Posts

Showing posts from January, 2019

அற்றைக் கிரை — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song atraikku irai ( அற்றைக் கிரை ) in English, click the underlined hyperlink. முன்னுரை "அற்றைக் கிரை தேடி" என்று தொடங்கும் காஞ்சி மாநகர் திருத்தலப் பாடல். எளிமை போல் தோன்றும் வலிமையான பாடல். ஞானச் சாற்றினை அல்லவா பிழிந்து தருகிறார்! அது அருணகிரிநாதரின் அனாயாசம். சுற்றி வளைக்காமல், முதிர்ந்த, முழுமையான வெற்றிக் கனி பறிக்க வேலனை வேண்டும் பாடல். இகத்திலிருந்து பரத்துக்கு ஏற்றிவிடும் பாடல். இப்படித் திருப்புகழ் எங்கும் மணம் மிகுந்த ஞானப் பூக்களைத் தூவி விடுகிறார் அருணகிரிநாதர். நம் மனதும் மணம் பெறுமோ!

நச்சரவ மென்று — JR விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song nachcharava mendru ( நச்சரவ மென்று ) in English, click the underlined hyperlink. முன்னுரை "நச்சரவ மென்று" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். மற்றுமொரு அகத்துறைப் பாடல். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனைத் தலைவனாகவும், முருக பக்தனை தலைவியாகவும் உருவகம் செய்துச் செந்தமிழ்த் தேனாய் மலரும் திருப்புகழ் பாடல். முருகனுக்காக பக்தன் ஏங்கும் ஏக்கத்தை ஓரளவுக்குக் காட்டுகின்ற வழிமுறை தான் இந்த அகத்துறை. சிற்றின்பம் சொன்னால் "சட்"டெனப் புரிந்துவிடுவதாலே இதைச் சொல்லிப் பேரின்ப நிலைக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி. திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னால் தானே மனித மனம் திருந்துகிறது! அதனால், வெவ்வேறு பாடல்களில், வெவ்வேறு விதமாகச் சொல்கின்ற நயம்.