வேல் வகுப்பு

ராகம் : மோகனம் தாளம்: ஆதி திச்ர நடை (12)
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமிவிழிக்குநிக ராகும்
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளைதெறிக்கவர மாகும்
பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையையிடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்புசிக்கவருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்இடுக்கண்வினை சாடும்
சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்ஒளிப்பிரபை வீசும்
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்எனக்கொர்துணை யாகும்
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழுமறத்தைநிலை காணும்
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறைகழற்குநிக ராகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனைவிதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவுபகற்றுணைய தாகும்
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்விருப்பமொடு சூடும்
திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரநிறைத்துவிளை யாடும்
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவறவிசைத்ததிர வோடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழிவிழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனேன துளத்திலுறை கருத்தன்மயில்நடத்துகுகன் வேலே.

Learn The Song

Play Music - Audio Hosting - Vel Vaguppu

Paraphrase

Lord Murugan's lance or 'vel' :

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை கறுத்த குழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்( paruththa mulai siRuththa idai veLuththa nagai kaRuththa kuzhal sivaththa idhazh maRach chiRumi vizhikku nigaraagum): is like the eyes of the brave hunter lass Valli who has heavy bosoms, slender waist, gleaming white teeth, black tresses, and red lips.

பனைக்கை முகபடக் கரட மதத் தவள கசக்கடவுள் பதத்திடு நிகளத்து முளை தெறிக்க அரமாகும்(panaik kai muga padak karada madhath dhavaLa gajak kadavuL padhaththidu nigaLaththu muLai theRikka aramaagum): is the saw that cuts through the locks on the chain that Surapadman put on the ankles of Indra whose vehicle is the white Airavata elephant with a trunk that is suspended like a palm tree, with its forehead caparisoned with decorative clothes and with cheeks down which flow the masth water; கச(ஜ)(gaja): elephant; here, Airavata; கச(ஜ) கடவுள்(gaja kadavuL): god of Airavata, i.e., Indra; பனைக்கை (panaikkai): arm like the palm tree; metaphor for trunk of the elephant; நிகளம்( nigaLam ): fetters; தவள(dhavaLa): white;

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்துவழி காணும்(pazhuththamudhu thamizhp palagai irukkum oru kavip pulavan isaik kurugi varaik guhaiyai idiththu vazhi kaaNum): pounded the Tirupparangiri mountain and rescued Nakkeeran and other poets from the cave (where they were imprisoned by a ghost called Karkimukhi) after being touched by the musical renderings of the peerless Nakkeran, the head of the ancient Tamil Sangam board renowned for its knowledge;

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்க அருள் நேரும்(pasith alagai musiththu azhudhu muRaip padudhal ozhithavuNar urath udhira niNath thasaigaL pusikka aruL nErum): mercifully stops the hungry ghosts from crying aloud and complaining about lack of food by giving them the blood-soaked fatty flesh of the asuras; அலகை(alagai): ghosts, demons;

சுரர்க்கும் முநிவரர்க்கும் மகபதிக்கும் விதி தனக்கும் அரி தனக்கு நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்(surarkku muni vararkku maga pathikkum vidhi thanakkum ari thanakkum narar thamakkum uRum idukkaN vinai saadum): destroys the evils of karma that cause grief to celestials, sages, Indra, Brahma, Vishnu and the humans; மகபதி(magapathi): Indra; விதி(vidhi): Brahma; இடுக்கண்(idukkaN): trouble; obstacle;

சுடர்பருதி ஒளிப்ப நிலவு ஒழுக்கு மதி ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப்பிரபை வீசும்(sudarp paridhi oLippa nila ozhukku madhi oLippa alai adakku thazhal oLippa oLir oLip pirabai veesum): disseminates the resplendence of Knowledge that makes the radiant sun hide itself, the cool moon with its cooling rays hide itself and the vadavamukhagni that checks the seas from destroying the world hide itself; பருதி(paruthi): sun; தழல்(thazhal): fire;

துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்க இடர் நினைக்கினவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கோர் துணையாகும்(thudhikkum adiyavarkku oruvar kedukka idar ninaikkin avar kulaththai mudhal aRak kaLaiyum enakkor thuNai aagum): is the guardian who would destroy the entire clan of those who think of harming those who worship (the vel);

