அபகார நிந்தை : J R விளக்கவுரை
By Smt Janaki Ramanan, Pune
To read the meaning of the song abakaara ninthai (அபகார நிந்தை) in English, click the underlined hyperlink.
அபகார நிந்தைப் பட்டுழலாதே
சுவரில் எறிந்த பந்து போல் செய்த பாவம் தண்டனையாக, பழியாகத் திரும்பி வந்து தாக்கும் என்பதை இயற்கை நியதியாக வகுத்து வைத்தவனே! மனதாலும், வாக்காலும், செயலாலும் மற்றவரை வருத்தும் அபகாரம் நான் செய்துவிடாமல், பாவத்தின் நிழல் என்னைத் தீண்டி விடாமல், பழிச் சொல் ஏதும் அண்டி விடாமல் காத்து நிற்பாய் கந்தா.அறியாத வஞ்சரைக் குறியாதே
விளக்கம் : பாவம் செய்யத் தூண்டுகின்ற கீழான மனிதருடன் நான் சேர்ந்து விடாமல், தற்காத்துக் கொள்ளும் பக்குவம் தருவாய். அவர்கள் அறியாதவர்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் பாதையிலிருந்து விலகும் பண்பை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்தருள் பெறுவேனோ
இபமா முகன் தனக்கிளையோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜபமாலை தந்த சற்குருநாதா
திருவாவினன்குடிப் பெருமாளே
Comments
Post a Comment