Posts

Showing posts from April, 2019

கனி தரும் கொக்கு: J R கட்டுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song kanitharum kokku ( கனி தரும் கொக்கு ) in English, click the underlined hyperlink. முன்னுரை குமரக் கோட்டத்தின் கொஞ்சும் எழிலே சரணம். " கனிதரும் கொக்கு" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். மனிதகுலம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது; எப்படி வாழவேண்டும் என்று வரைமுறை கற்றுத்தரும் பாடல். வழக்கம்போல் தன் பிழைகளையே பட்டியலிட்டுப் பாடம் கற்றுக் கொடுக்கும் அருணகிரியாரின் தனித்துவம். முருகனின் புனிதத் திருத்தலங்களாம், திருச்செந்தூர், திருவேரகம். திருப்பழனி, திருச்செங்கோடு, கதிர்காமம் என்ற நாவுக்கினிய நாமங்களை எல்லாம் கனவில் கூடச் சொல்லி அறியாத வீணான தன் வாழ்நாளைச் சொல்கிறார். அம்பிகையின் பவித்திரத்தை, கங்கையின் புனிதத்தை அறியாமல் வாழ்ந்த அவலநிலை சொல்கிறார். அந்தப் பெரும் பிழைகளை மன்னித்த முருகையனின் பெருங்கருணை சொல்கிறார். காஞ்சியின் தலைவியான அம்பிகையின் மகிமைகளை நினைந்து நினைந்து உருகுகிறார்.

கறை இலங்கும் : J R கட்டுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song karai ilangum ( கறை இலங்கும் ) in English, click the underlined hyperlink. முன்னுரை கறை இலங்கும் என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தப் பாடல். ஒரு புறம் ஒளிமயமாய் நிற்கும் முருகன். மறுபுறம், இருள் மண்டிய, தீய குணங்கள் நிரம்பிய மனதுடன் இருக்கும் மனித குலம். தன்னை அந்த மனிதர்களில் ஒருவராகவே நிறுத்திக் கொண்டு. மனிதர்களின் சார்பில் முருகன் என்னும் ஒளிவெள்ளத்தில் திளைக்க விரும்பும் அடங்காத் தாகத்தை இந்தப் பாடலில் வெளிப்படுத்துகிறார் அருணகிரியார். இந்த ஆன்மிக தாகம் தான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் என உறுதியாய்ச் சொல்கிறார். தமஸ்,ரஜஸ் என்பவற்றை விடுத்து, சாத்வீக குணத்தின் பக்கம் சென்று விடுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார்.