make me ecstatic; உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு
அருளியே இணை அடி தாராய் (aruLiyE iNai adi thArAy) : and bless me with Your two hallowed feet! அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக.
பரம தேசிகர் குரு இலாதவர் (parama dhEsikar guru ilAdhavar) : The Supreme master, DakshinamUrthi; with no master for Himself; மேலான தக்ஷிணாமூர்த்தி தேசிகரும், தமக்கு ஒரு குரு இல்லாதவரும்,
பரவை வான் மதி தவழ் வேணி (paravai vAn madhi thavazh vENi) : who adorns His tresses with the wide river GangA and the crescent moon; பரந்த கடல் போன்ற கங்கையும் வானத்துச் சந்திரனும் தவழ்கின்ற சடையரும், பரவை (paravai) : ocean, sea; here, river Ganges;
பவள மேனியர் எனது தாதையர் (pavaLa mEniyar enadhu thAthaiyar) : who has a body of coral hue, He is my Father; பவள நிற மேனியருமான எனது தந்தையாரும்,
பரம ராசியர் அருள்பாலா (parama rAsiyar aruL bAlA) : Himself a mystic who is immersed in the supreme secret (of Chidhambaram); and You are His Son! பரம ரகசியமாகும் சிதம்பர ரகசியருமான சிவபிரான் அருளிய பாலனே,
மருவி நாயெனை அடிமை ஆம் என (maruvi nAyenai adimai Am ena) : You came graciously to accept me as Your slave அடியேனிடம் வந்து கூடி, என்னை ஓர் அடிமையாக ஏற்றுக் கொண்டு,
மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே (magizh mey nyAnamum aruLvOnE) : and blessed me with True Knowledge that affords great pleasure. மகிழ்ந்து மெய் ஞானத்தை அருள்வோனே,
மறை குலாவிய புலியுர் வாழ் (maRai kulAviya puliyur vAzh) : You reside in PuliyUr (Chidhambaram) where all the sacred VEdAs also pervade. வேதங்கள் விளங்கும் புலியூர் சிதம்பரத்தில் வாழ்பவனே,
குற மகள் மெல் ஆசை கொள் பெருமாளே. (kuRa magaL mel Asai koL perumALE.) : and You have passionate love for VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One! குறப்பெண் வள்ளிமீது ஆசை கொண்ட பெருமாளே.
ஆணவம் என்ற மூல மலம்
நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம். நம்மைத்தவிர ஏதுமில்லை என நினைப்பது ஆணவம். ஆணவம் என்பது "நான எனது என்கிற நினைப்பு. ஜீவன் தன் அறிவு நிலையை மறந்து, நான், எனது என்று அனைத்திலும் உரிமை கொண்டு, அஞ்ஞானத்தில் மயங்கி, தன் செல்வம், தன் மனைவி, தம் மக்கள் என்று பற்று கொண்டு, ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு எல்லாம் தன்னுடையதே என்ற நிலையில் இருப்பதே ஆணவம் எனப்படுகிறது. நான் என்பது அகங்காரம், எனது என்பது மமகாரம், அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்த எழும் உத்வேகம் ஆணவம். நமக்குரியதை, நிரந்தரமான நம்மை நாம் என்று நாம் சொல்வது வேறு, நமக்குரியது அல்லாத தோன்றி மறையக் கூடிய, நிரந்தரமற்ற ஒன்றை நாம் என்று சொல்வது வேறு. பரம்பொருள் தன் இருப்பைத் தான் உணர்ந்த அந்த ஒரு சில நொடிகளில் தோன்றிய நான் என்ற உணர்வு ஆணவமாகாது. அது பேருணர்வு. நான் என்கிற அகங்காரமும், தன்னை வெளிப்படுத்த, முன்னிலைப்படுத்த எழும் வேகமானது அதாவது ஆணவ மலமானது பிரகிருதிக்குரியதாகும். எனவே அதை மூலமலம் என்றும் சொல்கிறார்கள்.
Matchless!!!
ReplyDelete