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்தெறிய உருக்கி எழும் அறத்தை நிலை காணும்(solaRkariya thiruppugazhai uraithavarai aduththa pagai aRuth eRiya uRukki ezhum aRaththai nilai kaaNum): establishes dharma by ferociously uprooting those hostile to people who chant/recite the ineffably beautiful tiruppugazh songs;

தருக்கி நமன் முருக்கவரின் இருக்குமதி தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகராகும்(tharukki naman murukka varin erukku madhi dhariththa mudi padaiththa viRal padaiththa iRai kazhaRku nigar aagum): is as praiseworthy as the auspicious feet of the victorious Lord Shiva who wears arka (erukkam) flower and the crescent moon on His tresses and who offers sanctuary to the devotees when threatened by the arrogant Yama; விறல் (viRal): victory, bravery; தருக்கு(tharukku): arrogance;

தலத்தில் உள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளைவாகும்(thalaththil uLa kaNath thogudhi kaLippin uNa azhaippadhena malark kamala karaththin munai vidhirkka vaLaivaagum): being in the Lord's lotus hands, makes an inviting gesture whenever the Lord moves His finger tips to invite the people under His patronage to partake food;

தனித்து வழி நடக்கும் எனது இடத்தும் ஒரு வலத்தும் இரு புறத்தும் அருகு அடுத்து இரவு பகல் துணையதாகும் (thaniththu vazhi nadakkum enadhu idaththum oru valaththum iru puRaththum arugaduth iravu pagal tuNaiya dhaagum): is my supporting companion who accompanies me, when I walk alone, on my left and on my right and on my front and back, standing close to me, during day and night.

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பெருத்த குடர் சிவத்ததொடை எனச் சிகையில் விருப்பமொடு சூடும் (chalaththu varum arakkar udal kozhuththu vaLar peruththa kudar sivaththa thodai enach chigaiyil viruppa modu soodum): wears with delight on its crown, a red garland of the fatty intestines of the fatty asuras who charge angrily (in the battle field); சலம் (chalam): anger;

திரைக் கடலை உடைத்து நிறை புனர் கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்து உதிர நிறைத்து விளையாடும் (thiraik kadalai udaiththu niRai punaR kadidhu kudiththu udaiyum udaip padaiya adaith udhira niRaiththu viLaiyaadum): tear the wavy sea, close the breach everywhere so that water is dammed and drink it swiftly and again fill it with the blood from the asuras and play in it;

திசைக் கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை முளைத்ததென முகட்டினிடை பறக்க அற விசைத்ததிர ஓடும்(dhisaik giriyai mudhaR kulisan aRuththa siRai muLaiththa dhena mugattin idai paRakka aRa visaith adhira Odum): flies with infinite swiftness across the the crest of the cosmic sphere making the universe quiver and appearing as if all the mountains in the eight directions had regenerated their wings that were cut once by Indra; குலிசன்(kulisan): Indra; சிறை/சிறகு(siRai/siRagu): wings; விசை(visai): speed;

Once upon a time, all the mountains had wings and would fly haphazardly. Indra cut their wings with his vajrayudha. Thereafter the mountains fixed themselves to the ground. When the Lord's lance flashed across at incredible speed, the mountains appeared to have regained the wings and started flying once again!

சினத்தவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு குறைத் தலைகள் சிரித்தெயிறு கடித்து விழி விழித்தலற மோதும்(sinath avuNar edhirththa raNa kaLaththil vegu kuRaith thalaigaL sirith eyiru kadiththu vizhi vizhith alaRa mOdhum): smash and behead the asuras in the battle field, making the severed heads laugh ironically, grinding their teeth, glaring with their eyes and scream; எயிறு(eyiRu): teeth;

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உளத்திலுறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே(thiruththaNiyil udhith aruLum oruththan malai viruththan enadh uLaththil uRai karuththan mayil nadaththu guhan vElE): All these praiseworthy feats are those of the 'vel' in the hands of the One who rises (like the Sun of Knowledge) at TiruththaNi and is the Old Man of the Hill, who resides in my heart and whose vehicle is the peacock.

1 comment:

Sivam in Thiruppugazh–Part 1

What is the goal of Bhakti? The ultimate goal of bhakti is to help the individual soul to merge itself in the Supreme Soul or Paramatman tha...

Popular Posts