Posts

Showing posts from August, 2019

ஒருவரை ஒருவர் தேறி : J R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song oruvarai oruvar ( ஒருவரை ஒருவர் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "ஒருவரை ஒருவர் தேறி" என்று தொடங்கும் பழனி மலைத் திருப்பாடல். தனிமனிதத் துன்பங்கள் ஒருபுறம் இருக்க, நாகரீகம் அற்று நடக்கும் மனித சமூகம் அல்லவா நல்லவர்களைத் துன்புறுத்துகிறது என்று அங்கலாய்க்கிறர் அருணகிரியார். சமூக இடிபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார். மதம் என்ற பெயரில் மதம் கொள்வோரைச் சாடுகிறார். பாவச் சுழலிலிருந்தும், இறுதியில் பிறவிச் சுழலிலிருந்தும் விடுபடுவதற்கு ஞான ஜோதியாம் முருகனை வேண்டுகிறார்.

குரம்பை மலஜலம்: JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song kurambai malasalam ( குரம்பை மலஜலம் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "குரம்பை மலஜலம் வழுவழு நிணமொடு" என்று தொடங்கும் பழனி திருத்தலப் பாடல். அருணகிரியாரின் சரவண தரிசனம் பற்றிச் சொல்லும் அற்புதமான பாடல். அமுத முகமும், குமுத விழியும் கொண்டு, கருணா மூர்த்தியவன் அருணகிரியாருக்குக் காட்சி தருகின்றான். அந்த உன்னத தரிசனத்திற்கு முன், ஆன்மாவை மறந்த உடல் என்ற வெறும் குடிசை பற்றிச் சொல்கிறார்.குருதி, நிணம், கழிவுகள் நிரம்பிய ஒரு குடியிருப்பு அது; அங்கே புகுந்து அட்டகாசம் புரியும் ஐந்து கசடர்களாம் பொறிகள், என துன்பத்தின் நிலைக்களனைப் பற்றிச் சொல்லி எச்சரிக்கை விடுகிறார். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் முதல் பகுதி எச்சரிக்கையாகவும், பின்பகுதி நம்பிக்கை ஒளிவீசி வரும் கந்தன் கருணையாகவும் இருக்கக் காண்கிறோம். எச்சரிக்கை நிலைகுலையச் செய்கிறது; நம்பிக்கை தூக்கி நிறுத்துகிறது.

இரவியும் மதியும் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song iravium mathiyum ( இரவியும் மதியும் ) in English, click the underlined hyperlink. முன்னுரை "இரவியும் மதியும்" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். ஜாஜ்வல்யமாய் எழுகின்ற சூரியனும், அமுதம் பொழியும் சந்திரனும் விழி முன்னே பிரத்யட்சம் அல்லவா! இயற்கை எழில் எல்லாம் நிதர்சனம் அல்லவா!இவற்றோடு இயைந்த வாழ்க்கையும் நிரந்தரம் அல்லவா! அப்படியானால் அந்த வாழ்க்கை என்பதன் அர்த்தமாய் விளங்கும் குலமும் குடும்பமும் பொய்யெனத் தள்ளிவிட முடியுமோ, என மனம் இன்பங்களை எண்ணி, எண்ணிப் பார்த்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, இன்னொரு புறம் கணத்துக்குக் கணம் நம் கைவிட்டு நழுவும் காலம் சொல்லும் கதை வேறாக இருக்கிறது. இந்தக் காலத்தின் முடிவு, காலனின் வருகை என தீர்ந்து தெளிந்து விட்டால், மிச்சம் இருப்பது அச்சம் அல்லவா ! அதற்குள் எமைக் காக்க நீ வந்து விட்டால், அந்த ஞானம் தருவது எல்லையற்ற ஆனந்தம் அல்லவா ஆறுமுகா, என அருணகிரியார் உருகும் பாடல். மயில்வாகனின் மகிமைகள் சொல்லாமல் திருப்புகழ் பாடல் நிறைவு பெறுவதில்லை. இந்தப் பாடலும் விதிவிலக்கில

அபகார நிந்தை : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song abakaara ninthai ( அபகார நிந்தை ) in English, click the underlined hyperlink. அபகார நிந்தைப் பட்டுழலாதே சுவரில் எறிந்த பந்து போல் செய்த பாவம் தண்டனையாக, பழியாகத் திரும்பி வந்து தாக்கும் என்பதை இயற்கை நியதியாக வகுத்து வைத்தவனே! மனதாலும், வாக்காலும், செயலாலும் மற்றவரை வருத்தும் அபகாரம் நான் செய்துவிடாமல், பாவத்தின் நிழல் என்னைத் தீண்டி விடாமல், பழிச் சொல் ஏதும் அண்டி விடாமல் காத்து நிற்பாய் கந்தா. அறியாத வஞ்சரைக் குறியாதே விளக்கம் : பாவம் செய்யத் தூண்டுகின்ற கீழான மனிதருடன் நான் சேர்ந்து விடாமல், தற்காத்துக் கொள்ளும் பக்குவம் தருவாய். அவர்கள் அறியாதவர்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் பாதையிலிருந்து விலகும் பண்பை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.