306. ஈயெறும்பு நரி

ராகம்: மத்யமாவதி தாளம்: சதுஸ்ர த்ரிபுடை 1½ + 1½ + 1 (4 களை — 32)
ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமதவும்பல்போலே
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில
ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச னங்கள்பேசிச்
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லூத தண்டிகையி லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனது பாத தொண்டனெனஅன்புதாராய்

305. அருவரை எடுத்த

ராகம் : சரஸ்வதி தாளம்: அங்கதாளம் 2 + 2 + 1½ (5½)
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
மரனிட மிருக்கு மாயியருள்வோனே
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
மணிமயில் நடத்து மாசை மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
னிருகர மிகுத்த பாரமுருகாநின்
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவு மெனக்கு ஞானம் அருள்வாயே

304. தாமரையின் மட்டு

ராகம் : தர்பாரி கானடா தாளம்: ஆதி
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பிலடியேனைத்
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தியவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென்மனதாசை
மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்தமறவேனே

303. குருதி கிருமிகள்

ராகம் : கேதாரம் தாளம்: அங்கதாளம் 1½ + 2 + 2 + 2 (7½)
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலவு பலபணி பரிமள மறசுவைமடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமலமொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகிய
தொலைவி லுனைநினை பவருற வலதினி யயலார்பால்
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
முறவு மலமல மருளலை கடல்கழி
துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற அருள்வாயே

302. என்னால் பிறக்கவும்


ராகம் : பேகடாதாளம்: ஆதி
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும்பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும்தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்இங்குநானார்

301. அரி மருகோனே

ராகம் : கேதாரம் தாளம்: சதுச்ர ரூபகம்
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
றறுமுக வேளே நமோவென்றுனபாதம்
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருண சொரூபா நமோவென்றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம்பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம்பெறவேணும்

300. அரியயனறியா

ராகம் : ரேவதி தாளம்: ஆதி
அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையேவியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியேவியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமாறருள்வாயே

299. அணிசெவ்வியார்


ராகம் : மோகனம் தாளம்: அங்கதாளம் 2½ + 2 + 2 (6½)
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிடரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோஇன மானவையறியேனே
குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறுகுணசாத
குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல்ல வாசிவ னேசிவகுருநாதா

298. சிகர மருந்த


ராகம்: பந்துவராளிதாளம்: அங்கதாளம் (8½)
2+ 1½ + 2 + 3
சிகர மருந்த வாழ்வதுசிவஞானம்
சிதறி யலைந்து போவதுசெயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்தி டாவருள்புரிவாயே
அகர நெருங்கி னாமயமுறவாகி
அவச மொடுங்கை யாறொடுமுனமேகிக்
ககன மிசைந்த சூரியர்புகமாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே.

297. பரவு நெடுங்கதிர்

ராகம் : தேவமனோஹரி தாளம்: ஆதி
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படியதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்ததுநிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பதமதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு மருள்வாயே

296. நீதத்துவமாகி


ராகம் : ஷண்முகப்ரியா  தாளம் : சங்கீர்ண சாபு 2 + 2½ (4½)
நீதத் துவமாகி
நேமத் துணையாகிப்
பூதத் தயவான
போதைத் தருவாயே

295. கலைமேவு ஞான

ராகம்: மோகனம் தாளம்: சதுச்ர ஜம்பை 2½ + 1½ + 3 (7)
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத்தருவாயே

294. ஆனைமுகவற்கு


ராகம்: நீலாம்பரிதாளம்: ஆதி 2 களை
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்தகமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்தகுருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்ததிறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்கஅருள்வாயே

293. சயிலாங்கனைக்கு

ராகம்: பூர்வி கல்யாணிதாளம்: அங்கதாளம் (15)
2½ + 1½ + 1½ + 2 + 1½ + 1½ + 1½ + 3
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர்வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர்உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்தவுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்குறையுமோதான்

292. குதிபாய்ந்துராகம் : கல்யாணி தாளம் : அங்கதாளம் (15)
(2½ + 1½ + 1½ + 2 + 1½ + 1½ + 1½ + 3
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்துசுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கைவிதகீத
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்றுதருவாயே

Sivam in Thiruppugazh–Part 1

What is the goal of Bhakti? The ultimate goal of bhakti is to help the individual soul to merge itself in the Supreme Soul or Paramatman tha...

Popular Posts