166. தொல்லை முதல்
Learn The Song
Raga Brindavana Saranga (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 M1 P N3 S Avarohanam: S N2 P M1 R2 G2 Sதேவகி அய்யர் உரை
Paraphrase
In the first half of the poem, Saint Arunagirinathar describes, using the numbers 1-6, the all-pervading, universal and primordial substance that is beyond intellectual comprehension, and beseeches that he be granted the experience of submerging in the ocean of bliss of forms into which the formless lord manifests Himself.
தொல்லை முதல் தான் ஒன்று (thollai mudhal thAn ondru) : The ancient, primordial and composite entity; பழமையானதும் முதலானதும் சேர்ந்து ஒன்றாக விளங்குவதாய், தொல்லை (thollai) : ancient;
மெல்லி இரு பேதங்கள் (melli iru bEdhangaL) : that expresses itself gently as the dual principle of Shiva and Shakthi, சக்தி, சிவன் என்ற மென்மையான இரண்டு பேதங்களாக விளங்குவதாய்,
சொல்லு(ம்) குணம் மூ அந்தம் என ஆகி (solluguNa mUvandham enavAgi) : representing Trinity which is the culmination of the three gunAs (characteristics) namely, sathwam (tranquility), rajo (aggressiveness) and thamas (dullness); சத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும் முக்குணங்களின் சொரூபமாய் விளங்கும் அயன், அரி, அரன் என்பவரின் மூலமாய் விளங்கி;
The three gunas - Sattwa, Tamas and Rajas - are the spiritual forces that are the cause of creation. Sattwa (Shiva) also represents imagination, inspiration, meditation, and the unmanifested idea. Tamas (Hari) is that which is intended to be created or manifested. Additionally, Tamas can represent a resistance, an obstacle, inertia, or laziness. Furthermore, Tamas can also be the doubts and fears which stagnate us and prevent us from taking the Actions necessary to realize our dreams and ambitions. Rajas (Brahma) is the unseen Spiritual Energy which overcomes resistance, obstacles and stagnation, so that Creative Thought can manifest itself.
துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து (thuyyachathur vEdhangaL veyyapula nOraindhu) : It is the four chaste vEdAs; It is the five terrible senses (namely, smell, sight, taste, hearing and sensation); துய்ய/தூய (thooya) : pure; வெய்ய (veyya) : cruel;
தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும் (thoyyuporuL ARangam enamEvum) : It is the six divisions (ShadAnga) of the VEdAs with meanings that could wear one out; தொய்யும் (thoyyum) : tiresome; சோர்வடையச் செய்யும் பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு வேதாங்கங்களாகி — வேதபுருஷனுடைய ஆறு அங்கங்களான நாசி வாய், கால், காது, கண், கை — இந்த அங்கங்களாக திகழ்வன சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜ்யோதிஷம், மற்றும் கல்பம். இவை எழுத்துக்களின் உச்சாரணம், மாத்திரை, அவற்றின் உற்பத்தி, மற்றும் சந்தஸ் — இன்ன இன்ன கவிதை வரிகளுக்கு இத்தனை எழுத்து, இத்தனை பதம், இத்தனை மாத்திரை என்று வரையறுப்பது. இவற்றின் மீது பாண்டித்யம் இருந்தால் மட்டும் இறைவனை காண முடியாது. இவை மனதுக்கு சோர்வை மட்டுமே அளிக்கும்.
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் (palla pala nAdhangaL alga pasu pAsangaL) : It resides in various musical notes; It resides in the pasu (soul) and pAsam (bondage) so as to reduce the intensity of the bondage on the souls; பலப்பல ஒலிகளில் தங்குவதாய், உயிர் தளைகளின் குற்றம் நீங்க அவற்றுள் தங்குவதாய், அல்க = தங்க; பசு பாசங்களின் குற்றமும் குறையும் பொருட்டு அவற்றில் இறைவன் நீக்கமின்றி நிற்கின்றான்.
