206. வாட்பட


ராகம் : சாருகேசி தாளம்: கண்டசாபு (2½)
வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
மாப்புடைத் தாளரசர்பெருவாழ்வும்
மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
வாழ்க்கைவிட் டேறுமடியவர்போலக்
கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
கோத்தமெய்க் கோலமுடன்வெகுரூபக்
கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
கூத்தினிப் பூரையிடஅமையாதோ

205. மனத்திரை


ராகம் : முகாரி தாளம்: ஆதி
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடைதடுமாறி
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதினநகையாட
எனைக்க டந்திடு பாசமு மேகொடு
சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபயமுறவேதான்
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
இணைப்ப தந்தர வேமயில் மீதினில்வரவேணும்

204. இறவாமற்


ராகம் : காபி     தாளம்: கண்டசாபு (2½)
இறவாமற் பிறவாமல் எனையாள்சற்குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே

203. கருகி அறிவு


ராகம் : பூர்விகல்யாணிதாளம்: அங்கதாளம் 2½ + 2½ + 2 + 1½ + 1(9½)
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினிலிடைபோடாக்
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர்வழியேபோய்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன்மலராலே
மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள்தருவாயே

202. மாலாசை கோப


ராகம் : மாண்டு        தாளம்: ஆதி
மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவுமினிநீயே
நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனுமிலைவீணே
நாள்போய் விடாம லாறாறு மீதில்
ஞானோப தேசமருள்வாயே

201. நிராமய


ராகம் : தேஷ்தாளம்: ஆதி கண்ட நடை (20)
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப் ப்ரபையாகி
நிராசசி வராஜத வராகர்கள் பராவிய
நிராயுத புராரியச்சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் றடைவேனோ

200. தூதாளரோடு

ராகம் : சஹானா தாளம்: 2½ + 1½ + 1½ + 2
தூதாள ரோடு காலன் வெருவிட
வேதாமு ராரி யோட அடுபடை
சோராவ லாரி சேனை பொடிபடமறைவேள்விச்
சோமாசி மார்சி வாய நமவென
மாமாய வீர கோர முடனிகல்
சூர்மாள வேலை யேவும் வயலியிலிளையோனே
கூதாள நீப நாக மலர்மிசை
சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகரமடர்சோலை
கூராரல் தேரு நாரை மருவிய
கானாறு பாயு மேரி வயல்பயில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறைபெருமாளே.

199. சீரான கோல

ராகம் : கீரவாணி தாளம்: 2½ + 1½ +1½ + 2

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுகமலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமளஇருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிடமுறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவதுபெறவேணும்

198. கொடாதவனையே புகழ்ந்து

ராகம் : கரஹரப்ரியா தாளம்: சதுஸ்ரரூபகம் (6)
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
குலாவியவ மேதி ரிந்து புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று னருள்பேணேன்
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்துமடியாமுன்

197. கரிபுராரி

ராகம் : தோடி தாளம்: அங்கதாளம் 1½ + 1½ + 2½ (5½)
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகிசிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானிபசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூதஅருளாயோ

196. ஐந்து பூதமும்

ராகம்: பைரவிதாளம்: மிஸ்ரசாபு
1½ + 2 (3½)
ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும்வெகுரூப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடுவெயில்காலும்
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவதுசிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியதுபெறுவேனோ

195. இலாபமில்


ராகம் : மனோலயம் தாளம்: ஆதி கண்ட நடை (20)
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபகலடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷனெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரசகலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெறநினைவாயே

194. சரவண ஜாதா


ராகம் : ஆனந்தபைரவிதாளம்: அங்கதாளம் 2 + 2 + 1½ + 1 (6½)
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநமஅபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநமஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநமஉமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

193 அல்லில் நேர்


ராகம் : அடாணா    தாளம்: அங்க தாளம் 1½ + 2 + 3 (6½)
அல்லில் நேருமினதுதானும்
அல்ல தாகியஉடல்மாயை
கல்லி னேரஅ வழிதோறுங்
கையு நானுமுலையலாமோ
சொல்லி நேர்படுமுதுசூரர்
தொய்ய வூர்கெடவிடும்வேலா
வல்லி மாரிருபுறமாக
வள்ளி யூருறைபெருமாளே.

192. சிரமங்க மங்கை


ராகம் : ராமப்பிரியா தாளம்: 2½ + 2½
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந்திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலிண்கண் வெந்துசிந்திடஆவி
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந்தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந்தருள்வாயே

191. குடிவாழ்க்கை


ராகம் : அமிர்தவர்ஷிணிதாளம்: ஆதி
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
குருவார்த்தை தன்னையுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல் கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மையுணர்வேனோ

190. ககனமும் அநிலமும்


ராகம் : ஆனந்தபைரவிதாளம்: ஆதி 2 களை
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கிருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பைசுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்குமறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்கஅருள்வாயே

189. ஐயுமுறு நோயும்ராகம் : மோகனம்தாளம்: ஆதி
ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுமில் வாழ்வைக்கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
நல்லஇரு தாளிற்புணர்வாயே

188. அல்லி விழியாலும்


ராகம் : தர்பாரி கானடாதாளம்: ஆதி
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக் கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத்தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச்சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற்கழல்தாராய்

Sivam in Thiruppugazh–Part 1

What is the goal of Bhakti? The ultimate goal of bhakti is to help the individual soul to merge itself in the Supreme Soul or Paramatman tha...

Popular Posts