Posts

கருணை சிறிதுமில் : ஜானகி ரமணனின் கருத்துரை

For an explanation of this song in English, click karunai sirithumil அருணையின் கருணை மழையே சரணம் . " கருணை சிறிதுமில்" என்று தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல். முன்னுரை : அருணையில் அன்றொரு நாள், பழைய அடியவரான அருணகிரியாரை முருகன் ஆட்கொண்டது உண்மை தான். ஆனால் பேரின்பமாம் முக்தி நிலை அடைய அவர் ஏற வேண்டிய உயரங்கள், தூண்ட வேண்டிய நல் உணர்வுகள், தாண்ட வேண்டிய தடைகள், விட வேண்டிய பற்றுக்கள், பட வேண்டிய சிரமங்கள் என்னென்ன என்பதை அவருக்கு உணர்த்தி விடுகிறான். தான் உணர்ந்ததை, இந்தப் பாடல் மூலம் உலகுக்கு உணர்த்துகிறார் அருணகிரிநாதர், இது நல்லதொரு ஆன்மீக வழிகாட்டல். சாரத்தை விட்டுச் சக்கைகளைச் சேகரிக்கும் சமய வாதிகளுக்குச் சாட்டை அடி கொடுக்கிறார். சக்தியின் சிறப்புக்கள் சொல்லிச் சக்தி உமை பாலனைப் பாடிப் பரவசம் அடைகிறார். பொருள் பொதிந்த பாடல் வரிகளை பிரித்துப் பார்த்துப் புரிந்து கொள்வோம்.

அழுதும் ஆ ஆ என - J.R. விரிவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune For an English version of the paraphrase of this song, click azhuthum avaavena சோணாசலத்தின் ஞானச்சுடரே சரணம். "அழுதும் ஆ ஆ எனத் தொழுதும் " எனத் தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். முன்னுரை மிகச் சிறந்த வேண்டுதல்களைச் செவ்வேளிடம் வைக்கும் அருணகிரிநாதரின் பக்குவ நிலையைப் இதில் பார்க்கிறோம். விதண்டா வாதம் செய்யும் மதவாதிகளால் என்றுமே புரிந்து கொள்ள முடியாத புனிதமான பக்தி நிலை கேட்கிறார். மாசு மருவற்ற தெளிந்த ஞானம் கேட்கிறார். கர்ம வினையால் திரும்பத் திரும்ப பிறவிச் சுழலில் சுற்றிச் சுற்றி வந்து களைப்பதோ, எனக் கதறுகிறார். சரவணப் பொய்கையில் தவழ்ந்து, அறுவர் அமுதம் உண்ட ஆறுமுகமே அனைத்திற்கும் மேற்பட்ட மெய்ப்பொருள் என்ற உன்னத உணர்வில் திளைக்கிறார்.

விராலிமலை முருகன்

Image
மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு 20 கிமீ முன்பாக அமைந்திருக்கிறது. தற்போது சிறு நகரமாக மாறிவிட்ட விராலி மலை முன்னர் வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். இந்த முருகன் மருத்துவ முருகனாம்! முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படும் இக்கோயில் மயில்களால் சூழப்பட்டு மிக ரம்மியமாகக் காட்சியளிக்கும். பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா? மூலவர் சண்முகநாதன். அம்மன் வள்ளி தேவசேனா இருவருமாவர். திருவண்ணாமலையைப் போல, இதுவும் ஏராளமான சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வாழ்ந்த/ வாழும் பூமி. விராலிமலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் அரும் பெரும் சித்தியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழங்கியதாகப் புராணம் கூறுகிறது.

