72. சீயுதிரம்


ராகம்: வலசி தாளம்: 1½ + 1 + 1½
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
தீநரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
சேரிடுந ரம்பு தானிவைபொ திந்துநிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
யாகியவு டம்பு பேணிநிலை யென்றுமடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
தானுமிக வந்து மேவிடம யங்கு
மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்புபுரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
பார்முழுது மண்ட கோளமுந டுங்க
வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கையதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
வாரணஇ ரண்டு கோடொடிய வென்றநெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்துபொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர்பெருமாளே.

seey uthiram engum Ey puzhu nirambu mAya mala piNda nOyidu kurambai
thee narigaL kangu kAgam ivai thinpathu ozhiyAthE
theethu uLa kuNangaLE perugu thontha mAyaiyil vaLArntha
thOl thasai elumbu sEridum narambu thAn ivai pothinthu nilaikANA
Ayathu namankai pOga uyir antha nAzhigaiyil vinja Usidum idumpai
Agiya udambu pENi nilai enRu madavArpAl Asaiyai virumbiyE viraga singi
thAnumiga vanthu mEvida mayangum Azhthuyar vizhunthu mALumenai anbu purivAyE
mAyaivala kanjanAl vida veguNdu pArmuzhuthum aNda kOLamu nadunga
vAy piLaRi ninRu mEga nigar thankai athanAlE vAriyuRa aNdi veeRodu muzhangu
neerai nugarkinRa kObamodethirntha vAraNa iraNdu kOdodiya venRa nediyOnAm
vEyin isai koNdu kOnirai puranthu mEyalpuri sengaN mAlmaruga thunga
vEla kiravunja mAlvarai idinthu podiyAga vElaividu kantha
kAviri viLangu kArkalisai vantha sEvakan vaNanga
veerai nagar vanthu vAzhpazhani aNdar perumALE

Learn the Song



Raga Valaji (Janyam of 16th mela Chakravakam)

Arohanam: S G3 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P G3 S


Paraphrase

சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை ( seey uthiram engum Ey puzhu nirambu mAya mala piNda nOyidu kurambai ) : This body, with pus and blood everywhere, faces crawling with worms, and housing various diseases; ஏய் = பொருந்திய, நிறைந்த;

தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே (thee narigaL kangu kAgam ivai thinpathu ozhiyAthE) : Can it escape being devoured by fire, jackals, vultures and crows? கங்கு = கழுகு;

தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு நரம்பு தான் இவை பொதித்து (theethu uLa kuNangaLE perugu thontha mAyaiyil vaLArntha thOl thasai elumbu sEridum narambu thAn ivai pothinthu) : The attachment and affinity that promotes bad habits and the body with skin, muscles, bones and nerves nourished by the illusory maya தொந்த(ம்) = உறவு, சம்பந்தம்;

நிலை காணா ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி நிலை என்று ( nilaikANA Ayathu naman kai pOga uyir antha nAzhikaiyil vinja Usidum idumbai Agiya udambu pENi nilai enRu) : I consider such an unstable body, which gets taken away by Yama leaving the body to rot and die, as indestructible and nourish it; இடும்பையாகிய உடம்பு : the body filled with miseries; இடும்பை = துன்பம்;

மடவார் பால் ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் (madavAr pAl Asaiyai virumbiyE viraga singi thAnu miga vanthu mEvida mayangum ) : Lustfully, I obsess over women and feel giddy with frenzy caused by the venomous passion; மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து, காம விஷம் மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு; சிங்கி = விஷம்; ;

ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே (Azh thuyar vizhunthu mALum enai anbu purivAyE) : and finally fall into misery. Be loving to me.

The following lines refer to Lord Krishna's fighting against Kuvalayapida, a mad elephant sent by Kamsa, his uncle.

மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க வாய் பிளறி நின்று (mAyai vala kanjanAl vida veguNdu pAr muzhuthum aNdakOLamum nadunga vAy piLaRi ninRu ) : Instigated by Kamsa who was an expert in the art of Maya, the mad elephant (Kuvalayapeeda) charged angrily and trumpeted loudly that made the earth tremble

மேக நிகர் தன் கை அதனாலே வாரி உற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம் (mEga nigar than kai athanAlE vAri uRa aNdi veeRodu muzhangu neerai nugarkinRa kObamodu ethirntha vAraNa iraNdu kOdu odiya venRa nediyOnAm) : and with its trunk with the color of the cloud, it (elephant) swept everything in sight and trumpeted noisily, charging with rage as though it was going to drink all the water in a gulp; the tall Lord Krishna broke both the tusks of this elephant. மேகத்தைப் போன்ற கரிய துதிக்கையாலே அனைத்தையும் வாரிக்கொண்டும், நெருங்கி வந்தும், செருக்குடன் முழங்கியும்; நீரைப் பருகியும், கோபத்துடனும் எதிர்த்து வந்தாகிய, குவலயாபீடம் என்னும் யானையுடைய இரண்டு தந்தங்களையும் ஒடித்து வென்ற திருமாலும்;

வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக (vEyin isai koNdu kO nirai puranthu mEyal puri sengaN mAl maruga ) : You are the nephew of the red-eyed Lord Krishna who plays the bamboo flute and protects the herd of cows; வேய் = மூங்கில்; வேயின் இசை = புல்லாங்குழலிசை; கோ நிரை = பசுக்கூட்டம்;

துங்க வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக வேலை விடு கந்த (thunga vEla kiravunja mAl varai idinthu podiyAga vElai vidu kantha) : Oh Lord with the immaculate spear, you smashed the large mount Krouncha to pieces, துங்க = தூய;

காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க ( kAviri viLangu kAr kalisai vantha sEvakan vaNanga) : The mighty king of Kalisai, the prosperous and fertile town on the banks of the river KAvEri, worshipped You, காவிரியாற்றின் (கரையிலே) விளங்குவதும்; நீர் நிறைந்ததுமான கலிசை என்னும் தலத்தில் வாழ்கின்ற ‘கலிசைச் சேவகன்’ உன்னை வணங்கிய காரணத்தால்,

வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே (veerai nagar vanthu vAzh pazhani aNdar perumALE.) : You have come to reside at Veerainagar, and Your abode is Pazhani, Oh Great One! வீரை என்ற தலத்துக்கு வந்து எழுந்தருளிய பழநியாண்டவனே! தேவர்கள் பெருமாளே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே