Posts

Showing posts from October, 2018

சில திருப்புகழ் பாட்டுக்கள் : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune Click anywhere on the panel to expand it and click once again to collapse. Clicking the red underlined words in the panel will take you to the English translation of the song. 11. அந்தகன் வரும் அருணகிரிநாதரைச் சுற்றிச் சுழன்று சுழித்து ஓடும் பக்தி வெள்ளம் தான் இந்தப் பாடல். அந்தக் கந்தவெள்ளம் எந்த அழுக்கையெல்லாம் அடித்துச் சென்று விடும் தெரியுமா எனக் கேட்டு, நெஞ்சத்தில் நம்பிக்கை தழைக்க வைக்கும் பாடல். மரண பயம் பயந்து ஓடிவிட, காம இச்சை கலங்கிக் கதறி விலகிவிட, படைப்பின் அடித்தளமாக அமைந்த சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் விடைபெற்றுக் கொண்டு விட, ஞானம் மட்டும் மிஞ்ச, ஞான பண்டிதன் விஞ்சி நிற்க, பக்தன் நான் விம்மி நிற்க, அந்த இன்பநிலை தருவாய் செந்தில் வேந்தே என வேண்டுகிறார் அருணகிரியார். அந்தகன் வருந்தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டரிவையர்க் கன்புருகு சங்கதத் தவிர முக்.....குணமாள விளக்கம் : கணத்துக்குக் கணம் "வந்துவிடுவானோ, வந்து விடுவானோ" என்று எந்தக் கூற்றுவனுக்குப் பயந்துசப்தநாடிகளும் ஒடுங்க அமர்ந்திருக்கி

வம்பறாச் சில கன்னமிடும் -- JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song vambaRa( வம்பறாச் சில ) in English, click the underlined hyperlink. முன்னுரை காஞ்சித் தலைவனே சரணம். "வம்பறாச் சில கன்னமிடும்" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். 'நகரேஷு காஞ்சி ' எனக் கொண்டாடப்படும் எழில் நகரம். ஆன்மீகச் சிகரம். பஞ்ச பூத ஸ்தலங்களில் பொறுமைக்கும், அருமைக்கும், பெருமைக்கும் எடுத்துக்காட்டான நிலமாகிய மண்ணின் ஸ்தலம். முக்தி வாசல் திறக்கும் ஏழு புனித ஸ்தலங்களில் ஒன்று. ஏகன் அவன் என உணர்த்த மிக உயர்ந்து நிற்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலய கோபுரம். கட்டிடக் கலையின் நுணுக்கங்கள் கொட்டிக் கிடக்கும் கைலாசநாதர் கோவில். வர மழை பொழியும் வரதராஜன் ஆலயம். ஞானத்தை ஒரு விழியாகவும், கருணையை மறு விழியாகவும் கொண்டு அன்னை காமாட்சி ஆட்சி செய்யும் ஸ்தலம். கணித வல்லுனரையும் பிரமிக்க வைக்கும் ஸ்ரீசக்ர அமைப்பு. சிவசக்தி ஐக்கியமாய் அது அகிலம் காக்கும் சிறப்பு. அன்னை தானே தவமியற்றி வழிகாட்டும் தனித்துவம் கொண்ட தலம். கந்தக் கோட்ட சுந்தரக் கந்தன் அருணகிரியாரைச் சொக்க வைத்துக் காத்தம் போல் இழுத்த தலம். அவர் எண்ணத

பரிமள மிகவுள — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song parimaLa migauLa ( பரிமள மிகவுள ) in English, click the underlined hyperlink. முன்னுரை ஆனைக்காவின் கவினே சரணம். "பரிமள மிகவுள" என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். மனிதனின் ஆசைகள் – குறிப்பாகப் பெண்ணாசை – அனைத்தையும் தராசின் ஒரு தட்டில் அடுக்கி வைத்தாலும், ஐயன் முருகன் அருள் மறு தட்டிலே மலர்ந்து விட்டால், அந்தத் தட்டு அவன் கனத்த கருணையால் அழகாய்க் கீழே இறங்க, பக்தனுக்காக அவன் இரங்க, மனிதன் கரையேறும் அதிசயம் நடந்து விடுகிறது என்கிறார் அருணகிரியார். பெண்ணாசை என்னும் பெருநெருப்பு மனித வாழ்வை முழுவதுமாய் எரித்து முடித்து விடுகிறது. அந்தச் சாம்பலிலிருந்து வாழ்வைத் துளிர்த்துத் தழைக்க வைக்கும் அற்புதத்தை அருணகிரியாரின் வாழ்க்கையில் வள்ளல் நடத்திக் காட்டினான். துராசை தன்னைக் கொண்டு வந்து நிறுத்திய அவலநிலையைப் படம் பிடித்துக் காட்டினால் தான் கந்தன் கருணையின் ஆழம் புரியும் என்பதை உணர்ந்து, தன்னையே சவுக்கடி போன்ற சொற்களால் தாக்கிக் கொள்கிறார் அருணகிரியார். அது மனித மனங்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என

தலைவலையத்து — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thalaivalaiyaththu ( தலைவலையத்து ) in English, click the underlined hyperlink. முன்னுரை குமரக் கோட்டத்தின் கொஞ்சும் எழிலே சரணம். "தலைவலையத்துத் தரம் பெறும்" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். தலைவன் முருகன் அருணகிரியாரைத் தடுத்தாட்கொண்ட பொழுது, அவர் நொந்த உடலை, நெஞ்சத்தைத் தேற்றி விட்டான். பட்ட காயங்கள் ஆற்றி விட்டான். பரம பக்தனாக மாற்றி விட்டான். ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காடிய அருணகிரியார், அரிய வேண்டுதல்களை அவன் முன் வைக்கின்றார். அவன் திருப்புகழைப் பாடச் சிறந்த கவித்துவம் கேட்கின்றார். தத்துவ ஞானம் வேண்டுகிறார். தர்மநெறி நடக்கும் மாண்பும், அவர் சத்புருஷன் என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஏற்றமான நிலையும் வேண்டுகிறார். அவனது அன்னையாம் அம்பிகையின் மகிமைகளையும் மகிழ்ந்து பாடுகிறார். பக்தியும் , தமிழும் பொங்கி வரும் இன்பக் கடலோ இந்தப் பாடல்!