சிவபெருமான் தோழர் சுந்தரரும் அருணகிரி நாதரும்

You can read here the story of Paravai Nachiyar in English " பரவைக்கு எத்தன ை" என்று தொடங்கும் பொதுப் பாடலில், தன் அடியார்களுக்காக எதையும் செய்யத் தயங்காத மாண்பு கொண்டவர் அந்த மகாதேவன் என்பதையும், சுந்தர மூர்த்தி நாயனாரின் நண்பனாகவே தன்னை ஆக்கிக் கொண்டவர், கந்தனின் தந்தை என்பதையும் பாடிப் பரவசம் ஆகிறார் அருணகிரியார். பரவைக் கெத்தனை விசை தூது பகரற்கு உற்றவர் மாண் " ஒரு பெரிய புராணத்தையே உள்ளடக்கிய வரிகள். உரிமையால் பக்தன் உத்தரவிட, கருணையால் அதைச் செய்து முடிக்கும் பரமன். பழைய சிவ அடிமை சுந்தரர் ப்ராரப்தம் முடித்து முக்தி பெற எடுத்த பிறவி. சிவபக்தைகள் இருவர், பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து, சுந்தரரைக் கை பிடிக்கக் காத்திருக்க, இறைவன் திருவருளால் இகபர சுகம் பெற, திருவாரூரில் பரவையையும், திருவொற்றியூரில் சங்கிலியையும் மணம் புரிந்து கொள்கிறார் வன் தொண்டர் சுந்தரர்.

The Amazing Arunachala Mountain At Thiruvannamalai

Image
Annamalaiyar Temple is located at the base of Annamalai hills in the town of Thiruvannamalai. The 2668-feet Annamalai mountain is considered an enormous Shiva Lingam. The mere thought of Annamalai mountain bestows salvation to the meditator. That is why many sages worship and circumambulate the mount reverentially. This mountain, with tremendous magnetic power, has existed ever since the earth came into existence. While the Indian subcontinent’s most famous mountain range formation, the Himalayas, is less than 50 million years old, scientific and geological research led by Professor Kent C. Condie, of New Mexico Institute of Mining and Technology, found that the Archaean rock formation of Arunachala belong to the Proterozoic age and is more than 2.5 Billion years old. In the Krita Yuga this was a fire mountain; in the Treta Yuga, a ruby mountain; in the dwapara yuga, a golden mountain; and in the kali yuga, a stone/granite mountain.

Devi's Penance In Kancheepuram

Image
The sthalapurana of Ekambareswarar Temple at Kancheepuram says that when Lord Siva was deeply immersed in the task of creating, protecting and destroying the Universe, His consort Parvati playfully closed his eyes. The momentary closure caused eons of darkness for the Gods. To prevent similar incidents from recurring, Parvati Devi expressed to Shiva that she should unite with Him in a single form and Shiva agreed. Shiva used the occasion as a divine ploy to set an example of righteousness in atoning for causing harm to others, even if done unknowingly. He asked Parvati to do penance at Himalayas, Benaras, Kanchipuram and finally at Thiruvannamalai where He would yield His left side and unite with Her.

The Legends of Kalahasthi

Image
Kalahasteeswara temple stands on the banks of River Swarnamukhi at Kalahasthi, also called Dakshina Kailasam and Dakshina Kashi. Krishnadeva Raya, emperor of the Vijayanagara Empire, built this 135-foot high temple in 1516 AD and its seven-storeyed-gopuram, following the successful Kalinga war in which he vanquished the Gajapati kings of Orissa. Of the five pancha bhoota sthalas representing the five elements, this temple represents the element Wind. This temple is known for Sarpadosha Nivaarana Pooja performed for propitiating the serpents Rahu and Ketu . According to ancient Tamil sources, SriKalahasti has been known as the ‘Kailas of the South’ and the small river Swarnamukhi on whose banks it sits, the ‘Ganges of the South'. The temple has a statue of the hunter Thinnan who offered his own kann (eyes) to this Shivalinga and became renowned as Bhakta Kannappa. In days of yore, a spider (sri), serpent (kala) and elephant (hasti) elephant worshipped Shiva with great devotion, ...