பல்கு(ம்) தமிழ் தான் ஒன்றி இசையாகி (palguthamizh thAnondri isaiyAgi ) : It manifests in all aspects of Tamil language that is constantly growing; It takes the form of music; வெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி மனதை மயக்கும் இசையாக நின்று
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருப ஆனந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே (palluyirumAy antha milla sorubAnandha bauvam uRavE nindradhu aruLvAyE ) : It is seen in all lives - and in order that I dip into the ocean of endless blissful vision, will You kindly grant It to me? அத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிராய், முடிவு அற்றவதாய் உள்ள ஆனந்த உருவக் கடலை அடையும்படிச் செய்ய வல்ல பொருள் எதுவோ அந்தப்பொருளை அருளுவீராக. பௌவம்( bowvam) : sea;
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும் கையன் (kalluruga vEyin kaN allalpadu gO am pugal varugavE nindru kuzhalUdhum kaiyan ) : He holds the bamboo flute which he plays so sweetly as to melt the stone, and the herds of stressed cows which reached their homes listening to the blissful music (Vishnu); வேய் (vEy) : bamboo; கோ(ko) : cows;
மிசை ஏறும் உம்பன் நொய்ய சடையோன் எந்தை (misai ERum umban noyya sadaiyOn endhai) : that Vishnu (once) became a bull (Rishabha) on which our father Lord SivA, with His drooping tresses, mounted; (முன்பொரு நாள் விஷ்ணு) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான்
The axle on the chariot of Shiva broke when He neglected to pray to Ganesha before embarking on the attack on Tiripuam; Vishnu then appeared as a Bull to support Shiva) உம்பன் ( umban ) : elderly;
கை தொழ மெய் ஞானம் சொல் கதிர்வேலா (kaithozhamey nyAnamsol kadhirvElA) : and when He worshipped You with folded hands, You taught Him the True Knowledge, Oh Lord with the dazzling spear!
கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று (kollai misai vAzhgindra vaLLi punamE sendru) : You went to the millet-field where VaLLi was living, கொல்லை மிசை வாழ்கின்ற-தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த; கொல்லை = முல்லை நிலம், புன்செய் நிலம், தரிசு, தினைப்புனம்;
நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட நிலங்கள் ஐந்து வகை:
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம்,
காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை,
இவையிரண்டுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலை,
வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்,
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டன.
கொள்ளை கொளும் மாரன் கை அலராலே (koLLai koLu mAran kai alarAlE) : and were romantically affected by the flowery arrows of Manmathan (God of Love). உயிரைக் கொள்ளை கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே,
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த (koydhu thazhaiyE koNdu sellum azhavA kandha) : (as a result), You then plucked leaves and carried them to VaLLi, Oh handsome KandhA, மழவா (mazhava) : handsome, கட்டான உடலை உடைய இளைஞன்;
As described in agaththurai literature, girls living in mountains in ancient times used to weave leaves into garments and the nayakans used to present the leaves to the heroines to prove their love. Accordingly, Murugan is believed to have plucked leaves and gifted them to VaLLi.
அகப்பொருளில் “தழைகொண்டு சேறல்” என்பது ஒரு துறை. குறிஞ்சி நிலப்பெண்கள் தழையைத் தைத்து உடுப்பார்கள். அம்மாதரை விரும்பிச் செல்லும் தலைவன் சந்தனம் முதலிய தழைகளை எடுத்துக்கொண்டு செல்வான். முருகனும் அங்கனமே வள்ளிக்காக எடுத்து சென்றான்.
கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே.(kollimalai mEnindra perumALE. ) : You have Your abode at Kollimalai, Oh Great One!
சுருக்க உரை
பழம் பொருள், முதற்பொருள் எனத் தான் ஒன்றே விளங்குவதாய், சத்தி சிவம் என்னும் இரு வேறு தன்மையதாய், சொல்லப்படும் ராசத தாமத சாத்துவீக மெனப்படும் முக்குண முடிவாய் (முக்குணங்களை உடைய திரி மூர்த்திகளாய்), பரிசுத்தமான நான்கு வேதங்களாய், கொடிய புலன்கள் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஒர் ஐந்தையும், சோர்வடையச் செய்யும் பொருள் கொண்ட ஆறு அங்கம் (வேதாங்கம்) சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருள் உணர்த்துங் கருவிகளாய் விளங்குவதாய், பலப்பல ஒலிகளில் தங்குவதாய், உயிர், தளை என்பனவாய், பெருகும் தமிழிற் பொருந்தி இசை (இன்னிசை) யாய், பல உயிர்களுமாய், முடிவில்லாததாய் உள்ள ஆனந்த உருவக் கடலை அடையும்படிச் செய்ய வல்ல பொருள் எதுவோ அந்தப் பொருளை அருளுவாயாக.
Comments
Post a Comment