Posts

Showing posts from April, 2022

பன்னிரு சைவம் மற்றும் முருகவேள் திருமுறைகள்

Image
சைவத் திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் தமிழ் சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள். இவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது இவற்றை தொகுத்தவர் திருநாரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இவர் மன்னனின் வேண்டுகோளின் பேரில் சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

ஆதிமூலமே என்று கஜேந்திரன் அலறிய பொழுது ....

To read the story in English, click Story of Gajendra and Lord Vishnu பாற்கடலால் சூழப்பட்ட பர்வதம் த்ரிகூடம். அம்மலையின் அடிவாரத்தில் வருணன் உருவாக்கிய ருதுமத் என்ற ஒரு அழகிய தோட்டம். அதன் அருகில் மிக அழகிய குளம். அங்கு கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் பெண் யானைகளுடனும் குட்டிகளுடனும் வசித்து வந்தது. முற்பிறவியில் அந்த யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யுனாக பிறந்து மஹாவிஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது காண வந்த அகத்திய முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிட்டான். அதனால் கோபமடைந்த அகத்தியர், தன்னை மதிக்காமல் மதம் கொண்டு நடந்தலால் மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே அருளி, ஸ்ரீமந் நாராயணனே அவன் சாபத்தை தீர்ப்பார் என்று வரம் கொடுத்தார்.