Posts

Showing posts from May, 2022

உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து உணர்வு நிலைகள்

காரிய அவத்தைகளும் காரண அவத்தைகளும் அவத்தை / அவஸ்தை என்பது உணர்வு நிலை. அநாதியாகவே ஆணவ மலத்துடன் கூடியிருத்தலால் தானே சுயமாக அறிய முடியாத ஆன்மா உடலில் கருவி கரணங்களுடன் கூடி ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறிகின்றது; செயலாற்றுகின்றது. உயிர் அடையும் ஐந்து நிலை வேறுபாடுகள் காரிய அவத்தைகள் எனப்படும்.

மும்மலங்கள்

மும்மலங்கள் என்றால் என்ன? சைவ சித்தாந்தத்தின்படி இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் அவற்றின் அறிவை அறிவற்ற சடப்பொருள்களான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்.

சைவ சித்தாந்தம் பகுதி 3 : பதியின் இயல்பு

Image
இறைவனின் இயல்பு என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும், நிலையானதாகவும், எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருளால் இயக்கிக் கொண்டும் இருப்பவர் இறைவன். அந்த ஒப்பற்ற உயர்ந்த இறைவனை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவாலும் கருவிகளாலும் அளக்கவோ கணக்கிடவோ முடியாது. அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது. சிருஷ்டி முழுவதிலும் ஊடுருவி நின்றும், அதே நேரம் அனைத்துக்கும் அப்பால் காலமற்று நிற்கும் பிரக்ஞையாக செயல் படுகிறது. சைவ சித்தாந்தம் எவ்வித மாற்றமும் அடையாமல், என்றும் ஒரு தன்மை உடையதாய் நிற்கும் பொருளான சத்தாய் நிற்பதையே இறைவனின் உண்மை இயல்பு என்று கூறுகிறது. அறிவுடைப் பொருள் 'சித்து' என்றும், அறிவில்லா பொருள் 'அசித்து' என்றும் சொல்லப் பெறும். உலகம் தோன்றுவதற்குக் காரணம் மாறாத இருப்புடன், தோற்றமும் மறைவும் அற்ற அனந்தமாக, ஆகாசம் போல் சர்வ வியாபகமாக, எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஸத்/சத்து தான்.

சைவ சித்தாந்தம் பகுதி 2 : முப்பொருள் இயல்பு

அனாதி முப்பொருள் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அழியும். அழியக் கூடிய அனைத்தும் பொய். அழியாதது பரம்பொருள் ஒன்றே. அதுவே மெய். அது தோன்றுதல், அழிதல், வளர்தல், தேய்தல் முதலிய மாற்றங்களுக்கு உட்படாது. சைவ சித்தாந்தம் நிலையில்லா உலகில் அனாதியான அடிப்படை பொருளாக, அழியாப் முப்பொருள்களாக பதி, பசு, பாசம் விளங்குகின்றன என்று கருதுகிறது. இந்த முப்பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் காரியம் என்று இல்லாமல் மூன்றும் தனித் தனிப் பொருள்களே என்று சைவ சித்தாந்தம் உரைக்கிறது. மாறுபட்ட மூன்று தன்மைகளால் வேறுவேறாகத் தோன்றும் முப்பொருள்களும் தொடக்கம் இல்லாதவைை; தோன்றாமல், அழியாமல், எப்போதும் இருக்கின்றன. இதற்கு மூலக்ககூறாக இருப்பது சற்காரிய வாதம் .

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் என்பது சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான கூடல்மாநகராம் மதுரையில் நிகழ்த்திய 64 அற்புத லீலைகளைப் பற்றிக் கூறும் நூலாகும். இறைவனார் உலக உயிரிகளிடத்து அன்பு கொண்டு அவர்களுக்கு அருள் செய்த கருணையை இந்நூலில் வரும் கதைகள் அழகாக விவரிக்கின்றன. இது வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் உள்ள ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலிலிருந்து பரஞ்சோதி முனிவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஒன்று. திருவிளையாடல் புராணம் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய் காண்டம் என்று மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கி.பி.16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.

சைவ சித்தாந்தம் : அறிமுகம் (பகுதி 1)

சைவ சித்தாந்தம் என்றால் என்ன? சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்றது சைவ சமயம். தன்னுள் இருக்கும் சிவத்தை அறிந்து மலநீக்கம் பெற்று சிவனடியை சேரும் வழி காட்டுவதே சைவ சித்தாந்ததின் நோக்கம். சித்தாந்தம் என்பது ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவு. சைவ சித்தாந்தம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலரால் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது. சைவ சித்தாந்தம் வேதங்களையும், ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் உள்ளனர். சமயக்குரவராகிய நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். சந்தான குரவர்கள் மடங்கள் ஸ்தாபித்து வழிமுறை பாடங்கள் வகுத்தார்கள். அந்த நால்வரில் முதலாமவர் மெய்கண்டார்; அவரின் சீடர் அருள் நந்தி சிவம்; அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். கடைசியாக உமாபதி சிவம். சைவ சமயத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். மெய்கண்டார் கிபி 13 ஆம் நூற்றா