Posts

Showing posts from January, 2012

நால்வர் வரலாறு : 1. திருஞானசம்பந்தர்

By Mrs Sripriya Kannan, Pune சமயக்குரவர் என்பவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர்களை நால்வர் என்று சைவ சமயத்தினர் அழைக்கின்றனர். இவர்களில் முதலானவர் திருஞானசம்பந்தர். காழிப்பிள்ளை என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சம்பந்தர் சிவபாத இருதயருக்கும் பகவதியம்மாளுக்கும் மகனாக ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். சம்பந்தரது மூன்றாவது வயதில் தோணியப்பர் கோயிலுக்கு கூட்டிச் சென்ற அவரது தந்தையார் ஆலயக் குளக்கரையில் அமர வைத்துவிட்டு நீராடச் சென்றார்.

கந்த புராணம் : பகுதி 2 A

கந்த புராணம் பகுதி 1 A கந்த புராணம் பகுதி 1 B தட்சனின் யாகத்தில் சிவன் பங்கேற்காத போது, அவரது அனுமதியின்றி யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை சிவனின் காவலரான நந்திதேவர் கண்டித்திருப்பதுடன் அவர்களின் சக்தியையும் இழக்குமாறு தட்சனின் மகளும், சிவனின் பத்தினியுமான தாட்சாயணி சபித்திருந்தது அசுர குரு சுக்கிராச்சாரியர் கவனத்தை ஈர்த்தது. தேவர்கள் கூடிய சீக்கிரம் தங்கள் நலமெலாம் தொலையப்பெற்று அசுரரால் வருந்தப்பெற்று அடிமைகளாகும் வண்ணம் நந்தியம்பெருமான் சொன்ன சாபத்தைப் பற்றி எண்ணினார். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அசுரர்களின் சக்தியையும் ஆதிக்கத்தையும் பெருக்க திட்டமிட்டார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உள்ள பகை யுகம் யுகமாக தொடர்ந்து வருவது. மூன்று உலகங்களையும் தாங்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் விரும்பினார்கள். தேவர்கள் குல குரு பிரகஸ்பதி. பாற்கடலை கடைந்து அமுதத்தை அருந்திய தேவர்கள் அமரர்களாக திகழ்வதை கண்டு அசுரர்களுக்கு தலைவனாக விளங்கிய சுக்கிரன் சிவபெருமானிடம் வேண்டி இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் "மிருத சஞ்சீவினி" என்ற மந்திரத்தை உபத

கந்த புராணம் : பகுதி 1 B

தக்ஷன் நடத்திய யாகமும் தாக்ஷாயணி உயிர் நீத்தலும் கோபத்தில் மதி இழந்த தக்ஷன் கயிலைவாசனை மட்டம் தட்ட எண்ணி, வேண்டுமென்றே ஒரு பெரிய வேள்வியை செய்யத் ஏற்பாடு செய்து அந்த யாகத்தில் ஈசனுக்கு அவிர்ப்பாகம் கிடையாதென்று முடிவு செய்தான். தேவர்கள் அனைவருக்கும், தன் பெண்களையும், மருமகன்களையும் யாகத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு சொல்லி அனுப்பினான். ஆனால் சிவனையும், ஸதி தேவியையும் மட்டும் அழைக்கவில்லை. தன்னை மதியாது தட்சன் நடத்தும் யாகத்திற்கு ஈசன் செல்லவில்லை. ஆனால், தாட்சாயணிக்குத் தன் தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்று தன்னையும் தன் பதியையும் மதியாது யாகம் நடத்துவது முறையல்ல என்று தன் தந்தையிடம் நியாயம் கேட்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. ஈசன் மறுத்தும் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயணி. யாகசாலையில் தேவியை யாரும் மகிழ்ச்சியோடு வரவேற்கவில்லை. கணவன் தெரிவித்ததுபோல் அவமானம் ஏற்பட்டதைக் கண்டு சீற்றமடைந்த தேவி, கயிலயங்கிரி திரும்ப விரும்பாமல் அங்கேயே யாக குண்டத்தில் குதித்து தமது தேகத்தை விடுத்தாள். சிவன் ரௌத்ரம் : வீரபத்ரர், மகாகாளி தோன்றல் உடலில் இருந்து உயிர் போனாலும் அக்னி அந்த புனித உடலை

கந்த புராணம் : பகுதி 1 A

விநாயகர் துதி வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்து வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை துவச வாரணத்தானை துணைநயந்தானை வயலருணை வாரணத்தானை திறை கொண்ட யானையை வாழ்த்துவனே வாரணத்தானை ... ஐராவதம் என்ற யானைக்கு தலைவனாகிய இந்திரனையும், அயனை ... பிரம்மனையும், விண்ணோரை ... ஏனைய தேவர்களையும், மலர்க் கரத்து வாரணத்தானை ... தாமரை போன்ற கையில் பாஞ்ச சன்யம் (வாரணம் = சங்கு) என்கிற சங்கை ஏந்தி இருக்கும் திருமாலையும், மகத்து ... தட்ச யாகத்தில், வென்றோன் ... வீரபத்திரன் சொருபத்தில் வந்து ஜெயித்த சிவபெருமானின், மைந்தனை ... குமாரனும், துவச வாரணத்தானை ... கோழிக்கொடியை உடைய குமாரக் கடவுளை, துணை நயந்தானை ... சகோதரனாக பெற்றிருப்பவனும், வயல் அருணை ... வயல்கள் சூழ்ந்த அருணாசலத்தில், வாரணத்தானை ... யானைமுகத்தை உடைய கஜமுகாசுரனை, திறை கொண்ட யானையை ... (யானைகளை) கப்பம் பெற்ற, யானை முகம் கொண்டவனும் ஆகிய கணபதியை, வாழ்த்துவனே. ... வணங்குகிறேன். ஒரு காலத்தில் முகிலன் எனும் அரசனது கொடுமைகளால் துன்பப்பட்ட மக்கள், திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயர் எனும் அருளாளரிடம் முறையிட, அவர் அருணாசலேஸ்வரர

தமிழில் கந்த புராணம்

புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக, விரிவாக, விளக்கமாக எடுத்துக்கூறுவதே. வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும். அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கதைகளாக எழுதினார்கள். புராணங்கள் கதை வடிவாக, வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து, யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டன. புரா என்றால் முற்காலத்தில் நடந்தது என பொருள். புராணங்களை வேதத்தின் கண்ணாடி என்று கூறலாம். அந்த காலத்தில் பதினெண் புராணங்களும் வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் இருந்தன. ஞானாசிரியர் குரு தட்சணாமூர்த்திக்கு சனகர், சனாதனர், சனத் குமாரர், சனந்தனர் என நான்கு சிஷ்யர்கள் இருந்தனர் என்றும், மௌனத்தாலேயே குரு அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இப்படி வந்த குரு பரம்பரையில், சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத அங்கமான நந்தி பெருமான் மறைபொருளாய் இருந்த வேதங்களையும் புராணங்களையும் முறையாக பெற்றார். நந்திதேவேரிடமிருந்து சனத் குமாரரும், அவரிடமிருந்து மகரிஷி வியாசரும் பெற்று, அவற்றை உரிய ம